புலம்பல் ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 1
2 பேத்: இரவெல்லாம் இடைவிடாது அழுத கண்ணீர் அவள் கன்னங்களில் ஒடி வழிகின்றது@ காதலர் அவளுக்குப் பலரிருந்தும், தேற்றுவோன் அவருள் எவனுமில்லை, நண்பர்கள் யாவரும் அவளை வஞ்சித்துப் பகைவராய் மாறிப் போனார்கள்.
3 கீமேல்: யூதா, நாடுகடத்தப்பட்டுத் துன்பத்திற்கும் அடிமைத்தனத்திற்கும் ஆளானாள்@ புறவினத்தார் நடுவில் குடியிருக்கின்றாள், அமைதி காணாதிருக்கின்றாள்@ கொடுங்கோலர் அவளைத் துரத்திப் போய்த் துன்பத்தின் நடுவில் பிடித்தார்கள்.
4 தாலேத்: திருவிழாக்களுக்கு வருவோர் இல்லாமையால் சீயோன் செல்லும் வழிகள் புலம்புகின்றன@ அவள் வாயில்கள் யாவும் கைவிடப்பட்டன, அவளுடைய அர்ச்சகர்கள் விம்முகின்றனர்@ அவளுடைய கன்னிப் பெண்கள் துயருறுகின்றனர், அவளோ வேதனையால் நெருக்கப்படுகிறாள்.
5 ஹே: அவளுடைய எதிரிகள் தலைமை பெற்றார்கள், பகைவர்கள் வாழ்க்கையில் வளம் பெற்றார்கள்@ அவளது எண்ணற்ற அக்கிரமத்தை முன்னிட்டு ஆண்டவரே அவளைத் துன்புறுத்தினார். அவளுடைய குழந்தைகள் கொடியவன் முன்னால் அடிமைத்தனத்திற்கு ஆளானார்கள்.
6 வெள: சீயோன் மகளின் சிறப்பெல்லாம் அவளை விட்டு நீங்கின@ அவளுடைய தலைவர்கள் அனைவரும் மேய்ச்சலற்ற கலைமான்கள் போலாயினர்@ துரத்துபவனின் முன்னிலையில் ஆண்மையிழந்து ஒடினார்கள்.
7 ஸாயின்: துன்பத்தின் கசப்பு நிறைந்த நாட்களில் பண்டை நாளில் அனுபவித்த இன்ப சுகங்களை, யெருசலேம் இன்று நினைத்துப் பார்க்கிறாள்@ அவளுடைய மக்கள் பகைவர் கையில் சிக்கி உதவி செய்வாரின்றி அவள் வீழ்ந்த போது, அவளைப் பார்த்துப் பகைவர் நகையாடினர்.
8 ஹேத்: யெருசலேம் மாபாவம் செய்ததினால், தீட்டுப்பட்டவள் ஆகிவிட்டாள்@ அவளை மதித்து வந்தவர் எல்லாரும் அவள் அம்மணத்தைக் கண்டு வெறுத்தார்கள். அவளோ விம்மி அழுது கொண்டு பின்புறம் திரும்பிக் கொள்கின்றாள்.
9 தேத்: அவளது அசுத்தம் முன்றானையிலும் ஒட்டிக் கொண்டது, தன் முடிவு இப்படியாகுமென அவள் நினைக்கவில்லை@ அவளது வீழ்ச்சியோ கொடுமையானது, தேற்றுவார் அவளுக்கு யாருமில்லை@ "ஆண்டவரே, பாரும் உன் வேதனையை, பகைவன் இறுமாந்து நிற்கின்றான்!"
10 இயோத்: அவளுடைய அரும் பெரும் பொருட்கள் அனைத்தின் மேலும் பகைவன் கை வைத்து விட்டான், யார் உம்முடைய பரிசுத்த இடத்தில் நுழைதலாகாதென்று நீர் கட்டளை கொடுத்திருந்திரோ அவர்களே- அந்தப் புறவினத்தாரே- அதனில் நுழைவதைக் கண்டாள்.
11 காஃப்: அவளுடைய மக்களெல்லாம் உணவு தேடிப் பெருமூச்சு விடுகின்றனர், உயிரைக் காக்கும் உணவுக்காக, அவர்கள் தம் அரும் பொருளெல்லாம் விற்றுவிட்டார்கள்@ "ஆண்டவரே, பாரும், கண்ணோக்கியருளும்@ ஏனெனில் நான் தாழ்மையுற்றேன்!"
12 லாமேத்: "இவ்வழியாய்க் கடந்து செல்வோரே, நீங்கள் அனைவரும் நின்று பாருங்கள்: என்னை வாதிக்கும் துயருக்கொப்பாய் வேறேதேனும் துயருண்டோ? அந்தத் துயரை ஆண்டவரே- தம் பெருங் கோபத்தின் நாளில் எனக்குத் தந்தார்.
13 மேம்: "வானிலிருந்து என் மேல் தீயைப் பொழிந்தார், என் எலும்புகளுக்குள் அதை இறங்கச்செய்தார்@ என் கால்களுக்கு வலை வீசினார், என்னைப் பின்புறமாய் வீழ்த்தினார்@ அவர் என்னைப் பாழாக்கினார், நாளெல்லாம் துயரத்தில் அமிழ்ந்திருக்கச் செய்தார்.
