2 மக்கபே ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 1
2 உங்களுக்கு ஆண்டவர் நன்மை செய்து, தம் உண்மையுள்ள ஊழியரான ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்பவர்களுடன் செய்தருளிய வாக்குறுதியை நினைவு கூர்வாராக.
3 தமக்கு ஊழியம் புரியவும், தம்முடைய திருவுளத்தைத் தாராள இதயத்தோடும் விருப்புடனும் நிறைவேற்றவும் வேண்டிய மனத்தை உங்களெல்லோருக்கும் கடவுள் கொடுத்தருள்வாராக.
4 தம்முடைய கட்டளைகளிலும் சட்டங்களிலும் உங்கள் இதயத்தைத் திறந்து சமாதானம் அளிப்பாராக.
5 உங்கள் மன்றாட்டுகளைக் கேட்டு, உங்கள் மீது அருள் கூர்ந்து, துன்பகாலத்தில் உங்களைக் கைவிடாதிருப்பாராக.
6 இப்போது நாங்களோ இவ்விடத்தில் உங்களுக்காக வேண்டிக்கொண்டு வருகிறோம்.
7 நூற்றறுபத்தொன்பதாம் ஆண்டு தெமெத்திரியுஸ் ஆட்சியில், யாசோன் புனித நாட்டையும் அரசையும் விட்டகன்றது முதல் அந்த ஆண்டுகளில் எங்களுக்கு நேரிட்ட துன்பத்திலும் கொடுமையிலும் யூதராகிய நாங்கள் உங்களுக்கு எழுதினோம்.
8 அவர்கள் கதவை எரித்து விட்டார்கள்@ மாசற்ற இரத்தத்தைச் சிந்தினார்கள். நாங்கள் ஆண்டவரை மன்றாடினோம். எங்கள் மன்றாட்டு கேட்கப்பட்டது. நாங்கள் பலியும் கோதுமை மாவும் காணிக்கை கொடுத்தோம்@ விளக்குகளை ஏற்றினோம்@ அப்பங்களைப் படைத்தோம்.
9 ஆதலால், இப்போது நிங்கள் காஸ்லேயு மாதத்தில் கூடாரத் திருநாளைக் கொண்டாடுங்கள்.
10 நூற்றெண்பத்தெட்டாம் ஆண்டு யெருசலேமிலும் யூதேயா நாட்டிலுமுள்ள மக்களும், சங்கத்தாரும் யூதாசும் அரசனான தோலெமேயுசுடைய ஆசிரியரும், அபிஷேகம் பண்ணப் பட்ட குருக்கள் வம்சத்தில் உதித்தவருமான அரிஸ்தோபோலுசுக்கும், எகிப்திலுள்ள யூதருக்கும் வாழ்த்துகளும் நலமும் கூறுகிறார்கள்.
11 பெரும் ஆபத்துகளிளனின்று கடவுளால் காப்பாற்றப்பட்ட நாங்கள் இத்தகைய அரசனை எதிர்த்தும் போர் செய்தமையால் கடவுளுக்கு நன்றியறிந்த வாழ்த்துகளைக் கூறுகிறோம்.
12 எங்களையும் புனித நகரையும் எதிர்த்துப் போர் செய்த அவர்களை அவரல்லவோ பாரசீகத்தினின்று வெளியேறச் செய்தவர்!
13 ஏனென்றால், அவன் பாரசீகத்தில் படைத்தலைவனாய் இருந்த போது, நானேயா என்னும் தேவதையின் குருக்களுடைய சதித்திட்டத்தால் ஏமாற்றப்பட்டுத் திரளான படைகளோடு நானேயா தேவதையின் ஆலயத்தில் மாண்டான்.
14 ஏனென்றால், அவளோடு வாழ்வதற்கும் சீதனம் என்னும் போர்வையின் கீழ் பெருஞ் செல்வம் பெறுவதற்கும் அந்தியோக்கஸ் என்பவனும் அவன் நண்பரும் அவ்விடம் வந்தார்கள்.
