தூத்துக்குடி - தமிழக மாவட்டங்கள்
தலைநகரம் : | தூத்துக்குடி |
பரப்பு : | 4,745 ச.கி.மீ |
மக்கள் தொகை : | 1,750,176 (2011) |
எழுத்தறிவு : | 1,349,697 (86.16 %) |
ஆண்கள் : | 865,021 |
பெண்கள் : | 885,155 |
மக்கள் நெருக்கம் : | 1 ச.கீ.மீ - க்கு 369 |
வரலாறு :
(திருநெல்வேலி மாவட்டத்தில் பார்க்க)
போர்ச்சுக்கீசியர்களும், டச்சுக்காரர்களும் :
கி.பி. 1532-இல் முதன் முதலாக போர்ச்சுக்கீசியர்கள் இம்மாவட்டத்தில் கால் வைத்தனர். 1658-இல் டச்சுக்காரர்கள் வந்ததனால் போர்ச்சுகல் ஆதிக்கம் அகன்றது. பாளையக்காரர் களின் அழைப்பின் பேரிலும், திருவாங்கூர் மன்னரின் படை உதவியுடனும், டச்சுக்காரர் கள் முன்னேறத் தொடங்கினர். முகம்மது யூசுப் படைதிரட்டுவதை கேள்விப்பட்டதும் டச்சுக்காரர்கள் மணப்பாட்டை காலி செய்து விட்டு, தூத்துக்குடி வழியாக தாய்நாடு சென்று விட்டனர். நாய்க்கர் ஆட்சி சந்தாசாகிப்பினால் முடிவுற்றது. கர்நாடகம் ஆற்காடு நவாப் கையில் விழுந்தது. முகம்மதலி திருநெல்வேலியைக் கைப்பற்ற ஒரு படையை அனுப்பினார். 1755-இல் ஹெரான் தலைமையில் ஆங்கிலேயர் படை கிளம்பியது. பாளையக்காரர்கள் கிழக்குக் கடற்கரைத் துறைமுகங்கள் இரண்டையும் கிழக்கிந்திய கம்பெனியாரிடம் ஒப்படைத்தனர். இக்காலத்தில் நவாப்பிற்குக் கப்பங்கட்ட மறுத்தவர்களில் தலையானவர் பூலித்தேவர் ஆவார்.
இப்பகுதியில் ஆங்கிலேயரை எதிர்த்து பாளையக்காரர்கள் தொடர்ந்து கலகம் செய்து வந்தனர். பாளையக்காரர்களுக்கு ஆதரவாக சந்தாசாகிப், பிரஞ்சு படைகள் இருந்தன. 1761-இல் புதுச்சேரியை ஆங்கிலேயர் கைப்பற்றியதால் பிரஞ்சுகாரர்கள் பாளையக்காரர் களுக்கு உதவி செய்ய மறுத்துவிட்டனர். 1764-ஆம் ஆண்டு பாளையங்கோட்டை ஆங்கிலேயர் வசம் வந்தது. காளக்காடு, பணகுடி பகுதிகள் நவாப்பிற்கும், செங்கோட்டை திருவாங்கூர் அரசருக்கும் விட்டுக் கொடுக்கப்பட்டன. 1767 மேஜர் பிளிண்ட் பாஞ்சாலங்குறிச்சி மீது படையெடுத்தான். 1783-ஆம் வருடம் புல்லர்டன் தலைமையில் பாஞ்சாலங்குறிச்சி சூறையாடப்பட்டது. அங்கிருந்த 40,000 பொன் நாணயங்களை ஆங்கிலேயர்கள் பங்கு போட்டுகொண்டனர்.
1785-ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் நவாப்பின் அமில்தாரிடம் ஒப்படைக்கப் பட்டது. 1797-ஆம் ஆண்டு கலெக்டர் ஜாக்சனை கட்டபொம்மன் பேட்டி காண்பதற்கு, இராமநாத புரத்திலுள்ள இராமலிங்க விலாசத்திற்கு சென்ற போது குழப்பம் வரவே, ஆங்கிலத் தளபதி கிளார்க் கொலை செய்யப்பட்டான். இதன் பின்னர் சிலகாலம் கழித்து பாஞ்சாலங்குறிச்சி பானர்மேனால் வெற்றிகொள்ளப்பட்டது. படிப்படியாக எதிர்த்த பாளையக்காரர்கள் அனைவரையும் ஒடுக்கி, நவாப்பையும் செல்லாக்காசாக்கி விட்டு ஆங்கிலேயர் 1801-ஆம் வருடம் திருநெல்வேலியை எடுத்துக் கொண்டனர். 1910-ஆம் ஆண்டிற்கு பிறகு இராமநாதபுர மாவட்டத்தை உண்டாக்கினர். 1986-ஆம் ஆண்டு நிர்வாக வசதி கருதி கடற்கரையோரப் பகுதிகளை பிரித்து தூத்துக்குடி மாவட்டம்
உண்டாக்கப்பட்டது.
பொது விபரங்கள் :
பெயர்க் காரணம் :
நீர் நிறைந்த நிலத்தைத் தூத்துத் துறைமுகமும் குடியிறுப்பும் தோன்றிய ஊர் என்பதால் தூத்துக்குடி என்றாயிற்று. வாகைக்குளம், கங்கைக்கொண்டான் கல்வெட்டுக்களில் இவ்வூர்ரைத் 'தூற்றிக்குடி' என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
மழையளவு: 662 மி.மீ; சாலை நீளம்: 3,839 கி.மீ; பதிவுபெற்ற வாகனங்கள்: 31,504; காவல் நிலையங்கள் 44; வங்கிகள் 164; அஞ்சலகங்கள் : 418; அரசுமருத்துவமனைகள் 10; தொடக்க மருத்துவ நல நிலையங்கள் 47; திரையரங்கங்கள் 62.
எல்லைகள் :
கிழக்கிலும், தெற்கிலும் வங்காள விரிகுடா; மேற்கில் இராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்டங்கள், வடக்கில் காமராசர் மாவட்டம் இதன் எல்லைகள்.
உள்ளாட்சி நிறுவனங்கள் :
நகராட்சி-2; ஊராட்சி ஒன்றியம்-12; பேரூராட்சிகள்-20; பஞ்சாயத்துக்கள்-408; குக்கிராமங்கள்1,0121.
சட்டசபை தொகுதிகள் : 7
(அ) விளாத்திக்குளம் (ஆ) ஓட்டப்பிடாரம் (இ)கோவில்பட்டி (ஈ) சாத்தான்குளம் (உ) திருச்செந்தூர் (ஊ) ஸ்ரீவைகுண்டம் (எ) தூத்துக்குடி.
பாராளுமன்றத் தொகுதி : 1 திருச்செந்தூர்
தேடல் தொடர்பான தகவல்கள்:
தூத்துக்குடி - Thoothukudi - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - தூத்துக்குடி, மாவட்டங்கள், ஆண்டு, tamilnadu, தமிழக, ஆங்கிலேயர், திருநெல்வேலி, மாவட்டம், பாஞ்சாலங்குறிச்சி, தமிழ்நாட்டுத், பாளையக்காரர்கள், தகவல்கள், வருடம், எல்லைகள், | , திருச்செந்தூர், நிலையங்கள், இதன், திருவாங்கூர், information, districts, thoothukudi, மக்கள், டச்சுக்காரர்கள், விட்டு, செய்து, பாளையக்காரர், தலைமையில்