14 நூன்: "என் அக்கிரமங்களின் நுகத்தடி என்னை அழுத்துகின்றது, அவற்றைப் பிணைத்தவை அவர் கைகளே@ அவை என் கழுத்தில் வைக்கப்பட்டன. என் வலிமையெல்லாம் இழக்கச் செய்தார்@ நான் எதிர்க்க முடியாத எதிரிகள் கையில் ஆண்டவர் என்னைக் கையளித்தார்.
15 சாமேக்: "திறமை மிக்க வீரர் அனைவரையும், ஆண்டவர் என்னிடமிருந்து எடுத்து விட்டார். இளங்காளைகளை அழிக்க எனக்கெதிராய் மாபெரும் கூட்டத்தை வரச் செய்தார்@ திராட்சை ஆலையில் மிதிப்பது போலக் கன்னிப் பெண் யூதாவை ஆண்டவர் மிதித்தார்.
16 ஆயீன்: "ஆதலால் தான் நான் அழுகின்றேன், என் கண்களும் கண்ணீர் பெருக்குகின்றன@ ஏனெனில் தேற்றுகிறவர் எனக்குத் தெலைவிலிருக்கிறார், புத்துயிரூட்டக் கூடியவர் அகன்று போனார்@ என் மக்கள் நொறுங்குண்டு நாசமானார்கள், ஏனெனில் பகைவன் கை வலுத்துவிட்டது."
17 பே: தன் கைககளை சீயோன் நீட்டுகின்றாள், அவனைத் தேற்றுவார் யாருமில்லை. சுற்றுப்புறப் பகைவர்களை யாக்கோபுக்கு எதிராய் எழும்பும்படி ஆண்டவர் ஆணை தந்தார்@ யெருசலேம் அவர்கள் நடுவினிலே, அசுத்தமான ஒரு பொருளுக்கு ஒப்பானாள்.
18 சாதே: "ஆண்டவர் நீதி தவறாதவர், அவரது ஆணையை நான் எதிர்த்தேன்@ மக்களே, நீங்கள் அனைவரும் செவிகொடுங்கள், எனது துன்பத்தைப் பாருங்கள், என் கன்னிப் பெண்களும் இளங்காளைகளும் அடிமைகளாய்க் கடத்தப்பட்டனர்.
19 கோப்: "என்னுடைய காதலர்களை நான் கூப்பிட்டேன், ஆனால் அவர்கள் என்னை ஏய்த்தார்கள்@ உயிரைக் காத்துக் கொள்ள உணவைத் தேடி நகரத்தினுள் போயிருக்கும் போதே என்னுடைய அர்ச்சகர்கள், முதியோர்கள் ஆகியோர் அங்கேயே மாய்ந்து போயினர்.
20 ரேஷ்: "ஆண்டவரே, பாரும், நான் துன்புறுகிறேன், என் வயிறு கலங்கி நடுங்குகிறது@ என் இதயம் குழம்பிக் கலங்குகிறது, ஏனெனில் நான் துரோகம் செய்தேன்@ வெளியிலே வாள் வெட்டி வீழ்த்துகின்றது, வீட்டிலே இருப்பது சாவதைப் போன்றுள்ளது.
21 ஷின்: "நான் விம்முவதை நீர் கேட்டருளும், தேற்றுவார் எனக்கு யாருமில்லை@ என் துன்பத்தைப் பகைவரெல்லாம் கேள்விப்பட்டார், நீர் இதைச் செய்ததற்காக அகமகிழ்ந்தார்@ நீர் குறிப்பிட்ட நாள் வரச் செய்யும், அப்போது அவர்கள் என்னைப் போல் ஆவார்கள்.
22 தௌ: "அவர்கள் செய்த தீமையெல்லாம் உம்முன் வரட்டும்@ என்னுடைய எல்லா அக்கிரமங்களுக்காகவும் என்னை நீர் எவ்வாறு தண்டித்தீரோ, அவ்வாறே அவர்களையும் தண்டித்தருளும்@ ஏனெனில் என் விம்மல்கள் மிகப் பல, என் மனத் துயர் மிகக் கொடிது."
1 | 2 | 3 | 4 | 5 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புலம்பல் ஆகமம் - பழைய ஏற்பாடு, ", நான், அவளுடைய, ஆண்டவரே, நீர், ஏனெனில், அவள், ஆண்டவர், ஏற்பாடு, என்னை, மக்கள், பழைய, புலம்பல், தேற்றுவார், யெருசலேம், அனைவரும், அவளது, என்னைப், பகைவன், என்னுடைய, அவளை, பாரும், சீயோன், ஆகமம், கன்னிப், உயிரைக், எனக்குத், வரச், துன்பத்தைப், செய்தார்@, அவர், பாருங்கள், நீங்கள், நாளில், நடுவில், அவளைத், கண்ணீர், நிலைக்கு, திருவிவிலியம், ஆன்மிகம், துன்பத்தின், அர்ச்சகர்கள், கையில், யாருமில்லை@, பகைவர், எதிரிகள், அவளோ, அரும்