சீராக் ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 1
2 கடல் மணல்களையும் மழைத்துளிகளையும், உலகத்தின் நாட்களையும் கணக்கிட்டவன் யார்? வானத்தின் உயரத்தையும் பூமியின் அகலத்தையும் பாதாளத்தின் ஆழத்தையும் அளந்தவன் யார்?
3 எல்லாவற்றிற்கும் முன்னிருந்த கடவுளின் ஞானத்தைக் கண்டுபிடித்தவன் யார்?
4 எல்லாவற்றிற்கும் முன் ஞானம் உண்டாக்கப்பட்டது. காலத் துவக்கத்திலிருந்து விவேகமுள்ள அறிவு இருந்தது.
5 வான மண்டலங்களில் வீற்றிருக்கும் கடவுளின் வார்த்தையே ஞானத்தின் ஊற்றும், அதனை அடையும் வழிகளே அவருடைய நித்திய கட்டளைகளுமாய் இருக்கின்றன.
6 ஞானத்தின் அடித்தளம் எவனுக்கு வெளிப்படுத்தப்பட்டது? அதன் வியத்தகு பண்புகளை அறிந்தவன் யார்?
7 ஞானத்தின் உணர்வு எவனுக்குத் தெரிவித்து வெளியாக்கப்பட்டது? அதன் பலவித வழிகளையும் கண்டுபிடித்தவன் யார்?
8 எல்லாவற்றிற்கும் மேலான, எல்லாம் வல்ல படைப்பாளர் ஒருவர் இருக்கிறார். வல்லமையுள்ள அவ்வரசர் மிகவும் அஞ்சத்தக்கவர். தமது அரியணையில் வீற்றிருந்து ஆண்டு வரும் கடவுள் அவரே.
9 அவரே தமது அளவில்லாப் பரிசுத்த ஆவியைக் கொண்டு அதை உண்டாக்கி, அறிவித்து வெளிப்படுத்தினார்.
10 ஏனென்றால், தமது எல்லாப் படைப்புகளிலும், எல்லா உயிரினங்களிலும் தமது விருப்பத்திற்கு ஏற்றபடி அதைப் பகிர்ந்திட்டார்@ தம்மை நேசிப்பவர்களுக்கு அதைக் கொணர்ந்தார்.
11 தெய்வ பயம் மகிமையும் மகத்துவமும் களிப்பும் மகிழ்ச்சியின் முடியுமாய் இருக்கின்றது.
12 தெய்வ பயம் இதயத்தை மகிழ்விக்கும்@ அகமகிழ்ச்சியையும் அக்களிப்பையும் நீடிய ஆயுளையும் கொடுக்கும்.
13 ஆண்டவருக்கு அஞ்சி நடப்பவன் தன் இறுதிக் காலத்தில் பேறு பெற்றவன் ஆவான்@ மரண நாளிலும் ஆசீர்வதிக்கப்படுவான்.
14 கடவுள்பால் உள்ள நேசமே மேன்மையுள்ள ஞானம்.
15 யார் யாருக்கு அது காணப்படுகிறதோ அவர்கள் தாங்கள் அதைக் கண்டதாலும், அதன் மாட்சிகளை அறிந்ததாலும் அதை நேசிக்கிறார்கள்.
16 ஞானத்தின் தொடக்கம் தெய்வ பயம். அது தாய் வயிற்றிலேயே பிரமாணிக்கம் உள்ளவர்களோடு உண்டாகின்றது@ நற்குணமுள்ள பெண்களோடு வளர்கின்றது@ நீதிமான்களிடத்திலும் விசுவாசிகளிடத்திலும் விளங்குகின்றது.
17 தெய்வ பயம் மறை ஒழுக்கத்தின் நூல்.
18 மறை ஒழுக்கம் இதயத்தைக் காத்து நீதியில் நிலைநிறுத்தும்@ நிறைவையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும்.
19 தெய்வ பயமுள்ளவன் பேறுபெற்றவனாய் வாழ்ந்து, சாகும் நேரத்தில் ஆசீர்வதிக்கப்படுவான்.
20 தெய்வ பயமே ஞானத்தின் நிறைவு. அதன் கனிகளால் இது வெளிப்படும்.
