ஒட்டக் கூத்தர் நூல்கள் - குலோத்துங்க சோழன் உலா - மூவருலா
இரண்டாம் குலோத்துங்கன் மீது ஒட்டக் கூத்தர் பாடியது குலோத்துங்க சோழன் உலா ஆகும்.
நூல்
தேர்மேவு பாய்புரவிப் பாசடைச் செங்கமலம் போர்மேவு பாற்கடற் பூத்தனையோன் - பார்மேல் | 1 |
மருளப் பசுவொன் றின் மம்மர்நோய் தீர உருளுந் திருத்தே ருரவோன் - அருளினாற் | 2 |
பேராப் பெரும்பகை தீரப் பிறவேந்தர் ஊராக் குலிர விடையூர்ந்தோன் - சோராத் | 3 |
துயில்காத் தரமகளிர் சோர்குழைகாத் தும்பர் எயில்காத்த நேமி யிறையோன் - வெயில்காட்டும் | 4 |
அவ்வா னவர்கோ னொருமணி யாசனத்தில் ஒவ்வாம லேத்த வுடனிருந்தோன் - கல்வை | 5 |
எழக்குரைக்கும் பேழ்வா யிருங்கூற்றுக் கேற்ப வழக்குரைக்குஞ் செங்கோல் வளவன் - பழக்கத்தாற் | 6 |
போந்த புலியுடனே புல்வா யொருதுறைநீர் மாந்த வுலகாண்ட மன்னர்பிரான் - காந்தெரியில் | 7 |
வெந்தா ருயிர்பெற் றுடல்பெற்று விண்ணாள மந்தா கினிகொணர்ந்த மன்னர்கோன் - முந்திப் | 8 |
பொருதேர்க ளீரைந்தி னீரைவர் போர்பண் டொருதேரால் வென்ற வுரவோன் - கருதி | 9 |
மலைபத்தும் வெட்டு முருமின் உறவோன் தலைபத்தும் வெட்டுஞ் சரத்தோன் - நிலைதப்பா | 10 |
மீளி தலைகொண்ட தண்டத்தான் மீளிக்குக் கூளி தலைபண்டு கொண்டகோன் - நாளும் | 11 |
பதுமக் கடவுள் படைப்படையக் காத்த முதுமக்கட் சாடி முதலோன் - பொதுமட்க | 12 |
வாங்கொயி னேமி வரையாக மண்ணாண்டு தூங்கெயில் கொண்ட சுடர்வாளோன் - ஓங்கிய | 13 |
மால்கடற் பள்ளி வறிதாக மண்காத்து மேல்கடல் கீழ்கடற்கு விட்டகோன் - கோல்கொன் | 14 |
றலையெறியுங் காவேரி யாற்றுப் படைக்கு மலையெறியு மன்னர்க்கு மன்னன் - நிலையறியாத் | 15 |
தொல்லார் கலைவலையந் தோள்வலைய முன்றிருந்த வில்லா னடுவுள்ள வெற்பெடுத்தோன் - ஒல்லைக் | 16 |
கொலையே நுடம்படையக் கொய்தாலு மெய்தாத் துலையேறி வீற்றிருந்த தோன்றல் - தலையேறு | 17 |
மண்கொண்ட பொன்னிக் கரைகாட்ட வாராாதாள் கண்கொண்ட சென்னிக் கரிகாலன் -எண்கொள் | 18 |
பணம்புணர்ந்த மோலியான் கோமகளைப் பண்டு மணம்புணர்ந்த கிள்ளி வளவன் - அணங்கு | 19 |
படுத்துப் பொறையனைப் பொய்கைக்குப் பண்டு கொடுத்துக் களவழிப்பாக் கொண்டோன் - அடுத்தடுத்துச் | 20 |
சீறுஞ் செருவிற் றிருமார்பிற் றொண்ணூறும் ஆறும் படுதழும்பி னாகத்தோன் - ஏறப் | 21 |
பிரம வரக்க னகலம் பிளந்து பரமர் திருத்தில்லை பார்த்தோன் - நரபதியர் | 22 |
தாழமுன் சென்று மதுரைத் தமிழ்ப்பதியும் ஈழமுங் கொண்ட விகலாளி - சூழ்வும் | 23 |
ஏறிப் பகலொன்றி லெச்சுரமும் போயுதகை நூறித்தன் றூதனை நோக்கினான் - வேறாகக் | 24 |
கங்கா நதியுங் கடாரமுங் கைவரச் சிங்கா தனத்திருந்த செம்பியர்கோன் -எங்கோன் | 25 |
புவிராச ராசர் மனுமுதலோர் நாளில் தவிராத சுங்கத் தவிர்த்தோன் - கவிராசர் | 26 |
போற்றும் பெரியோ னிவன்பின்பு பூதலங்கள் ஆற்றுந் திருந்தோ ளகளங்கன் - வேற்றார் | 27 |
விரும்பரணில் வெங்களத்தி வேட்டுக் கலிங்கப் பெரும்பரணி கொண்ட பெருமான் - தரும்புதல்வன் | 28 |
கொற்றக் குலோத்துங்க சோழன் குவலயங்கள் முற்றப் புரக்கு முகில்வண்ணன் - பொற்றுவரை | 29 |
இந்து மரபி லிருக்குந் திருக்குலத்தில் வந்து மனுகுலத்தை வாழ்வித்த - பைந்தளிர்க்கை | 30 |
மாதர்ப் பிடிபெற்ற வாரணமவ் வாரணத்தின் காதற் பெயரன் கனகளபன் - யாதினும் | 31 |
தீட்டக் கரிய திருவே திருமாலை சூட்டத் திருமகுடஞ் சூடியபின் - நாட்டு | 32 |
