ஞான ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 1
2 ஏனெனில் அவரைச் சோதிக்காமல் இருக்கிறவர்கள்அவரைக் கண்டடைவார்கள்@ அவர் மேல் அவநம்பிக்கை கொள்ளாதவர்களுக்கு அவர் தம்மையே வெளிப்படுத்துகிறார்.
3 நெறி கேடான சிந்தனைகள் மனிதனைக் கடவுளிடமிருந்து பிரிக்கின்றன, அவரது வல்லமை சோதிக்கப்படுமாயின் அது அறிவிலிகளை வெட்கி நாணச் செய்யும்.
4 ஏனெனில் கயமைநிறை ஆன்மாவில் ஞானம் நுழையாது, பாவத்திற்கு அடிமையாகிவிட்ட உடலில் அது குடிகொள்ளாது.
5 நம்மைப் பயிற்றுவிக்கும் பரிசுத்த ஆவி வஞ்சகத்தை விட்டு அகலும்@ அறிவற்ற எண்ணங்களை விட்டு விலகும்@ அக்கிரமம் அண்மையில் நெருங்கும் போதே விலகி ஒதுங்கும்.
6 ஏனெனில் ஞானம் பரிவு காட்டும் இறை ஆவி, ஆயினும் இறைவனைப் பழிப்பவனது சொற்களை அது பொறுக்காது@ கடவுள் அவன் உள்ளுணர்ச்சிகளுக்கும் சாட்சியாவார், அவன் உள்ளத்தை உள்ளவாறு நோக்குபவர் அவரே, அவனது நாக்கு உரைப்பதைக் கேட்கிறார்.
7 ஏனெனில் ஆண்டவரின் ஆவி உலகை நிரப்பியுள்ளது, அனைத்தையும் சேர்த்திணைக்கும் அது பேசப்படும் சொல் ஒவ்வொன்றையும் அறியும்.
8 ஆதலால் நேர்மையற்றதைப் பேசுபவன் அதன் கவனத்திற்குத் தப்ப மாட்டான், தண்டனை வழங்கும் போது நீதி அவனைத் தப்பவிடாது.
9 ஏனெனில் பொல்லாதவனின் நினைவுகள் பரிசோதிக்கப்படும், அவன் பேசிய சொற்களின் விவரம் ஆண்டவருக்கு எட்டும், அவனுடைய நெறிகெட்ட செயல்கள் கண்டிக்கப்படும்.
10 ஏனெனில் வைராக்கியமுள்ள இறைவனின் செவி அனைத்தையும் கேட்கிறது, முறைப்பாடுகளின் ஒலியும் அதற்கு மறைவானதன்று.
11 ஆதலால் பயனற்ற முறைப்பாடுகளைப்பற்றி எச்சரிக்கையாயிருங்கள், புறணிப் பேச்சினின்று உங்கள் நாவைக் காத்துக்கொள்ளுங்கள், ஏனெனில் மறைவாய்ப் பேசிய சொல்லும் தண்டனைக்குத் தப்பாது, பொய் சொல்லும் வாயானது ஆன்மாவைக் கொல்லுகிறது.
12 நெறிதவறிய வாழ்க்கையால் சாவை ஆவலோடு தேடாதீர்கள். உங்கள் சொந்த செயல்களால் அழிவை வருவித்துக் கொள்ளாதீர்கள்.
13 ஏனெனில் சாவைக் கடவுள் உண்டாக்கவில்லை. வாழ்வோரின் அழிவைக் கண்டு அவர் மகிழ்வாரல்லர்.
14 ஏனெனில் நிலைத்திருக்கும்படிக்கே அனைத்தையும் படைத்தார், உலகில் உயிர்கள் யாவும் நலம் பயப்பவை, அழிவு விளைக்கும் நஞ்செதுவும் அவற்றில் இல்லை, கீழுலகின் ஆட்சி மண்ணுலகில் இல்லை.
15 நீதி சாகாமையுடைத்து.
16 பொல்லாதவர்களோ தங்கள் சொல்லாலும் செயலாலும் சாவை வரவழைத்தார்கள்@அதை நண்பனாகக் கருதி அதற்காக ஏங்கினார்கள், அதனோடு ஒப்பந்தம் செய்துகொண்டார்கள், அவர்கள் அதன் கூட்டாளிகளாய் இருக்கத்தக்கவர்களே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஞான ஆகமம் - பழைய ஏற்பாடு, ஏனெனில், ஏற்பாடு, பழைய, அவர், அவன், அனைத்தையும், ஆகமம், பேசிய, நீதி, இல்லை, சாவை, சொல்லும், உங்கள், விட்டு, ஆன்மிகம், திருவிவிலியம், மேல், ஞானம், கடவுள், ஆதலால்