21 ஞானமுள்ளவர்களுடைய குடும்பங்கள் அதனால் நிரப்பப்படும்@ அதன் செல்வங்களால் அவர்கள் நிறைந்த களஞ்சியங்கள் (போல்) ஆவார்கள்.
22 ஞானத்தின் முடி தெய்வ பயம். அது மன அமைதியை நிறைவாக்கும் மீட்பின் கனியாகும்.
23 கடவுள் அதைக் கண்டு கணக்கிட்டார். அதன் செயல்கள் அவருடைய கொடைகளாய் இருக்கின்றன.
24 ஞானம் அறிவுக் கலையையும், விவேகமுள்ள அறிவையும் கொடுக்கின்றது@ தன்னைச் சேர்பவர்களை மகிமையில் உயர்த்துகின்றது.
25 ஞானத்தின் அடிவேர் தெய்வ பயமாகும். அதன் கிளைகள் நீடித்த ஆயுளுள்ளவை.
26 ஞானத்தின் செல்வங்களோ அறிவுத் தெளிவும் மறை ஒழுக்கமுமாம். பாவிகளோ ஞானத்தை வெறுக்கிறார்கள்.
27 தெய்வ பயம் பாவத்தை அகற்றுகின்றது.
28 ஏனென்றால், பயமற்றவன் நீதிமானாதல் இயலாது. கோபம் அவனுக்குக் கலக்கமும் கேடுமாய் இருக்கின்றது.
29 பொறுமையுடையவன் சிறிது காலத்திற்குச் சகிப்பான்@ பின்னர் மகிழ்ச்சி அடைவான்.
30 நல்லறிவு சிறிது காலத்திற்கு அவன் வார்த்தைகளை மறைக்கும். பலருடைய நாவு அவன் அறிவை வெளிப்படுத்தும்.
31 ஞானத்தின் செல்வங்களில் ஒன்று நல்லொழுக்கத்தின் அடையாளம்.
32 பாவி கடவுளுக்கு ஊழியம் செய்வதை வெறுக்கிறான்.
33 மகனே, நீ ஞானத்தை விரும்புவாயாகில் நீதியைக் காப்பாற்று. கடவுள் உனக்கு அதை அளிப்பார்.
34 ஞானமும் நல்லொழுக்கமும் தெய்வ பயமாகும். அவை அவருக்கு விருப்பமானவை.
35 விசுவாசம், சாந்தம் இவைகளைக் கொண்டு அவர் ஞானியின் செல்வங்களை நிரப்புவார்.
36 தெய்வ பயத்தை விட்டுவிடாதே. கபடுள்ள இதயத்தோடு அவரை அணுகிப்போகாதே.
37 மனிதர் முன்பாகக் கள்ள ஞானியாய் இராதே. உன் நாவால் அவர்களுக்குத் துன் மாதிரிகைக்கு இடம் கொடாதே.
38 நீ தவறிப்போகாதபடி உன் வார்த்தைகளில் கவனமாய் இரு. உன் ஆன்மாவிற்கு அவமானம் வருவிக்காதே.
39 கடவுள் உன் இரகசிய எண்ணங்களை வெளியிட்டுச் சபை முன்பாக உன்னை ஒழித்து விடுவார்.
40 ஏனென்றால், நீ கெட்ட கருத்தோடு கடவுளை நாடினாய்@ உன் இதயம் கபடும் பொய்யும் நிறைந்ததாய் இருக்கின்றது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சீராக் ஆகமம் - பழைய ஏற்பாடு, தெய்வ, ஞானத்தின், யார், பயம், ஏற்பாடு, பழைய, இருக்கின்றது, தமது, கடவுள், ஞானம், அதைக், எல்லாவற்றிற்கும், சீராக், ஆகமம், ஏனென்றால், ஆசீர்வதிக்கப்படுவான், அவன், சிறிது, ஞானத்தை, பயமாகும், கொடுக்கும், அவருடைய, ஞானமும், எல்லா, ஆன்மிகம், திருவிவிலியம், கடவுளின், கண்டுபிடித்தவன், அவரே, இருக்கின்றன, விவேகமுள்ள, கொண்டு