முறைவிட்ட வேற்று முடிமன்னர் தத்தம் சிறைவிட் டரசருளிச் செய்து - கறைவிட்டு | 33 |
மைஞ்ஞாசு மெட்டு மதநாக மோரொட்டும் பைஞ்ஞாசு மெட்டும் பரந்தீர - இஞ்ஞாலம் | 34 |
தாதைக்குப் பின்பு தபனற்குந் தோலாத போதத் திமிரப் பொறைநீக்கி - மாதரில் | 35 |
ஒக்க வபிடேகஞ் சூடு முரிமைக்கண் தக்க தலைமைத் தனித்தேவி - மிக்க | 36 |
புவனி முழுதுடைய பொற்றொடியுந் தானும் அவனி சுரர்கருதி யார்ப்ப - நவநிதிதூய் | 37 |
தில்லையிற் செய்த திருப்பணிகள்
ஏத்துத் தருங்கடவு ளெல்லையி லானந்தக் கூத்துக் களிகூரக் கும்பிட்டுப் - போத்தின்மேற் | 38 |
றில்லைத் திருமன்ற முன்றிற் சிறுதெய்வத் தொல்லைக் குறும்பு தொலைத்தெடுத்து - மல்லற் | 39 |
றசும்பு வளர்கனித் தண்பெரு நாவல் அசும்பு பசும்பொ னடுக்கிப் -பசும்பொன் | 40 |
அலகை யிகந்த அசலகுல வச்ரப் பலகை ததும்பப் பதித்து - மலர்கவிகைக் | 41 |
காக்குங் கடலேழின் முத்தும் வரகங்கை தூக்கு மருவியிற் சூழ்போக்கி - நோக்கம் | 42 |
தொடுக்குஞ் சிரச்சேடன் சூடா மணிகொண் டெடுக்குந் திருத்தீப மேற்றி - அடுக்கிய | 43 |
தூய வயிரத்தால் வாவியாய்ச் சூழ்கடந்த பாய மரகத்தாற் பாசடையாய்த் - தூய | 44 |
பருமுத்தா வாலியாய்ப் பற்பரா கத்தால் திருமிக்க செந்தா மரையாய்ப் - பெருவர்க்க | 45 |
நீலத்தால் வண்டி னிரையா யுரையிருந்த கோலத்தாற் கோயிற் பணி குயிற்றிச் - சூலத்தான் | 46 |
ஆடுந் திருப்பெரும்பே ரம்பலமுங் கோபுர மாடம் பரந்தோங்கு மாளிகையும் - கூடிப் | 47 |
பொலங்கோட்டு மாமேருப் பூதரமும் போய வலங்கோட் டிகிரியு மானத் - தலங்கொள் | 48 |
நிலையேழு கோபுரங்க ணேரே நெருங்க மலையேழு மென்ன வகுத்துத் - தலையில் | 49 |
மகரங்கொள் கோபுரங்கண் மாக விமானச் சிகரங்க ளாகித் திகழ - நிகரில் | 50 |
எரிபொற் படர்பாறை யென்னலா யெங்கும் விரிபொற் றிருமுற்ற மின்னச் - சொரிபொற் | 51 |
கடாரப் பனிநீர் கவினிக் கனபொற் றடாகங்க ளாகித் ததும்ப - விடாதுநின் | 52 |
றற்பக லாக வனந்த சதகோடி கற்பக சாதி கதிர்கதுவப் -பொற்பூண் | 53 |
வரமகளிர் தத்தம் பணிமுறைக்கு வந்த சுரமகளி ராகித் துறும - ஒருதான் | 54 |
பிறக்கு மிமயப் பெருங்கடவுட் குன்றம் மறக்கும் படிசெல்வ மல்கச் - சிறக்கும் | 55 |
இருக்காதி யெம்மறையு மெவ்வுலகு மீன்றாள் திருக்காமக் கோட்டந் திகழ்வித் - தருக்கர் | 56 |
புனையா மணியாலும் பொன்னாலு மின்ன மனையாலோ ரோர்தேர் வகுத்து - முனைவன் | 57 |
திருவீதி யீரண்டுந் தேவர்கோன் மூதூர்ப் பெருவீதி நாணப் பிறக்கி - வருநாளிற் | 58 |
பொங்கார் கவிசூழ் புவனம் பதினாலும் கங்கா புரிபுகுந்து கண்டுவப்பத் - தங்கள் | 59 |
புவனி பெறவந்த பூபாலர்க் கெல்லாம் பவனி யெழுச்சி பணித்துக் -கவினும் | 60 |
மடமயி லொக்க மகுடங் கவித்தாள் உடனுறை பள்ளி யுணர்ந்து - தடமுகில் | 61 |
அஞ்சன சைலத் தபிடேகஞ் செய்வதென மஞ்சன மாடி வழிமுதற் - செஞ்சடை | 62 |
வானவன் பொற்றாள் வணங்கி மறையவர்க்குத் தான மனைத்துங் தகைபெறுத்தி - வானிற் | 63 |
கிளைக்குஞ் சுடரிந்தர நீலக் கிரியை வளைக்கு மிளநிலா மானத் - திளைக்கும் | 64 |
உருவுடை யாடை தவிர்த்தொரு வெள்ளைத் திருவுடை யாடை திகழ்த்தி - ஒருபுடைப் | 65 |
பச்சை யுடைவாள் விசித்த தொருபசும்பொற் கச்சை நவரத்னக் கட்டெறிப்ப - வச்ர | 66 |
வெருவுதர வெல்லா விரவிகளும் வீழத் திருவுதர பந்தனஞ் சேர்த்தித் - திருமார்பிற் | 67 |
கார்க்கடன் மீதே கதிர்முத்தத் தாமங்கள் பாற்கடல் போர்த்த தெனப்பரப்பிப் - பாற்கடல் | 68 |
