பாரூக் ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 1
2 பாரூக் என்பவர் பபிலோனில் இருந்த காலத்தில், ஐந்தாம் ஆண்டில் கல்தேயர் யெருசலேமைப் பிடித்துத் தீக்கிரையாக்கின மாதத்தின் ஏழாம் நாள் இந்நூலை எழுதி முடித்தார்.
3 பாரூக் இந்நுலில் அடங்கியுள்ள வார்த்தைகளை யூதா அரசனான யோவாக்கீமின் மகன் எக்கோனியாஸ் முன்பாகவும், இந்நுலின் வாசகத்தைக் கேட்க வந்திருந்த மக்கள் அனைவர் முன்பாகவும் வாசித்தார்.
4 தலைவர்கள், மூப்பர்கள் இவர்களுக்கு முன்பாகவும், சோதி நதிக்கு அருகிலுள்ள பபிலோனிய நாட்டில் வாழ்ந்த சிறியோர் முதல் பெரியோர் வரை எல்லா மக்களுக்கு முன்பாகவும் அதனை வாசித்தார்.
5 அவர்கள் இவ்வார்த்தைகளைக் கேட்டுக் கண்ணீர் சொரிந்தழுது, உண்ணா நோன்பிருந்து, ஆண்டவர் திருமுன்பு வேண்டிக் கொண்டார்கள்.
6 அவர்கள் ஒவ்வொருவரும் தம்மால் இயன்றளவு பொருள் சேர்த்து,
7 யெருசலேமிலிருந்த சலோம் என்பவரின் மகனான எல்சியாசின் மகன் யோவாக்கீம் என்கிற அர்ச்சகருக்கும், அவரோடு கூட யெருசலேமிலிருந்த மற்ற அர்ச்சகர்களுக்கும், மக்கள் யாவருக்கும் அனுப்பினார்கள்.
8 அதே சமயத்தில், திருக்கோயிலினின்று கொள்ளைப் பொருளாகக் கொண்டு போகப்பட்ட ஆண்டவருடைய கோயிலின் பாத்திரங்களையும், பாரூக் யூதா நாட்டுக்குத் திரும்பக் கொடுத்தனுப்புவதற்காக வாங்கி வைத்திருந்தார்@ அவை யூதாவின் அரசனான யோசியாஸ் என்பவனின் மகனான செதேசியாஸ் மன்னனால் செய்யப்பட்ட வெள்ளிப் பாத்திரங்கள்@
9 பபிலோனிய அரசனான நபுக்கோதனசார் யெருசலேமிலிருந்து எக்கோனியாசையும் தலைவர்களையும் கைதிகளையும் வீரர்களையும் நாட்டு மக்களையும் பிடித்துப் பபிலோனுக்குக் கூட்டிச் சென்ற பின், அந்த வெள்ளிப் பாத்திரங்களைச் செதேசியாஸ் செய்து வைத்திருந்தான்.
10 பொருள் சேர்த்துக் கொடுத்தனுப்பினவர்கள் இவ்வாறு சொல்லியனுப்பினார்கள்: "நாங்கள் உங்களுக்கு அனுப்பியுள்ள பணத்தைக் கொண்டு, தகனப் பலிகளையும், நறுமணப் பொருட்களையும் வாங்கி, நம் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் பாவப் பரிகாரப் பலிகளையும் காணிக்கைகளையும் ஒப்புக்கொடுங்கள்.
11 மேலும், பபிலோனிய அரசனாகிய நபுக்கோதனசாரின் வாழ்நாட்களும், அவன் மகனான பல்தசாரின் வாழ்நாட்களும், இவ்வுலகில் வானுலக வாழ்வைப் போலப் பேறுபெற்ற வாழ்வாய் இருக்கும்படியாக வேண்டிக் கொள்ளுங்கள்@
12 பபிலோன் அரசனாகிய நபுக்கோதனசாரின் அடைக்கலத்திலும், அவன் மகனான பல்தசாரின் பாதுகாப்பிலும் நாங்கள் அமைதியாய் வாழ்ந்து, நெடுங்காலம் இவர்களுக்கு ஊழியம் செய்து, இவர்களுடைய கண்களுக்கு உகந்தவர்களாய் இருந்து, இவர்களுடைய தயவை அடைய எங்களுக்கு ஆண்டவர் மனத்திடனையும் நல்ல தெளிவையும் தரும்படியாக மன்றாடுங்கள்.
