தூத்துக்குடி - தமிழக மாவட்டங்கள்
திம்மராஜபுரம் :
இவ்வூர் மல்லிகைப்பூ, சிவந்திப்பூ, பிச்சிப்பூ, ரோஜாப்பூ ஏற்றுமதியில் புகழ் பெற்று விளங்குகிறது.
நாலாட்டின் புதூர் :
பருத்தி விளைச்சல் மிகுதி. பருத்தி அரைக்கும் இயந்திரங்கள் பல உள்ளன.
விளாத்திக் குளம் :
வட்டத் தலைநகர். இவ்வூரில் நெசவுத் தொழிலும் சாயத் தொழிலும் சிறப்புற நடந்து வருகிறது. கட்டமொம்முவுடன் தூக்கிலிடப்பட்ட வீரகஞ் செயதுரையும், இசையுலக மேதை விளாந்திக் குளம் - மலையப்பசுவாமிகளும் இந்த ஊர் பெருமக்கள்.
வேம்பார் :
கத்தோலிக்கர் நிறைந்த கடற்கரையோர ஊர். கருப்பட்டி காய்சும் தொழிலால் இவ்வூர் புகழ் பெற்றது.
பாஞ்சாலங்குறிச்சி |
வெள்ளையரை எதிர்த்து நின்ற பாளையக்காரன் கட்டபொம்மு வாழ்ந்த இடம். 1755-1800 வரை பல போர்களை கண்ட ஊர். இங்குள்ள கோட்டை வெள்ளையர்களால் இடிக்கப்பட்டது. கட்டமொம்முவை நினைவு கூறும் முகமாக தமிழக அரசால் இங்கு சிறுகோட்டை வடிவில் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. அருகில் பழைய கோட்டையின் சிதலங்களைக் காணலாம்.
மணியாச்சி :
விருது நகர் - தூத்துக்குடி வழியில் உள்ள இரயில் சந்திப்பு. இங்கு சைவ ஆதின மடம் உள்ளது. கலெக்டர் ஆஷ்துரையை வாஞ்சி நாதன் கட்டுக் கொன்ற இடம் என்பதால், சுந்திரப்போராட்ட காலத்தில் புகழ்பெற்று விளங்கியது.
புதூர் :
நாகலாபுரத்திலிருந்து 6 கி.மீ அருப்புகோட்டை இரயில் பாதையில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு உளுந்தும், மல்லியும், வெளியூர்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
பெருநாழி :
கடற்கரை ஊர். அழகான இடம். நீர் வளத்தால் நெல்லும் மணிலாவும் நன்றாக விளைகின்றன.
நாகலாபுரம் :
கட்டபொம்மக்கு உதவிய காரணத்தால் இவ்வூர் பாளையக்காரர் சாகும் வரை சென்னையில் அடைக்கப்பட்டிருந்தார். இங்கு வியாழக்கிழமை சந்தை. இவ்வூரிலிருந்து தான் முதன்முதலாக பகலுணவுத் திட்டம் தொடங்கப்பட்டது.
முடிசூடிவைத்தானேந்தல் :
இவ்வூர் வேளாளர்களே பாண்டியர்களுக்கு முடி சூடுவார்களாம். அதன் காரணத்தாலே இவ்வூர் இப்பெயர் பெற்றது. இங்குள்ள சமண மேட்டில் சமண உருவச்சிலைகள் உள்ளன. பழைய கோட்டை ஒன்றின் சிதைந்த பகுதிகள் காணப்படுகின்றன.
பெருங்குளம் :
குளந்தை என்பது பழைய பெயர். தமிழின் முதல் நாவல்களில் ஒன்றாக 'பத்மாவதி சரித்திரம்' எழுதிய மாதவய்யா இவ்வூரை வைத்தே நாவலைப் படைத்ததாகக் கூறப்படுகிறது. நவதிருப்பதிகளில் ஒன்று. சிவ, விஷ்ணு கோயில்கள் உண்டு. பெருமாளுக்கு-மாயக்கூத்தர் என்றும்; சிவனுக்கு உத்தர வழுதீசுவரர் என்றும் பெயர். சிவன் கோயிலில் சங்கப் புலவர் 49 பேரின் சிலைகள் உள்ளன.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தூத்துக்குடி - Thoothukkudi - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - இவ்வூர், தமிழக, தூத்துக்குடி, tamilnadu, மாவட்டங்கள், இங்கு, பழைய, தகவல்கள், இடம், தமிழ்நாட்டுத், கோட்டை, இங்குள்ள, | , என்றும், பெயர், இரயில், பருத்தி, information, districts, thoothukkudi, புகழ், புதூர், பெற்றது, தொழிலும், குளம், பாஞ்சாலங்குறிச்சி