வந்த வனச மகளேபோன் மற்றது தந்த கடவுண் மணிதயங்கப் - பந்தச் | 69 |
சுரகனகத் தோள்வலையச் சூட்டுக் கவித்த உரக பணாமணி யொப்ப - விரவி | 70 |
மகரக் குழைதோண்மேல் வந்தசைவ மேருச் சிகரச் சுடர்போற் றிகழ - நிகரில் | 71 |
முடியின் மணிவெயிலும் முத்தக் குடையில் வடியு நிலவு மலையப் - படியில் | 72 |
வயங்கு கடக மகுடாதி மின்னத் தயங்கு பெரும் போதி சாத்தி - முயங்கிய | 73 |
செவ்வி நுதலிற் றிருநீற்றுப் புண்டரம் வவ்வி மகளிர் மனங்கவற்ற - நொவ்விய | 74 |
நாவியு மான்மதச் சாந்து நறையகில் ஆவியு மாகண் டமுமளப்பத் - தீவிய | 75 |
தோண்மாலை வாசக் கழுநீர் சுழல்சோதிக் கோண்மாலை கூசக் குளிர்கொடுப்ப - நாண்மாலை | 76 |
வேந்தர் தொழுதிறைஞ்ச வேதிய ரேத்தெடுப்பப் போந்து புறநின்ற போர்க்களிற்றை - வேந்தரில் | 77 |
மாக்காதல் யாதவனும் மாறழிந்த மீனவனும் வீக்காம லெங்குள்ள மெய்ம்முகிற்கும் - கோக்கடவுட் | 78 |
கெட்டாத வச்சிரமு மெலலா வுருமேறும் வெட்டாம லெங்குள்ள வெற்பினுக்கும் - முட்டா | 79 |
முதுவாய் வடவையு முந்நான்கு கோளும் கதுவாம லெல்லாக் கடற்கும் - பொதுவாய் | 80 |
அபயங் கொடுக்கு மயிரா பதத்தை உபய வயக்கோட் டுருமை - விபவ | 81 |
நிருத்தத் தருமோர் நிதிப்பொருப்பைக் கண்ணுற் றெருத்தந் திருக்கவின வேறித் - திருத்தக்க | 82 |
பள்ளித் திருத்தொங்கற் சோலை பகல்விலக்க வெள்ளிக் கவிகை மிசையோங்க - ஒள்ளிய | 83 |
ஒற்றை வலம்புரி யூத வதன்பின்பு மற்றை யலகில் வளைகலிப்பக் - கற்றைக் | 84 |
கவரி யிரட்டக் கடவுண் முரசார்த் துவரி யுவாவாடி யொப்ப - அவிர்வாளும் | .85 |
சங்குந் திகிரியுஞ் சார்ங்கமுந் தண்டமும் எங்குஞ் சுடர்விட் டிருள்களையக் - கொங்கத்து | 86 |
விற்கொடியு மீனக் கொடியுங் கொடுவரிப் பொற்கொடி யொன்றின் புடைபோதத் - தெற்கின் | 87 |
மலையா னிலம்வரவே வார்பூங் கருப்புச் சிலையான் வரவு தெரியத் - தொலையாது | 88 |
வீசுந் திவலை விசும்புகூர் மங்குவால் வாசவன் வந்த வரவறியக் - கூசாதே | 89 |
யாவ ரொழிவா ரிவன்வரவே மற்றுள்ள தேவர் வருவ ரெனத்தௌிய- யாவர்க்கும் | 90 |
பின்னர் வழங்கு முழங்கு பெருங்களிற்றுத் தென்னர் முதலானோர் சேவிப்ப - முன்னர்ப் | 91 |
பரவி யுலகிற் பலமண்ட லீகர் புரவி மிசைகொண்டு போத - அருவிபோல் | 92 |
விட்டு மதம்பொழியும் வேழந் திசைவேழம் எட்டு மொழியப் புகுந்தீண்டக் - கட்டி | 93 |
இரவிக்கு நிற்பன வேழு மொழியப் புரவிக் குலமுழுதும் போத - விரவி | 94 |
உடைய நிதிக் கடவு ளூர்தி யொழிய அடைய நரவெள்ள மார்ப்ப - விடையே | 95 |
எழுந்த துகளுருவ வேறியுஞ் சுண்ணம் விழுந்த துகளுருவ வீழ்ந்தும் - தொழுந்தகைய | 96 |
விண்ணுலகு மண்ணுல காகி விளங்கவிம் மண்ணுலகு பொன்னுலகாய் மாறாட - எண்ணரிய | 97 |
மாகதரும் மங்கலப் பாடகரும் விஞ்சையர் பூகத ராயினார் போற்பரவ - நாகர் | 98 |
கொழுந்தெழு கற்பக சாதி குவித்துத் தொழுந்தொறும் மன்னர் சொரிய - எழுந்துள | 99 |
கைம்மழை யென்னக் கனகப் பெயறூர்த்து மைம்மழை மாட மறுகணைந்தான் - தம்முடைய | 100 |
சாலை தொறுந்திரள்வார் சாளரங்கள் கைக்கொள்வார் மேலை நிலாமுற்ற மேற்றொகுவார் - மாலைதாழ் | 101 |
தெற்றி யடைய மிடைவார் சிலர்பலர் நெற்றி சுருங்க நெருங்குவார் - பொற்றொடியார் | 102 |
மாளிகையி லேறுவார் மண்டபத்தின் மண்டுவார் சூளிகை மாடந் தொறுந்துறுவார் - நீளும் | 103 |
