மிக்கேயாஸ் ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 1
2 மக்களினங்களே, நீங்களனைவரும் கேளுங்கள்@ மண்ணுலகமே, அதிலுள்ளவையே, நீங்களும் செவிசாயுங்கள்@ இறைவனாகிய ஆண்டவர் உங்களுக்கு எதிராய்ச் சாட்சிகூறப் போகிறார்@ ஆண்டவர் தமது பரிசுத்த கோயிலிலிருந்து பேசுகிறார்.
3 இதோ, ஆண்டவர் தம் இருப்பிடத்திலிருந்து புறப்படுகிறார், இறங்கி வந்து உயர்ந்த இடங்களை மிதித்து நடப்பார்@
4 நெருப்பின் முன்னால் வைக்கப்பட்ட மெழுகு போலவும், பாதாளத்தில் பாய்ந்தோடும் வெள்ளம் போலவும் அவர் காலடியில் மலைகள் கரைந்து போகும், பள்ளத்தாக்குகள் பிளந்து போகும்.
5 இவையெல்லாம் யாக்கோபின் மீறுதலை முன்னிட்டும், இஸ்ராயேல் வீட்டாரின் பாவங்களை முன்னிட்டும் நேரிடும். யாக்கோபின் குற்றம் யாது? சமாரியா அல்லவோ? யூதா வீட்டாரின் பாவம் யாது? யெருசலேம் அல்லவோ?
6 ஆகையால் சமாரியாவைப் பாழடைந்த மண்மேடாகவும், திராட்சைத் தோட்டங்கள் வைக்கும் இடமாகவும் செய்வோம்@ அதன் கற்களைப் பள்ளத்தாக்குகளில் உருட்டி விடுவோம், அதன் அடிப்படைகளை வெளியில் வாரி எறிவோம்.
7 அதன் படிமங்கள் யாவும் துகள் துகளாக்கப்படும், வருமானங்கள் எல்லாம் நெருப்பினால் எரிக்கப்படும்@ அதன் சிலைகளை எல்லாம் நாம் நொறுக்கிப் போடுவோம். ஏனெனில் விலைமகளுக்குரிய பணயமாய் அவை சேர்க்கப்பட்டவை, விலைமகளுக்குரிய பணயமாகவே அவை போய்விடும்.
8 ஆதலால் நான் ஓலமிட்டழுவேன், வெறுங்காலோடும் ஆடையின்றியும் திரிவேன்@ குள்ளநரிகள் போல் ஊளையிடுவேன், நெருப்புக்கோழிகள் போலப் புலம்புவேன்.
9 அதன் புண் ஆறாதது, யூதா வரையில் புரையோடியுள்ளது, என் மக்களின் வாயிலாகிய யெருசலேம் வரை வந்து விட்டது.
10 காத் நகரத்தில் இதை அறிவித்தல் வேண்டா, கண்ணீர் சிந்திப் புலம்ப வேண்டா@ பேத்- லெயாபிராவில் புழுதியில் விழுந்து புரளுங்கள்.
11 ஷாப்பீரின் குடிகளே, ஆடையின்றி நாணத்துடன் அகலுங்கள், ஸானானில் வாழ்பவர்கள் வெளியில் புறப்படவில்லை@ பேத்- எசெல் தனது அடித்தளத்தினின்று, உறுதியான அடைப்படையிலிருந்து தகர்க்கப்பட்டது.
12 மாரோத் நகர மக்கள் நன்மை வருமென ஏக்கத்தோடு காத்திருக்கின்றனர், ஏனெனில் தீங்கு ஆண்டவரிடமிருந்து இறங்கி யெருசலேமின் வாயில் மேல் விழுந்தது.
13 லாக்கீஷ் நகரமே, விரைந்தோடும் குதிரைகளைத் தேர்களோடு சேர்த்துப் பூட்டு@ சீயோன் மகளின் பாவத்திற்கு நீயே ஊற்று, இஸ்ராயேலின் குற்றங்களை முதலில் பின்பற்றியது நீயே.
14 ஆதலால், மோரெஷெத் - காத்துக்கு நீ சீதனம் கொடுப்பாய், ஆக்ஸிப் வீடுகள் இஸ்ராயேல் அரசர்களுக்குக் கானல் நீராய்ப் போகும்.
15 மரேஷா குடிகளே, கொள்ளைக் காரன் உங்கள் மேல் திரும்பவும் வருவான், இஸ்ராயேலின் மகிமை அதுல்லாம் வரை செல்லும்.
16 உங்கள் செல்லப் பிள்ளைகளைக் குறித்து, உங்கள் தலை மயிரை வெட்டி மழித்துக் கொள்ளுங்கள்@ கழுகைப் போல முற்றிலும் மழித்துக் கொள்ளுங்கள், ஏனெனில் அவர்கள் உன்னிடமிருந்து நாடு கடத்தப்படுவார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
மிக்கேயாஸ் ஆகமம் - பழைய ஏற்பாடு, ஏற்பாடு, பழைய, ஆண்டவர், ஏனெனில், மிக்கேயாஸ், உங்கள், ஆகமம், போகும், விலைமகளுக்குரிய, ஆதலால், வெளியில், எல்லாம், மேல், இஸ்ராயேலின், மழித்துக், நீயே, யெருசலேம், குடிகளே, பேத், வீட்டாரின், அவர், இறங்கி, மோரெஷெத், ஆன்மிகம், திருவிவிலியம், வந்து, போலவும், யாது, அல்லவோ, இஸ்ராயேல், முன்னிட்டும், யாக்கோபின், யூதா