1 மக்கபே ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 1
2 போர்கள் பல புரிந்து வலிமை மிக்க கோட்டைகள் அனைத்தையும் பிடித்து, தன்னை எதிர்த்த அரசர்களைக் கொலை செய்து,
3 பூமியின் எல்லைகள் வரைக்கும் சென்று, எல்லா இனத்தாரையும் கொள்ளையடித்தான். பூமி முழுவதும் அவன் முன்பாக ஒடுங்கி அடங்கியது.
4 அவன் வலிமையுள்ள சேனைகளைச் சேர்த்துப் பெரியதொரு படையை நிறுவினான். ஆதலால் அவன் மனம் செருக்குற்று அகந்தை கொண்டது.
5 அவன் பல நாடுகளையும் அரசர்களையும் அடிமைப்படுத்தினான், அவர்களும் அவனுக்குத் திறை செலுத்தினார்கள்.
6 அதன் பிறகு அவன் கடின நோயுற்று, தான் சாகப்போவதை அறிந்தான்.
7 ஆதலால், தன்னுடன் வளர்க்கப்பட்ட இளம் வயதினரான பிரபுக்களை அழைத்து, தான் உயிரோடிருக்கும் போதே தன் நாட்டை அவர்களுக்குப் பிரித்துக் கொடுத்தான்.
8 அலெக்சாந்தர் பன்னிரண்டு ஆண்டுகள் ஆண்ட பிறகு இறந்தான்.
9 பிரபுக்களும் தங்கள் தங்களுக்கு நியமிக்கப்பட்ட இடங்களில் அரசர் ஆனார்கள்.
10 அவன் இறந்த பின் அவர்கள் எல்லாரும் முடிபுனைந்து, அவர்களுக்குப் பின் அவர்கள் பிள்ளைகளும் பல ஆண்டுகளாய் ஆண்டு வந்தார்கள். பூமியில் தீமைகளும் மிகுதி ஆயின.
11 அவர்களின் தலைமுறைகளில் அந்தியோக்கஸ் அரசனின் புதல்வனான பெரிய அந்தியோக்கஸ் கிரேக்க அரசின் நூற்று முப்பத்தேழாம் ஆண்டு ஆண்டான்.
12 இவன் உரோமையில் பிணையாளனாக இருந்தவன். அக்காலத்தில் இஸ்ராயேலில் தீயவர் பலர் தோன்றி: நம்மைச் சுற்றிலும் இருக்கும் இனத்தாரோடு நாம் உடன்படிக்கை செய்து கொள்வோம். ஏனென்றால், நாம் அவர்களை விட்டுப் பிரிந்திருந்த காலமெல்லாம் நம்மைப் பலவிதத் தீமைகள் சூழ்ந்து கொண்டன என்று மற்றவர்களிடம் கூறினார்கள்.
13 அவர்கள் சொன்னது மற்றவர்களுக்கும் நல்லதாகத் தோன்றியது.
14 ஆதலால், அவர்கள் சிலரை நியமித்தனர். அவர்கள் அரசனிடம் செல்ல, அரசனும் புறவினத்தாரின் வழக்கங்களை அவர்களும் அனுசரிக்க அனுமதி அளித்தான்.
15 புற மதத்தாருடைய வழக்கம் போல், அவர்களும் யெருசலேமில் கல்விக்கூடம் ஒன்று ஏற்படுத்தினார்கள்.
16 தங்கள் பரிசுத்த உடன்படிக்கையை விட்டு விட்டு, நூதன ஏற்பாடுகளை அனுசரித்து, அன்னியர்களோடு கலந்து, பொல்லாங்குகளுக்குத் தங்களையே கையளித்தார்கள்.
17 அந்தியோக்கஸ் தன் அரசை உறுதிப்படுத்திய பின்னர், எகிப்து நாட்டிலும் அரசாளத் தொடங்கினான்@ இரண்டு நாடுகளையும் ஆண்டு வந்தான்.
18 வலிமை பொருந்திய சேனைகள், தேர்கள், யானைகள், குதிரைகள், கப்பல்கள் இவைகளோடு எகிப்து நாட்டில் புகுந்து.
19 எகிப்து மன்னனான தோலெமேயுசோடு அவன் போர்தொடுக்கவே, தோலெமேயுஸ் பயந்து, எதிர்த்து நிற்க மாட்டாமல் ஓடினான்.