இரண்டு மருங்கினு மிப்படி மொய்ப்பத் திரண்டு பலரெதிரே சென்று - புரண்ட | 104 |
கரும்புருவ வல்வில்லுங் கண்மல ரம்பும் பெரும்புவன வெல்லை பிடிப்பச் - சுரும்பு | 105 |
நிரைக்கு நிரைமுரல நீலக் குழாங்கன் இரைப்பின் மொகுமொகு வென்ன - விரைச்சுருள் | 106 |
மேகா ளகங்கள் மிஞிறுவாய் வைத்தூதக் காகாள மென்னும் படிகலிப்பப் - போகத் | 107 |
தகரங் கமழ்கதுப்பிற் றாழ்குழை தோடாழ் மகரம் பிறழ்கொடியின் வாய்ப்பு - இகலனங்கன் | 108 |
சேனா சமுகந் தெரிப்ப வதனெதிர் சேனா பராக மெனத்திகழப் - பூநாறும் | 109 |
கண்ண மெதிர்தூ யுடனே தொடியுந்தூஉய் வண்ண மிழப்பார் மனமிழப்பார் - மண்ணுலகில் | 110 |
இன்னற் பகைவ னிவன்கா ணகளங்கன் மன்னர்க்கு மன்னன் மகனென்பார் - முன்னர் | 111 |
முதுகுல மன்னர் முடிவணங்க வந்த விதுகுல நாயகிசே யென்பார் - குதுகலத்தாற் | 112 |
கண்மருஞ் செவ்விக் கடவுட் டிசாதேவர் எண்மருங் காணு மிவனென்பார் - மண்ணவர்க்கும் | 113 |
தேவர்க்கு நாகர்க்குந் தெய்வ முனிவர்க்கும் யாவர்க்குங் காவ லிவனென்பார் - தீவிய | 114 |
மாதவியுஞ் செங்கழு நீரும் வலம்புரியும் தாதகியுந் கொள்ளத் தரினென்பார் - மாதை | 115 |
ஒறுக்கும் மிதிலை யொருவில்லைத் தொல்லை இறுக்கு மவனிவ னென்பார் - மறுக்காமற் | 116 |
சென்று கனைகட றூர்த்துத் திருக்குலத்து நின்ற பழிதுடைப்பாய் நீயென்பார் - இன்றளவும் | 117 |
துஞ்சுந் துயிலிழந்த தண்டர் சூழற்றுளையில் நஞ்சுங் குமிழியெழு நாளென்பார் - பஞ்சவனே | 118 |
வாடையினுந் தண்ணென்னும் மந்தா நிலமெமக்குக் கோடையினுந் தீது கொடிதென்பார் - கூடி | 119 |
முருகுவார் கூந்தலார் மொய்த்தலர்ந்த கண்ணாற் பருகுவார் போல்வீழ்ந்து பார்ப்பார் - பொருமதனன் | 120 |
பார்த்தானோ புங்கானு புங்கம் படப்பகழி தூர்த்தானோ யாதென்று சொல்லுகேம் - ஆர்த்தான் | 121 |
உளைத்தான் சிலையிக் கொருகோடி கோடி வளைத்தா னரும்புலகின் மாய்த்தான் - இளைத்தார் | 122 |
பேதை
இனையர் பலர்நிகழ வீங்கொருத்தி முத்திற் புனையுஞ் சிறுதொடிக்கைப் பூவை - கனைமுகினோர் | 123 |
ஆடாத தோகை யலராத புண்டரிகம் பாடாத பிள்ளைப் பசுங்கிள்ளை -சூடத் | 124 |
தளிராத சூதந் தழையாத வஞ்சி குளிராத திங்கட் குழவி - அளிகள் | 125 |
இயங்காத தண்கா விறக்காத தேறல் வயங்காத கற்பக வல்லி- தயங்கிணர்க் | 126 |
கூழைச் சுருண்முடிக்கக் கூடுவதுங் கூடாதாம் ஏழைப் பருவத் திளம்பேதை - சூழும் | 127 |
நிலைத்தாய வெள்ள நெருங்க மருங்கே முலைத்தாயர் கைத்தாயர் மொய்ப்பத் - தலைத்தாமம் | 128 |
தொக்க கவிகைக் குலோத்துங்க சோழனை மிக்க பராந்தகனை மீனவனைப் -புக்கார் | 129 |
வணங்க வணங்கி வழுத்த வழுத்தி அணங்க வணங்கா ளகலாள் -குணங்காவல் | 130 |
மன்னன் புனையுந் திருமுத்த மாலையை அன்னம் படிந்தாட வாறென்னும் - பின்னவன் | 131 |
கோவைத் திருப்பள்ளித் தொங்கற் குழாங்கிளிக்கும் பூவைக்கு நல்ல பொழிலென்னும் - பாவை | 132 |
அயிர்க்கு மிருகோட் டயிரா பதத்தை மயிற்கு மலையென்று மன்னும் - குயிற்கிளவி | 133 |
தேன்வாழுந் தாமஞ்சூழ் தெய்வக் கவிகையை மான்வாழ மாசின் மதியென்னும் - கோனுடையப் | 134 |
பாங்குவளை யாழிப் பார்மடந்தை தன்னுடைய பூங்குவளை மாலை புனைகென்னும் -தேங்கமலத் | 135 |
தற்புத வல்லி யவளே பிறந்துடைய கற்பக மாலையைக் காதலிக்கும் - பொற்போர் | 136 |
பொலம்புரி காஞ்சிப் புகழ்மகட்கே தக்க வலம்புரி மாலைக்கு மாழ்கும் - பொலன்றொடி | 137 |