15 நானேயாவின் குருக்கள் அச்செல்வத்தினை அவன் முன்பாக வைத்தார்கள். அவன் சிலரோடு ஆலயத்தின் உள்ளே நுழைந்ததும், ஆலயத்தின் கதவுகளை அடைத்து விட்டார்கள்.
16 அந்தியோக்கஸ் உள்ளே நுழைந்த போது, ஆலயத்தின் இரகசியக் கதவைத் திறந்து, படைத்தலைவனையும் அவனுடன் இருந்தவர்களையும் கற்களால் அடித்துக் கொன்றார்கள்@ அவர்களைத் துண்டு துண்டாக்கி, தலைகளை வெட்டி வெளியே எறிந்தார்கள்.
17 அக்கிரமிகளைக் காட்டிக் கொடுத்த கடவுள் எல்லாவற்றிலும் வாழ்த்தப்படக்கடவாராக.
18 காஸ்லேயு மாதம் இருபத்தைந்தாம் நாள் கடவுள் ஆலயத்தைத் தூய்மைப்படுத்த வேண்டியிருப்பதால், உங்களுக்கு அதை அறிவிப்பது அவசியமென்று எண்ணினோம். நீங்களும் உடன்படிக்கைப் பெட்டியின் நாளையும், நெகேமியா கடவுளின் ஆலயத்தைக் கட்டிப் பீடத்தில் பலியிட்ட போது கொடுக்கப்பட்ட நெருப்பின் நாளையும் கொண்டாட வேண்டியிருக்கிறது.
19 ஏனென்றால், நம்முடைய முன்னோர் பாரசீக நாட்டிற்கு இட்டுச் செல்லப்பட்ட போது, கடவுளை ஆராதித்து வந்த குருக்கள் பீடத்தினின்று நெருப்பை எடுத்துக் கணவாயிலிருந்த ஆழமான வறண்ட ஒரு கிணற்றில் அதை ஒளித்து வைத்து, அந்த இடம் எவருக்கும் தெரியாத விதமாய் அதில் அதைக் காப்பாற்றி வந்தார்கள்.
20 பல ஆண்டுகள் சென்ற பிறகு நெகேமியா பாரசீக அரசனால் அனுப்பப்பட கடவுள் விரும்பிய போது, நெருப்பை ஒளித்து வைத்திருந்த குருக்களுடைய பேரப்பிள்ளைகளை அதைத் தேடும்படி அனுப்பினார். அவர்கள் எங்களுக்குச் சொன்னது போல நெருப்பைக் காணாமல் அடர்த்தி மிக்க தண்ணிரைக் கண்டார்கள்.
21 அவர் அத்தண்ணீரை மொண்டு தம்மிடம் கொண்டு வரும்படி கட்டளையிட்டார். இடப்பட்ட பலிகளின் மேலும் விறகின் மேலும் அதன் மீது வைக்கப்பட்டவைகளின் மேலும் அந்தத் தண்ணீரைத் தெளிக்கும்படி குரு நெகேமியா கட்டளையிட்டார்.
22 இப்படிச் செய்தவுடனே, முன் மேகத்தில் மறைந்திருந்த சூரியன் ஒளிவிடத் தொடங்கியது@ பெருந் தீ பற்றிக் கொண்டது.
23 எல்லாரும் வியப்பு அடைந்தார்கள். பலி எரியும் போது யோனத்தாஸ் தொடங்க, மற்றவர்கள் மறுமொழி சொல்ல, இவ்வகையாய் மன்றாடினார்கள்.
24 நெகேமியா மன்றாடிய வகையாவது: அனைத்தையும் படைத்து, பயங்கரத்துக்குரியவரும் வல்லமையுள்ளவரும் நீதியும் இரக்கமும் உள்ளவருமாகிய ஆண்டவரே, நீர் ஒருவரே நல்ல அரசர்.
25 நீர் ஒருவரே உத்தமர்@ நீர் ஒருவரே நீதியுள்ளவர்@ எல்லா வல்லமையும் உள்ளவர்@ என்றும் இருப்பவர்@ நீரே இஸ்ராயேலரைத் தீமைகள் அனைத்தினின்றும் காப்பாற்றுகிறீர். எங்கள் முன்னோரைத் தேர்ந்து கொண்டு, அவர்களைப் புனிதப்படுத்தினீர்.
