தூத்துக்குடி - தமிழக மாவட்டங்கள்
ஆற்றுர் :
தாமிரபரணியாறு இவ்வூருக்கருகில் கடலுடன் கலக்கிறது. தை, ஆடி அமாவாசைகளில் மக்கள் இங்கு நீராடுவார்கள். தொல்காப்பியத்தின் சொல்லதிகாரத்திற்கு உரை எழுதிய சேனாவரையர் இவ்வூர்காரர். அவர் அளித்த கொடை விபரங்கள் இங்குள்ள பெருமாள் கோவில் உள்ளது. இங்கு நெல், வாழை, கொடிக்கால் மிகுதி.
ஆலந்தலை :
மீன்பிடி தொழிலால் சிறந்து விளங்குகிறது. அனைவரும் கிருத்தவ மதத்தினர். இது ஒரு காலத்தில் டச்சுக்காரர்களுடன் மிகுந்த தொடர்பு கொண்டிருந்த ஊராகும்.
ஆறுமுக நேரி :
இவ்வூருக்குத் தூத்துக்குடி-திருச்செந்தூர் நெடுஞ்சாலை வழியாகச் செல்லலாம். கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ளது. தமிழ் நாட்டிலேயே அதிக உப்பு விளையும் இடங்களில் இதுவும் ஒன்று. உப்பள ஊழியர் கூட்டுறவுச் சங்கம், சிறப்பாக இயங்கி வருகின்ற காரணத்தால், உப்பு வணிகமும் செழிப்பாக நடைபெறுகிறது; பெருமளவு கேரளாவுக்கும், ஆந்திராவுக்கும் ஏற்றுமதியாகிறது.
ஆழ்வார் திருநகரி :
ஸ்ரீவைகுண்டம்-நாசரேத் இரண்டிற்கும் நடுவே அமைந்துள்ள இரயில் நிலையம். இது புகழ்பெற்ற வைணவத்தலம். இவ்வூர் சிறந்த வியாபாரத் தலமாகவும் விளங்குகிறது.
ஆதிச்ச நல்லூர் :
பாளையங்கோட்டை-ஸ்ரீவைகுண்டம் சாலையில் இவ்வூர் உள்ளது. 1876-இல் தொல் பொருள் துறையினரால் பெரிய தாழிகள் போர்க்கருவிகள், பாத்திரங்கள், பெட்டிகள், நகைகள், எலும்புக் கூடுகள் முதலியன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பண்டைய நாகரிக வளர்ச்சியை அறிந்து கொள்ள ஆதிச்ச நல்லூர் அரியதோர் இடமாக விளங்குகிறது. மொகஞ்சதாரோ - ஆதிச்ச நல்லூர் கால முதுமக்கள் தாழிகளை ஒப்பிடும் போது ஆதிச்ச நல்லூர் கால நாகரிகமே முற்பட்டது என்று அறிவித்துள்ளனர். தொல்பொருள் விருப்பம் உள்ள சுற்றுலாவினர் காணத்தக்க ஊர்.
ஈரால் :
எட்டையபுரத்திற்கு தெற்கில் உள்ள ஊர். பருத்தி, கம்பு, மிளகாய் சிறப்புப்பயிர்கள். பருத்தியும், மிளகாயும் இங்கிருந்து ஏற்றுமதியாகின்றன. பருத்தி அறைக்கும் ஆலைகள் மிகுதி. திருக்குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகரின் சமாதி இவ்வூரில் உள்ளது.
ஈராச்சி :
இவ்வூர் கைத்தறிக்கு புகழ்பெற்றது. சுற்றுவட்டாரங்களில் கூடும் சந்தைகளில் இவ்வூர் துணிகள் வாங்கப்படுகின்றன.
ஏரல் :
இது ஒரு நகரப் பஞ்சாயத்து. தாமிரபரணியின் வடகரையில் அமைந்துள்ள இவ்வூர் வாணிகச் சிறப்பு பெற்றது. கதர் உற்பத்திக்கும், வெண்கலப் பாத்திர தொழிலுக்கும் பெயர் பெற்ற இடம்.
உடன் குடி :
உடன்குடி நகர பஞ்சாயத்து. ஊராட்சி ஒன்றியத்தின் தலைமையிடம். திங்கட் கிழமை சந்தை கூடுகிறது. பனைமரப் பொருட்கள், வெற்றிலைக் கொடிக்கால்கள் அதிகம். பனைவெல்லம் காய்ச்சுதல் இவ்வூரின் சிறப்புத்தொழில். பனைவெல்ல ஆராய்ச்சி நிலையம் ஒன்று உள்ளது. பாய்முடைதல், வெங்காயக்கூடு முதலியவை முக்கியத் தொழில்கள். முஸ்லீம் மக்கள் அதிகம் வாழ்கின்றனர்.
காயல்பட்டினம் :
காயல்பட்டினம் |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 5 | 6 | 7 | 8 | 9 | ... | 11 | 12 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தூத்துக்குடி - Thoothukudi - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - தூத்துக்குடி, இவ்வூர், நல்லூர், ஆதிச்ச, உள்ளது, இங்கு, tamilnadu, தமிழக, மாவட்டங்கள், தகவல்கள், விளங்குகிறது, தமிழ்நாட்டுத், பருத்தி, உள்ள, | , வியாபாரமும், காயல்பட்டினம், துறைமுகமாக, நிலையம், இவ்வூரின், அதிகம், பஞ்சாயத்து, உப்பு, மக்கள், எழுதிய, information, districts, thoothukudi, இங்குள்ள, மிகுதி, ஸ்ரீவைகுண்டம், சிறப்பாக, ஒன்று, அமைந்துள்ளது, அமைந்துள்ள