13 இன்னும் எங்களுக்காகவும் நம் கடவுளாகிய ஆண்டவரிடம் இறைஞ்சுங்கள்: ஏனெனில் நம் கடவுளாகிய ஆண்டவருக்கு விரோதமாய் நாங்கள் பாவஞ் செய்தோம். அவருடைய கோபமும் ஆத்திரமும் இன்று வரையிலும் எங்களை விட்டு அகலாதிருக்கிறது.
14 உங்களுக்கு நாங்கள் அனுப்பியுள்ள இந்த நூலை ஆண்டவருடைய கோயிலில் திருநாளிலும், கொண்டாட்ட நாட்களிலும் பொதுவில் வாசித்து, பாவங்களை அறிக்கையிடுங்கள். அதற்காகவே இதை அனுப்பியுள்ளோம்.
15 "அப்போது நீங்கள் சொல்லவேண்டியது இதுவே: ~நீதி நம் கடவுளாகிய ஆண்டவருக்குரியது@ ஆனால், இன்றிருப்பது போல, நாணித் தலை குனிதல் தான் நமக்கும், யெருசலேமின் குடிகளுக்கும் யூதாவின் மக்களுக்கும்,
16 நம்முடைய அரசர்கள், தலைவர்கள், அர்ச்சகர்கள், தீர்க்கதரிசிகள், நம் தந்தையர்கள் அனைவர்க்கும் உரியது@
17 ஏனெனில் நம் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் பாவம் கட்டிக்கொண்டோம்.
18 நாம் அவருக்குக் கீழ்ப்படிந்து நடக்கவுமில்லை@ நம் கடவுளாகிய ஆண்டவர் நமக்குக் கொடுத்த கற்பனைகளின் நெறியில் நடக்கும்படி நாம் அவருடைய குரலுக்குச் செவிசாய்க்கவுமில்லை.
19 எகிப்து நாட்டினின்று நம் தந்தையர்களை ஆண்டவர் மீட்டுக் கொண்டு வந்த நாள் முதல் இன்று வரையிலும் நம் கடவுளாகிய ஆண்டவருக்குக் கீழ்ப்படியவில்லை@ நம்முடைய கவலையீனத்தால் அவருடைய குரலொலிக்குச் செவிசாய்க்கவில்லை.
20 பாலும் தேனும் பொழியும் நாட்டை நமக்குக் கொடுப்பதற்காக எகிப்து நாட்டிலிருந்து நம் தந்தையர்களை மீட்டுக் கூட்டி வந்த போது, ஆண்டவர் தம் ஊழியராகிய மோயீசன் வாயிலாக நமக்குத் தெரிவித்திருந்த துன்பங்களும் சாபனைகளும் நம்மைப் பீடிக்கின்றன.
21 நம் கடவுளாகிய ஆண்டவர் நமக்கு அறிவுறுத்தும்படி நம்மிடம் அனுப்பிய இறைவாக்கினர்களின் வார்த்தைகளையெல்லாம் பொருட்படுத்தாமல், அவருடைய குரலொலிக்குச் செவிகொடுக்க மறுத்தோம்.
22 நாம் ஒவ்வொருவரும் நம் உள்ளத்தின் தீய போக்கின்படியே அந்நிய தெய்வங்களுக்கு ஊழியம் செய்தோம்@ நம் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் தீமைகள் புரிந்தோம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாரூக் ஆகமம் - பழைய ஏற்பாடு, கடவுளாகிய, ஆண்டவர், பாரூக், இவர், ஏற்பாடு, நாங்கள், மகனான, அவருடைய, பழைய, மகன்@, முன்பாகவும், பபிலோனிய, நாம், மகன், என்பவரின், அரசனான, கொண்டு, ஆகமம், முன்னிலையில், பல்தசாரின், ஊழியம், நபுக்கோதனசாரின், அரசனாகிய, வாழ்நாட்களும், அவன், வரையிலும், தந்தையர்களை, மீட்டுக், வந்த, குரலொலிக்குச், எகிப்து, நமக்குக், ஏனெனில், இன்று, பலிகளையும், நம்முடைய, இவர்களுடைய, யூதாவின், மக்கள், வாசித்தார், தலைவர்கள், இவர்களுக்கு, யூதா, நாள், திருவிவிலியம், ஆன்மிகம், எல்சியாசின், வேண்டிக், ஒவ்வொருவரும், வெள்ளிப், செய்து, ", உங்களுக்கு, செதேசியாஸ், வாங்கி, பொருள், யெருசலேமிலிருந்த, ஆண்டவருடைய, அனுப்பியுள்ள