போரார வாரப் பொலன்கொடி பெற்றுடைய பேரார மாலைக்குப் பேதுறும் - நேரியன் | 138 |
ஏந்திழை மாத ரெவர்க்கும் பொதுவாய பூந்துழாய் மாலை புனைகென்னும் - வேந்தன்முன் | 139 |
இவ்வகை யல்ல திலங்கிழையார் மால்கூரும் அவ்வகை கூரா ளயலொருத்தி - எவ்வுலகும் | 140 |
முற்ற முடிக்க முடிக்காம வேள்சூட்டும் கொற்ற முடியனைய கொண்டையாள் - அற்றைநான் | 141 |
சாத்து மபிடேகத் தாரைபோற் றாழ்கின்ற கோத்த பருமுத்தக் கோவையாள் - தேத்து | 142 |
விடம்போற் பணிகட்டு வேழங்கட் கெல்லாம் கடம்போற் கொலையூறுங் கண்ணாள் - அடங்கா | 143 |
வயிர்ப்பான் மறலி மகளுருக்கொ லீதென் றயிர்ப்பா ரயிர்க்கு மழகாள் - உயிர்ப்பாவை | 144 |
கொல்லிக்கு முண்டுயி ருண்மைத்ரி கூடத்துச் சொல்லிக் கிடங்குந் துணைமணிக்கும் - வல்லி | 145 |
இதற்கு நடைவாய்த் துயிர்வாய்த்த தென்ன மதர்க்கு மொருதிரு மாது -முதற்றன் | 146 |
பணிவாயி லாயம் பரந்தகலக் கிள்ளைக் கணிவாயின் முத்த மருளி - மணிவாயாற் | 147 |
சொல்ல யெனக்கன்னை சொல்லாயோ நீயன்றே வல்லாய் பிறவறிய வல்லவோ - கல்லரணக் | 148 |
கோழித் திருநகரக் கொற்றவற்கு வெற்றிப்போர் ஆழித் தடக்கை யபயற்கு - வாழியாய் | 149 |
காக்குங் கடலேழு மாடுங் கடாரமோ ஆக்கு நதியேழு மாரமோ - தேக்கிய | 150 |
பண்ணேழுங் கன்னாவ தங்கிசமோ பண்டளந்த மண்ணேழும் வாகு வலயமோ - தண்ணறுந் | 151 |
தூவ னறவப் பொழிலேழுங் தொங்கலோ காவன் மலையேழுங் கந்துகமோ - ஏவலால் | 152 |
செய்யு நலனுடைய கோளேழுந் தீபமோ பெய்யு முகிேலூம் பேரியமோ - வையகம் | 153 |
கூறு மவையிவை யென்று குறுந்தொடி வேறு தனிவினவும் வேலைக்கண் - சீறும் | 154 |
ஒருத னடியின் மடிய வுபய மருது பொருது வயவன் - விருதன் | 155 |
விலையி லமுத மதன விமலை முலையின் முழுகு முருகன் - வலைய | 156 |
கனக சயில வெயிலி கணவன் அனக னதுல னமலன் - தினகரன் | 157 |
வாசவன் றென்னன் வருண னளநேசன் கேசவன் பூசக்ர கேயூரன் - வாசிகை | 158 |
ஆழிப் பெருமா னபய னனபாயன் சூழிக் கடாயானை தோன்றுதலும் - தாழாது | 159 |
சென்றா டிருமுன்பு செந்தளிர்க் கைகுவித்து நின்றா ளினிவறிதே நிற்குமே - என்றாலும் | 160 |
கோடு கழல்கண்டல் கொண்டற்கு மாலதி ஓடு நகாதே யுடையாதே - பீடுற | 161 |
வந்து தொடுங்குன்ற வாடைக் கிளங்கொன்றை நொந்து தொடாதே குழையாதே - செந்தமிழ்த் | 162 |
தென்ற லெதிர்கொண்ட தேமாங் கொழுங்கன்று மன்றல் கமழாதே வாழாதே - என்றுபோய் | 163 |
சூதள வல்ல துணைமுலை தூயகண் காதள வல்ல கடந்தனபோய் - மாதர் | 164 |
உருவத் தளவன் றொளியோக்க மாக்கம் பருவத் தளவன்று பாவம் - தெருவத் | 165 |
துடைவ துடையாதா முள்ள முறவோர்ந் தடைவ தடையாதா மச்சம் - கடைகடந்து | 166 |
சேயினு நல்ல பெருமா டிருந்தடந்தோன் தோயினுந் தோய மனந்துணியும் - ஆயினும் | 167 |
ஏந்து தடந்தோ ளிணைப்பணைப்புக் கண்டிலன் காந்து தனதடங் கண்டிலன் - பூந்தடந் | 168 |
தேரி னகலுந் திருந்தல்குல் கண்டிலன் காரி னெகிழளகங் கண்டிலன் - மாரவேள் | 169 |
எய்யு மொருகருப்பு வல்வில் லெடுத்தானோ கொய்யு மலரம்பு கோத்தானோ - தையன்மால் | 170 |
மந்தா கினிக்கோன் றிருப்புருவ வார்சிலையும் செந்தா மரைக்கண்ணுஞ் செய்ததென - நொந்தார் | 171 |
வளைத்தளிர்ச் செங்கை மடுத்தெடுத்து வாசக் கிளைத்தளிர்ப் பாயற் கிடத்தி - துளைத்தொகை | 172 |
ஆய்க்குழ லென்றா லதுவு மவனூதும் வேய்க்குழ லென்று விளம்பியும் -தீக்கோள் | 173 |
நிகழ்நிலா வன்று நிருபகுல துங்கன் புகழ்நிலா வென்று புகழ்ந்தும் - இகலிய | 174 |