20 பலரும் காயமுற்று மடிந்தார்கள். அவன் எகிப்து நாட்டில் பல கோட்டைகளைப் பிடித்தான். நாடெங்கும் கொள்ளையடித்தான்.
21 எகிப்தைக் கொள்ளையடித்த பிறகு அந்தியோக்கஸ் நூற்று நாற்பத்து மூன்றாம் ஆண்டு திரும்பி, இஸ்ராயேலைத் தாக்கி,
22 வலிமை பொருந்திய சேனையோடு யெருசலேம் சென்றான்.
23 அகந்தைச் செருக்கோடு கடவுள் ஆலயத்தில் புகுந்து, பொற்பீடத்தையும் விளக்குத் தண்டுகளையும் எல்லாப் பாத்திரங்களையும், அப்பங்கள் வைக்கப்படும் மேசைகளையும், தட்டுகளையும் கிண்ணங்களையும், பொன் தூபக் கலசங்களையும், திரையையும் முடிகளையும், ஆலயத்தின் முகப்பில் இருந்த பொன் அணிகளையும் கொள்ளையடித்து உடைத்து விட்டான்.
24 வெள்ளி, பொன், விலையுயர்ந்த பாத்திரங்கள் ஒளித்து வைத்திருந்த செல்வங்கள் இவைகளையெல்லாம் கொள்ளையடித்துத் தன் நாடு திரும்பினான்.
25 மனிதரைக் கொன்று, அதிகச் செருக்குற்றிருந்தான்.
26 இஸ்ராயேல் மக்களிடையேயும், அவர்கள் நாடெங்கும் அழுகை புலம்பலாக இருந்தது.
27 பிரபுக்களும் மூத்தோர்களும் புலம்பினார்கள். கன்னிப்பெண்களும் இளைஞரும் நலிந்தனர். பெண்களின் அழகு மாறிப்போயிற்று.
28 ஆடவர் எல்லாரும் முறையிட்டு அழுதார்கள். மரணப்படுக்கையில் அமர்ந்திருந்த பெண்கள் எல்லாரும் கண்ணீர் விட்டார்கள்.
29 மக்கள் படும் துன்பத்தைக் கண்ட பூமியும் இளகினது. யாக்கோபு குலமும் துக்கத்தில் மூழ்கினது.
30 இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அரசன் திறை வாங்கும் தலைவன் ஒருவனை யூத நகரங்களுக்கெல்லாம் அனுப்பினான். அவன் பல சேனைகளோடு யெருசலேம் சேர்ந்தான்.
31 அவன் அவர்களுக்குச் சமாதான வார்த்தைகளைக் கபடமாய்ச் சொல்லவே, அவர்களும் நம்பினார்கள்.
32 அவன் திடீரென்று நகரத்திற்குள் பாய்ந்து, மக்களை வெகுவாய் வதைத்து இஸ்ராயேலரில் பலரைக் கொன்றான்.
33 நகரத்தைக் கொள்ளையடித்து, அதைக் கொளுத்தி வீடுகளை இடித்து, சுற்று மதில்களைத் தகர்த்து எறிந்தான்.
34 பெண்களைச் சிறைப்படுத்தி, பிள்ளைகளையும் ஆடு மாடுகளையும் வீரர்கள் கொண்டு போனார்கள்.
35 அவர்கள் தாவீதின் நகரத்தைப் பெரிய மதில்களாலும் கோபுரங்களாலும் வலுப்படுத்தி, அதைத் தங்கள் கோட்டையாக்கிக் கொண்டார்கள்.
36 தீயவரையும் கயவரையும் அவ்விடத்தில் நிறுத்தி வலுப்படுத்தினார்கள். போர்க்கருவிகளையும் உணவு வகைகளையும் சேகரித்து, யெருசலேமில் கொள்ளையடித்த பொருட்களையும் சேர்த்து வைத்தார்கள்.
37 அவ்விடத்திலேயே அவர்கள் தங்கி உளவு பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
38 கடவுளின் ஆலயத்திற்கு வருகிறவர்களுக்குத் தீங்காகவும், இஸ்ராயேலைக் கெடுக்கத் தேடும் பசாசைப் போலவும் இருந்தார்கள்.
