தூத்துக்குடி - தமிழக மாவட்டங்கள்
தூத்துக்குடி துறைமுகம் :
இது ஒரு இயற்கைத் துறைமுகம். மன்னார் வளைகுடா அருகே இது அமைந்துள்ளது. இப்பகுதி புயல் கிளம்ப முடியாத பூகோள அமைப்பைக் கொண்டுள்ளது. இங்குத் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்தும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளிலிருந்தும் வரக்கூடிய கப்பல்களுக்கு இந்தியாவின் வாயிலாக விளங்குகிறது. 1963-ஆம் ஆண்டு 5 கோடி ரூபாய் அனுமதியோடு ஆழ்கடல் துறைமுக அமைப்பு தொடர்ந்தது. கடல் அரிப்பை தடுக்க வடபுறச்சுவர் 4103 மீ நீளம் கொண்டது. இது உலகத்திலேயே அதிக நீளமான அலைத் தடுப்புச் சுவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. 1974-ஆம் ஆண்டு ஸ்பிக் உரத் தொழிற்சாலையின் அத்தியாவசியத் தேவைகளை இறக்குமதி செய்ய 125 இலட்ச ரூபாய் செலவில் எண்ணெய்த் துறை ஒன்று இங்கே ஏற்படுத்தப்பட்டது. 1975 முதல் 84 வரை 6 கப்பல்கள் தங்குவதற்கான
தூத்துக்குடி துறைமுகம் |
மணிக்கு 700 லி பெட்ரோலிய எண்ணெப் பொருள்களை இறக்குமதி செய்ய 'மெரைன் அன்லோடிங் ஆர்மஸ்' என்ற சிறப்புக் கருவிகள் இத்துறைமுகத்தில் அமைக்கப்பட்டுள்ளன. 600 அடி முகத்துவாரத்தோடும், ஆறுபக்கவாட்டுத் தளங்களோடும் திகழும் இத்துறைமுகம் சரக்குகள் ஏற்றுமதி இறக்குமதி வசதிக்காக 23 கிரேன்களும், 18 போர்க்லிப்ட் கருவிகளும், 4 பிரும்மாண்டமான சரக்கு லாரிகளும், 4 ரயில் என்ஜின்களும், சுமார் 50 ஆயிரம் டன்கள் சரக்குகள் வைப்பதற்குரிய பாதுகாப்புக் கிட்டங்கிகளும் கொண்டுள்ளது. துறைமுகத்தின் வருமானம் இன்று 30 கோடிக்கு மேல் வளர்ந்துள்ளது.
முத்துக்குளித்தல் :
1955-இலிருந்து தூத்துக்குடியில் முத்துக் குளிப்பு சிறப்பாக நடைபெறுகிறது. 2000 பேருக்கு மேல் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். செப்டம்பர் முதல் மே மாதம் வரை முத்துக் குளிப்பில் ஈடுபடுகின்றன. மற்ற நாட்களில் ஒரு வித சொறி ஏற்படுகிறது. இங்கு எடுக்கப்படும் முத்துக்கள் தரத்துடன், நல்ல எடையை கொண்டதாகும். இதனால்
அந்நியச் செலாவணி கிடைக்கிறது.
சங்கு எடுத்தல் :
முத்துக் குளிப்பு நடைபெறாத மாதங்களில் சங்கெடுப்பில் ஈடுபடுகின்றனர் 100 அடி ஆழம் சென்று சங்கு எடுக்கப்படுகிறது. அரசாங்கத்தின் நேரடிப்பார்வையில் சங்கு எடுப்பவர்களும், சங்கு படிந்து கிடக்கும் இடங்களைக் காட்டுபவர்களும் பணியாற்று கின்றனர். உயர்தரச் சங்கை 'ஜாதிச்சங்கு' என்பர். இது பெரியளவில் கிடைக்கிறது. வலம்புரிச்சங்கு எப்போதாவது கிடைக்கும். இடிந்தகரை, உவரி, புன்னைக் காயல் முதலிய இடங்களில் சங்கு எடுக்கப்படுகிறது.
ஸ்பிக் உரத் தொழிற்சாலை :
தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்பிக் உரத்தொழிற்சாலை 1975-ஆம் ஆண்டிலிருந்து உற்பத்தியைத் தொடங்கியுள்ளது. இன்று யூரியா உற்பத்தியில் 100 வீதத்தை அடைந்துள்ளது. இங்கு தயாரிக்கப்படும் உரத்தின் அளவு இந்திய அளவில் 25% ஆகும்.
கோவில்பட்டி :
மக்கள் கோவில் கட்டி குடியேறியதால் இப்பெயர் பெற்றது. விருதுநகர்-மணியாச்சி இரயில் பாதையில் அமைந்துள்ள முக்கிய நகரம். இவ்வூரில் இரண்டு பெரிய நூற்பாலைகளும், பருத்தி அறைக்கும் தொழிற்சாலையும் ஏராளமான தீப்பெட்டித் தொழிற்சாலைகளும் உள்ளன. இங்குள்ள வேளாண்மை ஆராய்ச்சிப் பண்ணை விவசாய வளர்ச்சிக்குப் பணியாற்றுகின்றது. உருட்டுக் கம்பி முதலிய எஃகுப் பொருள்கள் செய்யும் நிறுவனமும் உள்ளது. திங்கள் சந்தை கூடுகிறது. கருவாட்டு வியாபாரத்தில் இவ்வூர் சிறந்து விளங்குகிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான கண்டிப் பருத்தி கோவை, மதுரை மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகிறது. விளையாட்டுத் துறையில் இவ்வூர் சிறந்து விளங்குகிறது. சிறப்பாகச் சிலம்பத்திற்கு பெயர் பெற்றது.
எட்டையபுரம் :
எட்டையபுரம் |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | ... | 11 | 12 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தூத்துக்குடி - Thoothukudi - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - தூத்துக்குடி, சங்கு, தமிழக, இவ்வூர், tamilnadu, இறக்குமதி, மாவட்டங்கள், ஸ்பிக், முத்துக், இங்கு, பெற்றது, பருத்தி, ஆண்டு, விளங்குகிறது, தமிழ்நாட்டுத், துறைமுகம், தகவல்கள், எடுக்கப்படுகிறது, பாரதியார், கிடைக்கிறது, | , முதலிய, சந்தை, எட்டையபுரம், சிறந்து, அமைந்துள்ள, அறைக்கும், மணிக்கு, நாடுகளிலிருந்தும், ரூபாய், கொண்டுள்ளது, information, thoothukudi, districts, உரத், செய்ய, மேல், தூத்துக்குடியில், இன்று, சரக்குகள், துறை, நிலக்கரி, குளிப்பு