பல்லிய மன்று பரராச கேசரி வல்லிய மென்று மருட்டியும் - மெல்லிய | 175 |
கல்லார மன்று கதிரோன் றிருமருமான் மெல்லார மென்று விளம்பியும் - நல்லார் | 176 |
அருத்தி யறிவா ரவையிவை யென்று திருத்தி விடவிடாய் தீர்ந்தாள் - ஒருத்தி | 177 |
மங்கை
உருவ வரிக்க ணொழுக வொழுகப் புருவ முடன்போதப் போத - வெருவி | 178 |
வனமுலை விம்மி வளர வளரப் புனைதோள் புடைபோதப் போத - வினைவர் | 179 |
அருங்கலை யல்கு லகல வகல மருங்குபோ யுள்வாங்க வாங்க - நெருங்கு | 180 |
பரவர ராச பயங்கரன்மேல் வேட்கை வரவர வாற்றாத மங்கை - பொரவரு | 181 |
தேமிரைக்குங் காலையின் ஞாயிற் றிளஞ்செல்வி தாமரைக்கே சாலுந் தரத்ததோ - காமர் | 182 |
அமுத மதியத் தலர்நிலா முற்றும் குமுத நறுமுகைக்கே கூறோ - நமதுகார் | 183 |
கானின் மடமயிற்கே காணியோ தண்ணிள வேனில் குயிற்கே விதித்ததோர் - தேனிமிர் | 184 |
தண்டா மரையா டலைவனை யாமும்போய் கண்டாலென் னென்னுங் கடைப்பிடியாள் - பண்டை | 185 |
ஒளியா ரணங்காத றம்மைத்தா மொன்றும் தௌியாத வாறே தௌிந்தும் - களியன்னம் | 186 |
வாவிக் கரையில் வரநீ ரரமகளிர் சேவிக்க நின்றாடுஞ் செவ்வியாள் - காவிற் | 187 |
புகுதில் வனதெய்வப் பூங்குழை யாயத் தொகுதி புடைபரந்து சூழ்வாள் - மிகுதே | 188 |
னிரையர வந்தரு செய்குன்ற நீங்கா வரையர மாதரின் வாய்ப்பாள் - பெருவிலைய | 189 |
முத்தில் விளங்கின் முளரித் தவளப்பூங் கொத்தி னணங்கனைய கோலத்தாள் - பத்திய | 190 |
பச்சை மரகதம் பூணிற் பணைமுலைசூழ் கச்சை நிலமகள்போற் காட்சியாள் -நிச்சம் | 191 |
உரக பணமணிகொண் டொப்பிக்கி லொப்பில் வரகமலை யன்ன வனப்பாள் - நரபதி | 192 |
மைம்முகில் வண்ணத்து வானவன் மீனவன் கைம்முகில் மேல்வரக் கண்டதற்பின் - மொய்ம்மலர் | 193 |
நீலமே வேய்ந்தெடுக்க நீலமே பூண்டுடுக்க நீலமே யன்றி நினையாதாள் - நீலமே | 194 |
முன்னுடைய செங்கே ழெறிக்கு முறிக்கோலம் தன்னுடைய மாமை தழீஇக்கொள்ளப் - பின்னர் | 195 |
நெருங்கு கழுநீரும் நீலோற் பலமும் ஒருங்கு மலர்தட மொத்தும் -மருங்கே | 196 |
இறங்கிய கற்பக வல்லியு மேறி உறங்கிய தும்பியு மொத்தும் - பிறங்க | 197 |
வயங்கு தளிரீனு மாங்கொம்பர் பூக்கொண் டுயங்கு கருவிளை யொத்தும் - தயங்குவாள் | 198 |
கோலத்தார் மௌலிக் குலோத்துங்க சோழற்கு ஞாலாத்தார் ரெல்லார்க்கு நாயகற்கு - நீலத்தின் | 199 |
காசுங் கலாபமும் மேகலையுங் காஞ்சியும் தூசுங் துகிலுங் தொடியுநான் - கூசேன் | 200 |
வௌியே தருவேன் விரையாரத் தொங்கல் கிளியே தருமேனீ கேளாய் - அளியேநீ | 201 |
தாது கடிகமழ் தாதகித் தாமத்தின் போது கொழுதப் புறப்படாய்- ஓதிமமே | 202 |
எங்கள் பெருமாளை யிங்கே தரவாநீ உங்கள் பெருமா னுழைச்செல்வாய் - பைங்கழற்காற் | 203 |
சேயை நினைந்தேகி னம்முடைய சேக்கையான் சாயன் மயிலே தலைப்படாய் - பாயும் | 204 |
கடமானே போல்வார்க்கு நீநின்னைக் காட்டின் மடமானே தானே வருங்காண் - கடிதென்று | 205 |
கொள்ளைகொள் காமன் கொடும்பகைக்குக் கூசித்தன் பிள்ளைக ளோடிருந்து பேசுவாள் - உள்ள | 206 |
அலகில் குலநீல ரத்னா பரணம் விலகி வெயிலை விலக்க - உலகிற் | 207 |
பெரிய பெருமாள் பெரும்பவனி வீதி இரிய வெதிரேற் றிழந்தாள் - வரிவளை | 208 |
ஆயத்தா ரென்னி லளியத்தா செல்லாரும் நேயத்தா ரல்லரே நிற்பாரே - தேயத்தார் | 209 |
மன்னனை யஞ்சாதே வாரணத்தை யஞ்சாதே மின்னனை யாளையு மீதூரா -முன்னர் | 210 |
