நாகும் ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 1
2 ஆலேஃப்: ஆண்டவர் பொறாமையுள்ள கடவுள், பழிவாங்குபவர்@ ஆண்டவர் பழிவாங்குபவர், வெகுண்டெழுபவர். ஆண்டவர் தம் எதிரிகளைப் பழிவாங்குகிறவர், தம் பகைவர் மீது கோபம் பாராட்டுகிறவர்.
3 ஆண்டவர் விரைவில் கோபம் கொள்ளார், மிகுந்த ஆற்றலுள்ளவர்@ ஆண்டவர் குற்றவாளிகளை எவ்வகையிலும் தண்டிக்காமல் விடமாட்டார். பேத்: சுழற்காற்றிலும் புயற்காற்றிலும் அவர் வழி நடக்கிறார், மேகங்கள், அவர் நடக்கும் போது எழும் புழுதிப்படலம்.
4 கீமேல்: கடலை அதட்டுகிறார், அதை வற்றச்செய்கிறார்@ ஆறுகளையெல்லாம் உலர்ந்துபோகச் செய்கிறார். தாலேத்: பாசானும் கர்மேலும் வதங்கிப்போகின்றன, லீபானின் மலர்கள் வாடிப் போகின்றன.
5 ஹே: மலைகள் அவர் முன்னிலையில் அதிர்கின்றன, குன்றுகள் அவர்முன் கரைகின்றன. வெள: நிலமும் உலகமும் அதிலுள்ள யாவும் அவர் முகங்கண்டு நடுங்குகின்றன.
6 ஸாயின்: அவர் கடுஞ்சினத்தை எதிர்த்துநிற்கக் கூடியவன் யார்? அவர் கோபத்தீயின் வெப்பத்தைத் தாங்குபவன் எவன்? ஹேத்: தீயைப்போல் அவர் கோபம் கொட்டுகிறது, பாறைகளும் அவர்முன் வெடிக்கின்றன.
7 தேத்: ஆண்டவர் நல்லவர், துன்ப காலத்தில் காவலரண் போல் இருக்கிறார்@
8 காஃப்: தம்மை அவமதிப்போரைப் பொங்கியெழும் வெள்ளத்தால் அழித்திடுவார், தம் பகைவர்களை இருளுக்குள் விரட்டியடிப்பார்.
9 ஆண்டவருக்கு எதிராய் நீங்கள் போடும் திட்டமென்ன? அழிவு கொணர்பவர் அவரே, கொடுமை மறுபடி தலைகாட்டாது.
10 பின்னிக் கிடக்கும் முட்புதர் போலும், காய்ந்த சருகு போலும் முற்றிலும் எரிந்து போவார்கள்.
11 அசீரியாவுக்கு ஆண்டவருக்கு எதிராய்த் திட்டம் தீட்டும் தீய சிந்தனையாளன் உன்னிடமிருந்தன்றோ தோன்றினான்?
12 யூதாவுக்கு ஆண்டவர் கூறுவது இதுவே: "அவர்கள் வல்லவர்களாயினும், பெருந்தொகையினராயினும் வெட்டி வீழ்த்தப்பட்டு அழிந்து போவார்கள்@ உன்னை நாம் இது வரை துன்புறுத்தியிருந்தாலும், இனி மேல் உன்னைத் துன்புறுத்தமாட்டோம்.
13 இப்பொழுதே, உன் மேல் இருக்கும் அவன் நுகத்தை முறித்து, உன் கட்டுகளை நாம் தறித்துவிடுவோம்." நினிவே அரசனுக்கு
14 ஆண்டவர் உன்னைப்பற்றி இட்ட தீர்ப்பு இதுவே: "உன் பெயரைத் தாங்கும் சந்ததியே இல்லாமற் போகும்@ உன் தெய்வங்களின் இல்லத்திலிருந்து செதுக்கிய சிலைகளையும் வார்ப்புப் படிமங்களையும் அழிப்போம். நாமே உனக்குக் குழிவெட்டுவோம், ஏனெனில் நீ வெறுக்கத் தக்கவன்."
15 யூதாவுக்கு இதோ, சமாதானத்தை அறிவிக்கும் நற்செய்தியைக் கொண்டு வருகிறவனின் கால்கள் மலைகளின் மேல் நடந்து வருகின்றன! யூதாவே, உன் திருவிழாக்களைக் கொண்டாடு, உன் நேர்ச்சிக் கடன்களை நிறைவேற்று@ ஏனெனில் பெலியால் உன் நடுவில் இனி வரவே மாட்டான், அவன் முற்றிலும் அழிந்து போனான்.
1 | 2 | 3 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நாகும் ஆகமம் - பழைய ஏற்பாடு, ஆண்டவர், அவர், ஏற்பாடு, ", நாகும், பழைய, கோபம், மேல், ஆகமம், அழிந்து, நாம், ஏனெனில், அவன், இதுவே, அவர்முன், ஆன்மிகம், திருவிவிலியம், நினிவே, ஆண்டவருக்கு, முற்றிலும், போலும், யூதாவுக்கு