தூத்துக்குடி - தமிழக மாவட்டங்கள்
சிவன் கோவில் :
மலையின் மற்றொரு பகுதியில் மேலிருந்து கீழாகக் குடைந்து வெட்டப்பட்ட கோயிலாகையால் 'வெட்டுவான் கோயில்' என்றும் இது அழைக்கப்படுகிறது. 30அடி ஆழத்தில் சதுரமாகப் பாறைக்குள் குடைந்து அதன் நடுப்பகுதியில் கோயில் உண்டாக்கப் பட்டிருக்கிறது. இக் கோயிலின் நீளம் 47 அடி; அகலம் 24 அடி; உயரம் 30 அடி கோபுரத்தின் உச்சியில் தாமரை இதழ் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இக்கோயில் பாண்டியரின் ஒற்றைக் கல் தளி ஆகும்; சிற்பங்கள் அழகு வாய்ந்தவை.
சக்கம்மா தேவி கோயில் :
கட்டபொம்மன் குடும்பத்தாரின் குலதெய்வம் சக்கம்மாதேவி. நாட்டு விடுதலைக்கு பின் 10 நாள் திருவிழா, சித்திரை மாதத்தில் கொண்டாடப்படுகிறது.
கயிலாசநாதர் கோயில் :
பசுவந்தனை என அழைக்கப்படும் இக்கேயிலில் சித்திரைத் திருவிழா சிறப்புறநடைபெறுகிறது.
சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் :
புதூரில் உள்ள இக்கோவில், தேவாங்கர் சமூகத்திற்குரியது.
முத்தளபுரம் சிவன் கோயில் :
ஆனிமாதம் திருவிழா நடைபெறுகிறது.
குறுமலை :
இது கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மருத்துவ மலையின் பகுதி என இம்மலை கருதப்படுகிறது. இங்கு பல வகையான பச்சிலைகளும், மூலிகைகளும் காணப்படுகின்றன. இம்மலைக் காற்று நோய் தீர்க்கும் என நம்பப்படுகிறது. இம்மலை சுமார் 150 அடி உயரம் உள்ளது. அதன் மீது நீர் ஊற்று உள்ளது. மக்கள் மலைவளம் காண தை மாதத்தில் இங்கு வருவதுண்டு.
கடலை :
கைத்தறி நெசவுக்கும், துப்பட்டிக்கும் பெயர் பெற்ற ஊர்.
கயத்தாறு :
திருநெல்வேலி-கோவில்பட்டி நெடுஞ்சாலையில் உப்போடை ஆற்றுக்கு அருகில் உள்ள இவ்வூரை கடம்பூர் இரயில் நிலையத்திலிருந்து சென்றடையலாம். இது வீரபாண்டிய கட்டபொம்மனை தூக்கிலிட்ட இடம். அதற்காதாரமாக புளியமரமும், சில கற்களும் காணப் படுகின்றன. பாய் பின்னுதல், துணிநெசவு முக்கியத் தொழில்கள். கயத்தாற்றில் சிதலமடைந்த, கல்வெட்டுகள் உள்ள, சோழ மன்னர் கட்டிய, பெருமாள் கோவில் உள்ளது. இவ்வூரில் பெரும் பான்மையோர் கிருத்துவர்கள். 17-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட தேவாலயம் உள்ளது.
ஓட்டப்பிடாரம் :
ஓட்டப்பிடாரம் |
சேர்வைக்காரன் மடம் :
தென்னை, மாந்தோப்புக்கள் நிறைந்து காணப்படுகிறது. இவ்வூரைச் சேர்ந்த செந்திலம்பலம் என்னும் ஊரில் வாழும் தாழ்த்தப்பட்ட மக்கள் நெசவுத் தொழிலில் சிறந்து விளங்குகின்றனர்.
செவந்தியாபுரம் :
மூக்குப்பொடி உற்பத்தியால் சிறப்புப் பெற்றது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 7 | 8 | 9 | 10 | 11 | ... | 11 | 12 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தூத்துக்குடி - Thoothukudi - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - உள்ளது, கோயில், தூத்துக்குடி, tamilnadu, மாவட்டங்கள், தமிழக, திருவிழா, தகவல்கள், தமிழ்நாட்டுத், ஓட்டப்பிடாரம், உள்ள, | , இம்மலை, இங்கு, மக்கள், திருநெல்வேலி, குடைந்து, information, districts, thoothukudi, சிவன், கோவில், உயரம், மலையின், மாதத்தில்