தூத்துக்குடி - தமிழக மாவட்டங்கள்
சாயர்புரம் :
கிருத்துவத்தைப் பரப்ப வந்த சாமுவேல் சாயர் என்ற போர்ச்சுகீசியரால் இவ்வூர் சாயர்புரம் என்று அழைக்கப்படுகிறது. பண்ணை விளையிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது. தமிழறிஞர் ஜி.யு.போப் 1844-இல் சாயர்புரம் செமினரி என்ற பள்ளியை தோற்றுவித்தார். இங்கு அவர் காலத்தில ஐரோப்பிய மொழிகள் பல கற்பிக்கப்பட்டன. 1930 முதல் போப் நினைவுப்பள்ளி ஒன்று நடைபெற்று வருகிறது. 1962-ஆம் ஆண்டு கல்லூரி தொடங்கப்பட்டது. போப் படித்த நூல்கள், பள்ளி நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
சாத்தான் குளம் :
நாசரேத்திற்கு நேர் தெற்கே உள்ளது. கல்வியில் முன்னேற்றம் அடைந்துள்ளது 'வியாழக்கிழமை சந்தை' புல், வைக்கோலுக்குத் தனிச் சந்தை உள்ளது. பனைவெல்லம், சர்க்கரை தயாரிப்பு சிறுதொழில் நடந்து வருகிறது. தமிழறிஞர் அ. இராகவன் பிறந்தவூர்.
செட்டிக் குளம் :
சுனை ஒன்று உள்ளது.
சாகுபுரம் :
டால்மியா குடும்பத்தினரின் பெயரால் இப்பெயர் பெற்றுள்ளது. இங்கு ஒரு இரசாயன தொழிற்சாலை உள்ளது.
திருக்கோளூர் :
நம்மாழ்வாரின் சீடர் மதுரகவியாழ்வார் பிறந்த ஊர்.
திருச்செந்தூர் :
திருச்செந்தூர் |
கடற்கரையில் இவ்வூர் உள்ளதால் 'திருச்சீர் அலைவாய்' என அழைக்கப்படுகிறது. கோயிலுக்குள் சந்தனாமலையும், வேங்கடாசலபதி சந்நிதியும் சண்முக விலாச மண்டபமும் உண்டு. ஓங்கார வடிவத்தில் கட்டப்பட்டிருக்கும் இக்கோயில் கோபுரத்தின் வேல் வடிவம் நெடுந்தூரத்திலிருந்து காணும்படி அமைக்கப் பபட்டுள்ளது. இங்குள்ள குகைக்கு வள்ளிகுகை என்று பெயர். இன்று கடற்கரையில் காணப்படும் கோயில், முன்பு மலை உச்சியில் இருந்தது. கடல் பெருகி மலை மூழ்கவே இன்று கடற்கரையில் இக்கோயில் காட்சி தருகிறது. செந்திலாண்டவர் கோயில் வெள்ளை மணற்கல் மீது கட்டப்பட்டுள்ளது.
நாழிக்கிணறு :
ஒரு சதுர அடிப்பரப்புள்ள சிறு கிணற்றில் நன்னீரும், 14 சதுர அடி பரப்பளவு கொண்ட பெரிய கிணற்றில் உப்பு நீரும் கிடைக்கின்றன. ஒன்றின் நீர் மற்றொன்றுடன் கலப்பதில்லை.
மண்டபங்கள் :
நீண்ட மண்டபங்கள் வாயிலிலும், கோயிலைச் சுற்றியும் அமைக்கப் பட்டுள்ளன. பக்தர்கள் தங்கி இளைப்பாறத்தக்க வகையில் கட்டப்பட்டுள்ளன. இங்குள்ள கந்த சஷ்டி மண்டபம், பிள்ளையார் மண்டபம், பதினாறு தூண்களோடு அமைக்கப்பட்டுள்ள ஆனந்த விலாசமண்டபம் முதலியன குறிப்பிடத்தக்கவையாகும்.
செந்திலாண்டவர் :
நின்ற திருக்கோலத்தில்-அபயம், வரதம், பூ செபமாலைகளை ஏந்திய நான்கு திருக்கரங்களுடன் காட்சியளிக்கிறார் மூலத்தானத்தில் ஐந்து சிவலிங்கங்கள் உள்ளன. யாவரும் சுற்றிப் பார்த்து வரத்தக்க முறையில் இவை அமைந்துள்ளன.
விழாக்கள் :
ஒவ்வொரு நாளும் திருவிழாக் கோலத்தைத் திருச்செந்தூரில் காணலாம். வெள்ளிக்கிழமை, கார்த்திகை விசாக நாள்களில் முருகனுக்கு தங்கக் கவசம் சார்த்தப்படும். வைகாசி விசாகம், ஆவணி மூலம், கந்தசட்டி, மாசி மகம், பங்குனி உத்திரம், ஆவணித் திருவிழாவில், முன்பக்கம் முருகவேள் உருவிலும், பின்பக்கம் நடராசர் உருவிலும் அலங்கரிக்கப்பட்டிருக்கும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தூத்துக்குடி - Thoothukkudi - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - உள்ளது, தூத்துக்குடி, tamilnadu, மாவட்டங்கள், தமிழக, கடற்கரையில், போப், சாயர்புரம், ஒன்று, தமிழ்நாட்டுத், தகவல்கள், செந்திலாண்டவர், இங்குள்ள, கோயில், சதுர, இன்று, மண்டபங்கள், | , உருவிலும், மண்டபம், அமைக்கப், கிணற்றில், thoothukkudi, இங்கு, தமிழறிஞர், அழைக்கப்படுகிறது, இவ்வூர், districts, வருகிறது, information, திருச்செந்தூர், சந்தை, குளம், இக்கோயில்