39 புனித இடத்தைச் சுற்றிலும் மாசற்ற இரத்தத்தைச் சிந்தி, அதைத் தீட்டுப்படுத்தினார்கள்.
40 ஆதலால், அவர்களை முன்னிட்டு யெருசலேம் நகரத்தார் அதை விட்டு ஓடிப்போனார்கள். யெருசலேம் அன்னியருக்கு இருப்பிடமானது@ உரியவருக்கோ அன்னியமானது. மக்கள் அதை விட்டு அகன்றார்கள்.
41 கடவுளின் ஆலயம் பாழாகிப் பாலைவனம் போல் ஆனது. திருநாட்கள் துக்க நாட்களாக மாறின. ஓய்வு நாட்கள் அசட்டை செய்யப்பட்டு, அவற்றின் பெருமை குலையலாயிற்று.
42 அது எவ்வளவுக்குப் பெருமையுற்றிருந்ததோ அவ்வளவுக்குச் சிறுமையும் அவமானமும் அடைந்தது, அதன் பெருமை துக்கமாய் மாறியது.
43 அந்தியோக்கஸ் மன்னன் தன் நாட்டு மக்கள் எல்லாரும் ஒன்றாய் இருக்க வேண்டுமென்றும், தத்தம் வழக்கங்களை விட்டுவிட வேண்டுமென்றும் ஓலை அனுப்பினான்.
44 அந்தியோக்கஸ் மன்னனின் வார்த்தைப்படி நடக்க எல்லாரும் இசைந்தார்கள்.
45 இஸ்ராயேலரிலும் பலர் அவனுக்கு அடிமைகளாக இசைந்து, சிலைகளுக்குப் பலியிட்டு ஓய்வுநாளைக் கெடுத்தார்கள்.
46 யூதர்களும் மற்றவர்களுடைய வழக்கங்களை அனுசரிக்கும்படி, யெருசலேமுக்கும் யூத நகரங்களுக்கும் சட்ட நூல்களைத் தூதர் வழியாக மன்னன் அனுப்பினான்.
47 அவர்கள் கடவுளின் ஆலயத்தில் பலிகளும், மற்ற இறை வழிபாடுகளும் நடவாதபடிக்கும்,
48 ஓய்வு நாட்களையும் மற்றத் திருநாட்களையும் அனுசரியாதபடிக்கும் தடுத்தார்கள்.
49 அரசன் புனித இடங்களையும், புனித இஸ்ராயேலரையும் கறைப்படுத்தும்படிக்கும் கட்டளையிட்டான்.
50 பீடங்கள், கோயில்கள், சிலைகள் இவைகளை அமைக்கவும், பன்றிகளையும் அசுத்தமான மிருகங்களையும் பலியிடவும் கட்டளையிட்டான்.
51 கடவுளின் கட்டளைகளையும், அவருடைய ஏற்பாடுகள் அனைத்தையும் மறந்து போகும்படியாகத் தங்கள் பிள்ளைகளை விருத்தசேதமின்றி விட்டு விடும்படிக்கும், அசுத்தமான பொருட்களாலும் தீய செயல்களாலும் அவர்கள் ஆன்மாக்களைக் கெடுக்கவும் கட்டளையிட்டான்.
52 அந்தியோக்கஸ் மன்னன் கட்டளைப்படி நடவாதவர்கள் சாவார்கள் என்று கட்டளை விதிக்கப்பட்டது.
53 இவ்வாறே நாடெங்கும் எழுதியனுப்பி, அதை அனுசரிக்கும்படி கட்டாயப்படுத்துவதற்கு அவன் தலைவர்களை நியமித்தான்.
54 யூத நகரங்கள் பலிகொடுக்கும்படி அவர்கள் கட்டளையிட்டார்கள்.
55 கடவுளுடைய கட்டளைகளை மீறியவர்களோடு வேறு பலரும் சேர்ந்து கொண்டு, நாட்டில் பற்பல தீமைகளைச் செய்தார்கள்.
56 இஸ்ராயேல் மக்களைத் தனியிடங்களுக்கும் மறைவிடங்களுக்கும் துரத்த, அவர்கள் ஓடி ஒளிந்து கொண்டார்கள்.
