தூத்துக்குடி - தமிழக மாவட்டங்கள்
பேரூர் :
விவசாய செழிப்பு உள்ள ஊர். திருச்செந்தூர் கோயிலுக்கு சொந்தமான நிலங்களும், களஞ்சியமும் இவ்வூரில் உள்ளன.
வல்லநாடு :
மஞ்சளுக்கு புகழ் பெற்றது. நெல்லும், காய்கறிகளும் மிகுதி. நூல் நூற்பு, செங்கல் தொழிற்சாலையும் இங்குள்ளது.
பெரியதாளை :
கிருத்துவர்கள் நிறைந்த மீன்பிடி கிராமம்.
பரமன் குறிப்பு :
கருப்பட்டி உற்பத்திஉள்ள ஊர்.
மணப்பாடு |
மக்கள் அனைவரும் கிருத்துவர்கள். மணல் அரிப்பைத் தடுக்க தடுப்புச் சுவர் கட்டப்பட்டுள்ளது. மீன்பிடிப்பு முக்கியத் தொழில். பனை ஓலையிலிருந்து பலவித பொருள்கள் இங்குச் செய்யப்படுகின்றன. தேவாலயத்திலுள்ள பலிபீடம் இத்தாலிய பளிங்குக் கல்லால் அமைக்கப்பட்டுள்ளது.
புன்னைக் காயல் :
புன்னை மரங்கள் நிறைந்த கடற்பகுதியாதலால் இப்பெயர் பெற்றது. கிருத்துவத்தின் வளர்ச்சி காரணமாக கல்வி, மருத்துவ மனைகள் வளர்ந்துள்ளன. முதல் கத்தோலிக்க தேவாலயம் 1551-இல் கட்டப்பட்டது.
நாசரேத் :
கிருத்தவ தேவாலயம் உள்ளது. கிருத்துவர்கள் நிறைந்த ஊர். பழங்காலப் பெயர் சாணார் பத்து.
ஸ்ரீவைகுண்டம் |
தூத்துக்குடி சாலைக்கு வடக்கே கயிலாயபுரமும், தெற்கே வைகுண்டபதியும் உள்ளன. நலதிருப்பதிகளில் ஒன்று. பெருமாள் பெயர் கள்ளபிரான். சிற்பக்கலை சிறப்புடன் இக்கோயில் விளங்குகிறது. திருவேங்கடமுடையார் மண்டபத்தின் கதவுகள் ஏகாதேசி அன்று மட்டுமே திறக்கின்றன. கட்டபொம்மு போரில் இக்கோயில் கோட்டையாகப் பயன்படுத்தப்பபட்டது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
தூத்துக்குடி - Thoothukkudi - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - தூத்துக்குடி, tamilnadu, மாவட்டங்கள், தமிழக, நிறைந்த, கிருத்துவர்கள், தகவல்கள், தமிழ்நாட்டுத், பெயர், | , இக்கோயில், ஸ்ரீவைகுண்டம், தேவாலயம், information, thoothukkudi, districts, பெற்றது, மணப்பாடு