26 உம்முடைய இஸ்ராயேல் மக்கள் எல்லாருக்காகவும் பலியை ஏற்றுக்கொள்ளும். உம்முடைய உடைமையைக் காப்பாற்றிப் புனிதப் படுத்தியருளும்.
27 சிதறிப்போன எங்கள் மக்களை ஒன்று சேரும். புறவினத்தார்க்கு அடிமைப் பட்டவர்களை மீட்டருளும். அவமதிக்கப்பட்டவர்களையும், வெறுத்துத் தள்ளப்பட்டவர்களையும் கண்ணோக்கும். நீர் எங்கள் கடவுளென்று புறவினத்தார் அறியக்கடவார்கள்.
28 எங்களைத் துன்புறுத்தி, அகந்தையால் அவமதிக்கிறவர்களைத் துன்பத்துக்குள்ளாக்கும்.
29 மோயீசன் சொன்னது போல, புனித இடத்தில் உம்முடைய மக்களை நிலைநிறுத்தும் என்று மன்றாடினார்.
30 குருக்களோ பலி எரியும் வரை இன்னிசை பாடினார்கள்.
31 பலிக்குப்பின் மீதித் தண்ணீரைப் பெரிய கற்களின் மேல் ஊற்றும்படி நெகேமியா கட்டளையிட்டார்.
32 அப்படிச் செய்தவுடனே அவற்றில் நெருப்பு பற்றிக் கொண்டது. ஆனால், பீடத்தினின்று வீசிய ஒளியினால் அது அவிக்கப்பட்டது.
33 இது வெளியான பின், குருக்கள் நெருப்பை ஒளித்து வைத்திருந்த இடத்தில் தண்ணீர் தோன்றியதென்றும், நேகேமியாவும் அவருடன் இருந்தவர்களும் அதைக் கொண்டு பலிகளைத் தூய்மையாக்கினார்களென்றும் பாரசீக மன்னனுக்கு அறிவிக்கப்பட்டது.
34 மன்னன் சிறிது ஆலோசித்தபின், தான் கேட்டவற்றைப் கவனத்தோடு விசாரித்து, நடந்தவற்றைப் பரிசோதிக்கும் படியாக கடவுளுக்கு ஓர் ஆலயத்தைக் கட்டினான்.
35 பரிசோதித்த பிறகு குருக்களுக்குப் பல செல்வங்களையும் வௌ;வேறு வெகுமதிகளையும் தானே கொடுத்தான்.
36 புனிதம் என்று பொருள் கொள்ளும் ~நெப்தார்~ என்னும் பெயரை நெகேமியா அந்த இடத்திற்கு இட்டார். பலர் நெப்பி என்றும் அதை அழைக்கிறார்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
2 மக்கபே ஆகமம் - பழைய ஏற்பாடு, நெகேமியா, போது, ஏற்பாடு, அவன், குருக்கள், கடவுள், நீர், எங்கள், நாங்கள், பழைய, புனித, ஆலயத்தின், மக்கபே, ஏனென்றால், ஒளித்து, ஒருவரே, உம்முடைய, மேலும், கட்டளையிட்டார், நெருப்பை, கொண்டு, பாரசீக, என்னும், ஆகமம், உங்கள், அந்த, உங்களுக்கு, வாழ்த்துகளும், நாட்டிலுமுள்ள, யெருசலேமிலும், வைத்திருந்த, பிறகு, செய்தவுடனே, சொன்னது, கொண்டது, என்றும், மக்களை, இடத்தில், திருவிவிலியம், ஆன்மிகம், அதைக், எரியும், பற்றிக், பீடத்தினின்று, நானேயா, மீது, தேவதையின், இப்போது, ஆண்டு, போர், கடவுளுக்கு, குருக்களுடைய, அந்தியோக்கஸ், ஆலயத்தைக், தம்முடைய, காஸ்லேயு, நாளையும், உள்ளே, வந்தார்கள், திறந்து, கூறுகிறார்கள்