இலக்கணச் சுருக்கம்

தன்மைப்பெயர்கள்
191. தன்மைப்பெயர்கள், நான், யான், நாம், யாம், என நான்காம். இவைகளுள் நான், யான் இவ்விரண்டும் ஒருமைப்பெயர்கள்: நாம், யாம் இவ்விரண்டும் பன்மைப் பெயர்கள்.
இத்தன்மைப் பெயர்கள் உயர்திணையாண்பால் பெண்பால்களுக்குப் பொதுவாகி வருவனவாகும்.
உதாரணம்.
யானம்பி, யானங்கை - தன்மையொருமை
யாமைந்தர், யாமகளிர் - தன்மைப் பன்மை
உலக வழக்குச் செய்யுள் வழக்கிரண்டினும், நாம், யாம், இரண்டும். நாங்கள், யாங்கள் எனவும் வரும்.
-
தேர்வு வினாக்கள்
191. தன்மைப் பெயர்கள் எவை? இவைகளுள் எவை ஒருமைப் பெயர்கள்? எவை பன்மைப் பெயர்கள்? இத்தன்மைப் பெயர்கள் திணைபால்களுள் எவைகளுக்குப் பொதுவாகி வருகின்றன?
முன்னிலைப் பெயர்கள்
192. முன்னிலைப் பெயர்கள், நீ, நீர், நீயிர், நீவிர், எல்லீர் என ஐந்தாம். இவைகளுள், நீ என்பது ஒருமைப் பெயர்: மற்றவை பன்மைப் பெயர்கள்.
உதாரணம்.
நீ நம்பி, நீ நங்கை, நீ பூதம்
- முன்னிலையொருமை
நீர் மைந்தர், நீர் மகளிர், நீர் ப10தங்கள்
- முன்னிலைப்பன்மை
w தன்மைப் பெயர்களை உயர்திணைப் பெயர்கள் என்பர் தொல்காப்பியர்; இரு தியைப் பொதுப் பெயர்கள் என்பர் நன்னூலார்.
இரு வழக்கினும் நீங்கள் என்பதும் முன்னிலைப் பன்மையில் வரும்.
-
தேர்வு வினாக்கள்
192. முன்னிலைப் பெயர்கள் எவை? இவைகளுள், எது ஒருமைப்பெயர்? எவை பன்மைப் பெயர்? இம் முன்னிலைப் பெயர்கள் திணை பால்களுள் எவைகளுக்குப் பொதுவாகி வருகின்றன?
படர்க்கைப் பெயர்கள்
193. படர்க்கைப் பெயர்கள், மேற்சொல்லப்பட்ட தன்மை முன்னிலைப் பெயர்களல்லாத மற்றைய எல்லாப் பெயர்களுமாம்.
உதாரணம்.
அவன், அவள், அவர், பொன், மணி, நிலம்
---
194. அன். ஆள், இ, ள் என்னும் விகுதிகளை இறுதியில் உயுடைய பொயர்கள் உயர்திணையாண்பாலொருமைப் படர்க்கைப் பெயர்களாம்.
உதாரணம்.
பொன்னன், பொருளான், வடமன், கோமன், பிறன்
195. அள், ஆள், கள், மார், ர், என்னும் விகுதிகளை இறுதியில் உயுடைய பொயர்கள் உயர்திணைப் பெண்பாலொருமைப் படர்க்கைப் பெயர்களாம்.
உதாரணம்.
குழையள், குழையாள், பொன்னி, பிறள்
196. அர், ஆர், கள், மார், ர், என்னுதம் விகுதிகளை இறுதியில் உயுடைய பொயர்கள் உயர்திணைப் பலர்பாற் படர்க்கைப் பெயர்களாம்.
உதாரணம்.
குழையர், குழையார், கோக்கள், தேவிமார், பிறர்
தச்சர்கள், தட்டார்கள், எனக் கள் விபுதி, விகுதிமேல் விகுதியாயும் வரும்.
197. துவ் விகுதியை இறுதியில் உடைய பெயர்கள் அஃறிணையொன்றன் பாற் படர்க்கைப் பெயர்களாம்.
உதாரணம்.
குழையது
---
198. வை, அ, கள், வ், என்னும் விகுதிகளை இறுதியில் உடைய பெயர்கள் அஃறிணைப் பலவின்பாற் படர்க்கைப் பெயர்களாம்.
உதாரணம்.
குழையவை, குழையன, மரங்கள், அவ்.
---
199. விகுதி பெறாது உயர்திணை அஃறிணைகளில் ஆண்பால் பெண்பால்களை உணர்த்தி வரும் பெயர்களுஞ் சில உண்டு. அவை வருமாறு:-
நம்பி, விடலை, கோ, வேள், ஆடூஉ, முதலியன உயர்திணையாண்பாற் பெயர்கள்.
மாது, தையல், மகடூஉ, நங்கை முதலியன உயர்திணைப் பெண்பாற் பெயர்கள்.
கடுவன், ஒருத்தல், போத்து, கலை, சேவல், ஏறு முதலியன அஃறிணையாண்பாற் பெயர்கள்
பிடி, பிண, பெட்டை, மந்தி, பிணா முதலியன பெண்பாற் பெயர்கள்.