57 நூற்று நாற்பத்தைந்தாம் ஆண்டு காஸ்லேயு மாதம் பதினைந்தாம் நாள் கடவுளுடைய பீடத்தின் மேல் வெறுப்பூட்டும் சிலையை அவன் நிறுவினான்.
58 யூத நகரங்களைச் சுற்றிலும் அவர்கள் பீடங்களைக் கட்டினார்கள், வீடுகளின் கதவுகளுக்கு முன்பாகவும், மைதானங்களிலும் சாம்பிராணி ஏந்திப் பலியிட்டார்கள்.
59 கடவுளின் கட்டளைகள் அடங்கிய நூல்களைக் கிழித்து நெருப்பிலே எறிந்தார்கள்.
60 எவனெவனிடம் மறைநூல்களைக் கண்டார்களோ அவனையும், கடவுளின் கட்டளைகளை அனுசரிக்கிறவனையும் அரசன் ஆணைப்படி கொன்றார்கள்.
61 எல்லா நாடுகளிலும் எல்லா மாதங்களிலும் இஸ்ராயேல் மக்களில் எவரெவரைக் கண்டார்களோ அவர்களை எல்லாம் இவ்விதமாய்க் கொடுமை செய்தார்கள்.
62 மாதத்தின் இருபத்தைந்தாம் நாள் பீடத்துக்கு முன்பாக இருந்த மேடையில் பலியிட்டார்கள்.
63 தங்கள் பிள்ளைகளுக்கு விருத்தசேதனம் செய்வித்த பெண்களை அந்தியோக்கஸ் கட்டளைப்படி அவர்கள் கொன்றார்கள்.
64 வீடுதோறும் பிள்ளைகளைத் தாய்மார் கழுத்திலும் தூக்கிட்டு, அவர்களுக்கு விருத்தசேதனம் செய்தவர்களைக் கொலைச் செய்தார்கள்.
65 இஸ்ராயேலரில் பலர் அசுத்தமான உணவுப் பொருட்களைச் சாப்பிடுவதில்லையென்று தங்களுக்குள் தீர்மானம் செய்து கொண்டார்கள். அசுத்தமான உணவுப் பொருட்களைச் சாப்பிட்டுத் தங்களை மாசுப்படுத்திக் கொள்வதை விடச் சாகத் துணிந்திருந்தார்கள்.
66 கடவுளின் புனித கட்டளைகளை மீற மனமற்றவர்களாய் இருந்தார்கள். ஆதலால், கொலையுண்டார்கள். எனவே மக்கள் மிக்க கோபம் கொண்டனர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
1 மக்கபே ஆகமம் - பழைய ஏற்பாடு, அவன், அந்தியோக்கஸ், கடவுளின், ஆண்டு, பிறகு, எல்லாரும், தங்கள், ஆதலால், விட்டு, ஏற்பாடு, புனித, எகிப்து, யெருசலேம், பழைய, அசுத்தமான, அவர்களும், மக்கள், வழக்கங்களை, கொண்டார்கள், கட்டளையிட்டான், அவர்களை, மன்னன், பலர், சுற்றிலும், நூற்று, கட்டளைகளை, அனுப்பினான், செய்து, அரசன், வலிமை, இஸ்ராயேல், எல்லா, பொன், நாடெங்கும், நாட்டில், செய்தார்கள், மக்கபே, ஆகமம், அதைத், இஸ்ராயேலரில், கொண்டு, இருந்தார்கள், வேண்டுமென்றும், கொன்றார்கள், கண்டார்களோ, விருத்தசேதனம், உணவுப், பொருட்களைச், பலியிட்டார்கள், நாள், பெருமை, அனுசரிக்கும்படி, கட்டளைப்படி, கடவுளுடைய, ஓய்வு, புகுந்து, திறை, நாடுகளையும், தான், அவர்களுக்குப், பிரபுக்களும், நிறுவினான், முன்பாக, மிக்க, அலெக்சாந்தர், அனைத்தையும், கொள்ளையடித்தான், ஆன்மிகம், திருவிவிலியம், பின், பலரும், புதல்வனான, கொள்ளையடித்த, ஆலயத்தில், இருந்த, பொருந்திய, இரண்டு, பெரிய, நாம், போல், யெருசலேமில், கொள்ளையடித்து