தூத்துக்குடி - தமிழக மாவட்டங்கள்
குலசேகரப்பட்டினம் :
திருச்செந்தூருக்கு 14 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. ஆப்ரிக்காவில் மட்டுமே விளையும் பப்பரப்புளிய மரம் இங்கு காணப்படுவதால் ஆப்ரிக்காவுடன் வணிக உறவு இருந்ததை அறிய முடிகிறது.இராசேந்திர சோழன் கட்டிய கோவில் உள்ளது. சேரமான் பெருமாள் நாயனார் இங்கு சமாதியானதாகச் சொல்லப்படுகிறது. குலசேகரப் பாண்டியரிடம் இருந்த முஸ்லீம் வீரர்கள் வாழ்ந்த இடங்கள் மேல இராவுத்தர்மா பாளையம், கீழ ராவுத்தர்மா பாளையம் என்று அழைக்கப்படுகிறது. இவ்வூரில் பெரிய உப்பளங்கள் உள்ளன. முக்கிய ஏற்றுமதிப் பொருள்கள் வெங்காயக்கூடு, கோரைப்பாய் முதலியனவாகும். இங்கு கீரை, கத்தரிக்காய் இரண்டும் அதிகம். கூட்டுறவு தீப்பெட்டி தொழிற்சாலை உள்ளது.
எல்லை நாயக்கன் பட்டி :
ஆடுவளர்ப்போர் கூட்டுறவு சங்கம் உள்ளது. ஆடும்-ஆட்டுத் தோலும் இங்கு முக்கிய வணிகப் பொருள்கள்.
கலியாவூர் :
பாய் முடைதலும், நெசவும் கூட்டுறவு முறையில் சிறப்பாக நடைபெறுகிறது.
கருங்குளம் :
பெருமாள் கோவிலால் இவ்வூர் சிறப்பு பெறுகிறது. இங்கு ஆனைக் கொம்பன் நன்கு விளைகிறது.
காந்தீஸ்வரம் :
தாமிரபரணியும் அதன் கிளை நதிகளும் இவ்வூரை தீவாக ஆக்கியுள்ளன.
கொற்கை :
பாண்டியர் தலைநகராகவும், துறைமுகப்பட்டினமாகவும் சிறந்திருந்த ஊர். சங்க இலக்கியங்கள் இங்கு முத்துக் குளித்தலை விவரிக்கின்றன. கால்டுவெல் முதன் முதலாக இவ்வூரில் புதைபொருள் ஆய்வு நடத்தி பழங்கால நாகரீகத்தைக் கண்டு வெளிப்படுத்தினார். தற்காலப்பெயர் உமரி மாநகர். இங்கு நெல், வாழை, வெற்றிலை, தென்னை, பனை மரங்கள் ஏராளம். சமணச் சிலையும், வன்னிமரமும் பழமையை நினைவூட்டுகின்றன. வெற்றிலையும், வாழையும் ஏற்றுமதியாகிறது.
கடம்பூர் :
மணியாச்சியிலிருந்து 14கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு பருத்தி அரைக்கும் ஆலைகளும், உரத் தொழிற்சாலைகளும் உள்ளன. 'கடம்பூர் போளி' புகழ் பெற்றது.
கழுகுமலை :
கழுகுமலை |
கழுகுமலையில் காணத்தக்கவை :
முருகன் கோவில் :
இக்கோவில் 10-ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டதாகும். இக்கோயில் பாடல் பெற்ற தலமாகும். முருகனை-கழுகுமலை கார்த்திகேயர், கழுகாசல மூர்த்தி, கந்தநாதன் என்றும் அழைக்கிறார்கள். அண்ணாமலை ரெட்டியார் காவடிச் சிந்து பாடியிருக்கிறார். அருணகிரிநாதர், முத்துசாமி தீட்சதர், முத்துசாமி பிள்ளை, பாரதியார் ஆகியோரும் பாடல்கள் பாடி உள்ளனர். இங்கு தைபூசம், பங்குனி உத்ரம், மாசிப்பெளணர்மி முதலிய விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.
பிள்ளையார் கோவில் :
300 அடி உயர கழுகுமலையின் உச்சியில் பிள்ளையார் கோயில் உள்ளது. கார்த்திகை நாட்களில் விளக்கேற்றும் கம்பும் உள்ளது. கோயிலுக்கு செல்லும் வழியில் புத்தர் சிலையும் ஏராளமான சமண விக்கிரங்களும், சுனையுடன் கூடிய சிறிய கோயிலும் உள்ளன.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 6 | 7 | 8 | 9 | 10 | ... | 11 | 12 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தூத்துக்குடி - Thoothukudi - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - இங்கு, உள்ளது, கழுகுமலை, தூத்துக்குடி, tamilnadu, தமிழக, மாவட்டங்கள், தொலைவில், கோவில், தமிழ்நாட்டுத், கூட்டுறவு, தகவல்கள், பெரிய, பருத்தி, ஆலைகளும், பெற்றது, கடம்பூர், பிள்ளையார், முத்துசாமி, | , கோயில், இவ்வூரில், information, districts, thoothukudi, பெருமாள், பாளையம், இரண்டும், பொருள்கள், முக்கிய, சிலையும்