கடமாக்குந் தெய்வக் களிறு விரும்பும் இடமாதும் யாமென்பார் போலப் - படமாய் | 211 |
இரைப்பச் சுரும்போ டிருளளக பாரம் நிரைத்து வனமாகி நிற்பார் - விரைப்பூண் | 212 |
முலையாய் வளரு முரட்குவடு கொண்டு மலையாய் நெருங்க வருவார் - தொலையாத | 213 |
பாய பருமுத்தின் மாலை பலதூக்கித் தூய வருவியாய்த் தோன்றுவார் - சாயற் | 214 |
கொடியா யடிசுற்றிக் கொள்வார் புரக்கும் பிடியாய் நறுந்துகள் பெய்வார் - விடுதுமோ | 215 |
யாழாய் மிடற்றால் வணக்குதும் யாமென்பார் தோழாய் வளைத்தெங்குஞ் சூழ்போவார் - ஆழிக்கைத் | 216 |
தியாகனை மானதனைத் திக்கானை யெட்டுக்கும் பாகனையே பின்சென்று பற்றுவார் - தோகையார் | 217 |
நற்றுகில் கொண்ட நறுந்துழாய் மார்பாநின் பொற்றுகி றந்தருளிப் போதென்பார் - மற்றிவள் | 218 |
தன்சங்கங் கொண்ட தடந்தா மரைக்கண்ணா நின்சங்கந் தந்தருள னேரென்பார் - மின்கொள்ளும் | 219 |
இன்றுயிற் கெல்லா மெறிபாற் கடற்கொள்ளும் நின்றுயி றந்தரு ணீயென்பார் - என்றென்று | 220 |
மானு மயிலு மனையார் வளைத்துளைப்பத் தானூங் களிறுந் தடையுண்ட - கோனும் | 221 |
தடுத்த கொடிக்குச் சதமடங்கு வேட்கை அடுத்த திருநோக் கருளாக் - கொடுத்த | 222 |
திருநகை மூர றிகழ்ந்தா னணங்கும் ஒருநகை கூர்ந்தொருவா றுய்ந்தாள் - பெருநகை | 223 |
எய்தி யனங்க னெழப்போனான் மாதரும் உய்து சிறந்தா ளுழைச் சென்றார் - நொய்திற் | 224 |
றொடுக்கும் புறஞ்சொற் றொடாமே முலைமீ தடுக்கும் பசலை யடாமே - உடுக்கும் | 225 |
துகிலுஞ் சரியாமே சுற்றத்தா ரெல்லாம் புகிலும் புகாமே பொராமே - அகினாறும் | 226 |
பள்ளியிற் செல்லாள் பருவ முருகற்றோய் வள்ளியிற் சால வயங்கினாள் - ஒள்ளிழை | 227 |
மடந்தை
பின்ன ரொருத்தி பெருமைக் கரமகளிர் முன்ன ருரைக்கும் முதன்மையாள் - சென்னியில் | 228 |
வண்ட லிடுநாவி வார்குழற்கு மாறுடைந்து கொண்டல் சொரிமுத்தின் கொண்டையும் -பண்டுவந் | 229 |
தேற்றுப் பணைபணைக்கு மென்றோ ளிரண்டுக்கும் தோற்றுச் சொரிமுத்தின் சூழ்தொடியும் - ஆற்றற் | 230 |
கலம்புரி செல்வக் கழுத்திற்குத் தோற்ற வலம்புரி முத்தின் வடமும் - பொலம்பூண் | 231 |
எதிர்க்கு முலைக்கிரிந்த திக்கயக்கோ டிட்ட கதிர்க்கு நகைமுத்தின் கச்சும் - அதிர்க்கும் | 232 |
அடல்விடு மல்குற் பரவைக் குடைந்து கடல்விடு முத்தின் கலையும் - உடலிமேல் | 233 |
ஏந்து மினைய விளநிலா விட்டெறிப்பப் போந்து மறுகு புகுந்தொழிந்தாள் - வேந்தனும் | 234 |
சட்கோடி மாணிக்க மொன்றுஞ் சமந்தகமும் உட்கோடு கேயூரத் தூடெறிப்பக் - கொட்கும் | 235 |
கடல்சேப்ப வந்த கவுத்துவ மொன்றும் அடல்சேக்கு மார்பிற் கமைய - உடலி | 236 |
அனந்த பணாமவுலி யாயிரமு மொற்றை மறுகு திருமலர வந்தான் - குறுகும் | 237 |
முறுகு கதிரின் முகந்திரிய வேற்று மறுகு திருமலர வந்தான் - குறுகும் | 238 |
நடையாய வெள்ளமும் நாணிரம்பு திங்கட் குடையாய வெள்ளமுங் கூடி - அடைய | 239 |
மதியுதய மென்று வணங்க வனச பதியுதய மென்று பணிய - துதியில் | 240 |
ஒருவரு மொல்வா வுருவமிக் கூறும் இருவரு மெய்திய வெல்லைத் - தெருவில் | 241 |
நெருங்க மகளிர் நிறந்திறக்க வெய்து மருங்கு வருகின்ற மாரன் - திருந்திய | 242 |
பாய பகட்டல்குல் பாரா வதன்பரப்பிற் போய மருங்குற் புறநோக்கார் -சாயா | 243 |
முலையின் கதிர்ப்பு முருகு கெழுதோள் நிலையின் பணைப்பு நினையாக் - கொலையால் | 244 |