-
தேர்வு வினாக்கள்
193. படர்க்கைப் பெயர்கள் எவை?
194. உயர்திணையாண்பா லொருமைப் படர்க்கைப் பெயர்கள் எவை?
195. உயர்திணைப் பெண்பா லொருமைப் படர்க்கைப் பெயர்கள் எவை?
196. உயர்திணைப் பலர்பாற் படர்க்கைப் பெயர்கள் எவை?
197. அஃறிணையொன்றன்பாற் படர்க்கைப் பெயர்கள் எவை?
198. அஃறிணைப் பலவின்பாற் படர்க்கைப் பெயர்கள் எவை?
199. விகுதி பெறாது உயர்திணை அஃறிணைகளில் ஆண்பால் பெண்பால்களை உணர்த்தி வரும் பெயர்களும் உண்டோ?
-----
இருதிணைப் பொதுப் பெயர்
200. தந்தை, தாய்; சாத்தான். சாத்தி; கொற்றன், கொற்றி; ஆண், பெண்; செவியிலி, செவியிலிகள்; தான், தாம் என வரும் படர்க்கைப் பெயர்கள் உயர்திணை அஃறிணை இரண்டற்கும் பொதுப் பெயர்களாம். பொதுப் பெயரெனினும், பொருந்தும்.
உதாரணம்.
தந்தையிவன்
தந்தையிவ்வெருது தந்தையென்பது இருதிணை யாண்பாற்கும் பொதுவாயிற்று.
தாயிவள்
தாயிப்பசு தாயென்பது இருதிணை பெண்பாற்கும் பொதுவாயிற்று.
சாத்தனிவன்
சாத்தனிவ்வெருது சாத்தானென்பது இருதிணை யாண்பாற்கும் பொதுவாயிற்று.
சாத்தியிவள்
சாத்தியிப்பசு சாத்தியென்பது இருதிணை பெண்பாற்கும் பொதுவாயிற்று.
கொற்றனிவன்
கொற்றனிவ்வெருது கொற்றனென்பது இருதிணை யாண்பாற்கும் பொதுவாயிற்று.
கொற்றியிவள்
கொற்றியிப்பசு கொற்றியென்கது இருதிணை பெண்பாற்கும் பொதுவாயிற்று.
ஆண் வந்தான்
ஆண்வந்தது ஆணென்பது இருதிணை யாண்பாற்கும் பொதுவாயிற்று.
பெண் வந்தாள்
பெண்வந்தது பெண்னென்பது இருதிணை பெண்பாற்கும் பொதுவாயிற்று.
செவியிலியவன்
செவியிலியிவள்
செவியிலியிவ்வெருது
செவியிலியிப்பசு செவியிலி என்பது இருதிணை யெருமைக்கு பொதுவாயிற்று.
செவியிலிகளிவர்
செவியிலிகளிவை செவியிலிகளென்பது இருதிணைப் பன்மைக்கு பொதுவாயிற்று.
அவன்றான்
அவடான்
அதுதான் தானென்பது இருதிணை யொருமைக்கும் பொதுவாயிற்று.
அவர்தம்
அவைதம் தாமென்பது இருதிணைப் பன்மைக்கு
பொதுவாயிற்று.
தாம் என்பது தாங்கள் எனவும் வரும்.
-
தேர்வு வினா
200. உயர்திணை அஃறிணை இரண்டற்கும் பொதுப் பெயர்கள் எவை?
இரு திணை மூவிடப் பொதுப்பெயர்
201. எல்லாம் என்னும் பன்மைப் பெயர் இரு திணை மூவிடங்கட்கும் பொதுப்பெயரம்.
உதாரணம்.
நாமெல்லாம், நீரெல்லாம், அவரெல்லாம், அவையெல்லாம்.
-
தேர்வு வினா
201. எல்லாம் என்னும் பன்மைப் பெயர் எவைகளுக்குப் பொதுப்பெயர்?
உயர்திணையிற் பாற் பொதுப்பெயர்
202. ஒருவர் பேதை, ஊமை, என வரும் பெயர்கள் உயர்திணையான் பெண்ணென்னும் இரு பாற்கும் பொதுப் பெயர்களாம்.
உதாரணம்.
ஆடவளொருவர் பெண்டிளொருவர்
பேதையவன் பேதையவள்
ஊமையிவன் ஊமையிவள்
ஒருவர் என்னும் பாற்பொதுப்பெயர், பொருட்கேற்ப ஒரமைச் சொல்லைக் கொள்ளாது, ஒலுவர் வந்தார் எனச் சொற்கேற்பப் பன்மைச் சொல்லையே கொண்டு முடியும். இன்னுஞ் சாத்தனார், தேவனார் என்பனவும், பொருட்கேற்ப ஒருமைச் சொல்லைக் கொள்ளாது, சொற்கேப்பப் பன்மைச் சொல்லையே கொண்டு முடியும்.
-
தேர்வு வினா
202. உயர்திணை ஆண் பெண் என்னும் இரு பாற்கும் பொதுப் பெயர்கள் எவை?
-----
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 17 | 18 | 19 | 20 | 21 | ... | 45 | 46 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இலக்கணச் சுருக்கம், Ilakkana Surukkam, Grammar's, இலக்கணங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள்