உடைக்கு முலகடைய வூடாடு கண்ணின் கடைக்கு முடிவின்மை காணாக் - கிடைக்கும் | 245 |
பருவக் கொடிவதன பங்கே ருகத்தின் புருவக் கொடி முடியப் போகா - உருவக் | 246 |
களிக்கும் புடவி சதகோடி கற்பம் அளிக்கும் பெருமானை யஞ்சா - குளிர்க்கும் | 247 |
கடுங்காற் கொடுந்தேரை முட்டக் கடாவிக் கொடுங்காற் சிலையைக் குனித்து - நடுங்கா | 248 |
முகுந்த னிவனென்று முன்பெய்த வேவிற் புகுந்த திதுவென்று போனான் - திகந்த | 249 |
முழுதா ளபயனை முகிணகையுந் தோளும் தொழுதா ெள்ாருதானே தோற்றாள் - அழுதாள் | 250 |
திரிந்தாள் கலைநிலையுஞ் செம்பொற் றுகிலும் சரிந்தா டுணைவியர்மேற் சாய்ந்தாள் - பரிந்தார் | 251 |
முடைக்கை யெதிர்க்குரவை கோத்தாய் முரல்யாழ் கடைக்கை தொடுக்கை நகையோ - விடைப்பே | 252 |
ரினந்தழுவிப் பின்னையைக் கொள்வா யிவளைத் தனந்தழுவிக் கொள்கை தவறோ - அனந்தம் | 253 |
கருந்துகிலக் கோவியரைக் கொள்வாய் கமலை தருந்துகி னோக்கத் தகாதோ - விருந்து | 254 |
துளவ முகிற்கிது வந்தது தூய வளவர் திருக்குலத்து வந்தோ - அளவிறந்த | 255 |
வன்கண் ணிவளளவுங் கண்டே மடவரல் புன்க ணடியேம் பொறேமென்று - மின்கண் | 256 |
இவையிவை சொல்லிப்போ யின்னமளி யேற்றிக் கவிரிதழ் பின்னுங் கலங்கத் - துவரின் | 257 |
வியக்குந் துகிரியைய மேம்பட் டுலகை மயங்குந் திருவாய் மலர்க்கும் - நயக்கும் | 258 |
பொருப்புருவத் தோளின் புதுமைக்கு நேரே திருப்புருவஞ் செய்த செயற்கும் - பரப்படையக் | 259 |
செங்கே ழெறித்து மறிக்குந் திருநயன பங்கே ருகஞ்சூழ் படுகொலைக்கும் - அங்கே | 260 |
தரிக்குமே தென்றலுஞ் சந்த்ரோ தயமும் பரிக்குமே கண்கள் படுமே - புரிக்குழலார் | 261 |
பாலிருத்தி மம்மர் படப்படப் பையப்போய் மாலிருத்தி யுள்ள மயங்கினாள் - மேலொருத்தி | 262 |
அரிவை
தாளை யரவிந்தச் சாதி தலைவணங்கத் தோளை யுரகர் தொழவிருப்பாள் - நாளை | 263 |
வளவர் பெருமான் வரும்பவனி யென்று கிளவி விறலியர்வாய்க் கேட்டாள் - அளவுடைத் | 264 |
தோரிரா வன்றம்ம விவ்விரா வோதிமத்தோன் பேரிரா வென்று பிணங்கினான் - பேரிரா | 265 |
என்று விடியுங்கொ லென்றாள் விடிவளவும் நின்று சுடுங்கோ னிலவென்றான் - நின்றார் | 266 |
அடுத்தடுத் தேந்திய திவ்யா பரணம் எடுத்தெடுத் தொப்பித் தெழுந்து - சுடர்க்கதிரோன் | 267 |
மாலைப் பகைவியைப் போக்கி வருவித்த காலைத் துணைவியைக் கண்டெழுந்தாள் - காலையோன் | 268 |
சேமித்த பூங்கோயி லெல்லாந் திருவென்று காமித் திகழின் கடைதிறப்ப - நேமி | 269 |
மணக்கத் துணையன்றில் வாயலகு வாங்கித் தணக்கக் கடிகாவிற் சார்ந்தாள் - கணக்கதிர் | 270 |
வந்து பொருவதொரு மாணிக்கச் செய்குன்றில் இந்து சிலாதலத்தி லேறினான் - குந்திக் | 271 |
கடப்பன கன்னிமா னேக்கியு மன்னம் நடப்பன பார்த்து நயந்தும் - தொடக்கிக் | 272 |
களிக்கு மயிற்குலங் கூத்தாடக் கண்டும் கிளக்குலம் பாட்டெடுப்பக் கேட்டும் - பளிக்குருவப் | 273 |
பாவை மணக்கோலம் பார்த்தும் பலநகை பூவை பகரப் புறஞ்சாய்ந்தும் - கோவை | 274 |
அளிக்களி யாட்ட மயர்ந்துங் கபோத விளிக்களி கூர்ந்து வியந்தும் - களிக்கப் | 275 |
பழிச்சி வணங்கிப் பெருமாள் பவனி எழுச்சி முரசோர்ந் திருந்தாள் - கழற்செழியர் | 276 |
தென்சங்கங் கொண்டான் றிருச்சங்கஞ் செய்குன்றில் தன்சங்க மாகி யெதிர்தழங்க - மின்சங்கம் | 277 |
போல விழுந்து மெழுந்தும் புடையாயம் கோல மறுகு குறுகுவாள் - ஞாலம் | 278 |
எடுக்கும் பணிமன்னன் மின்னென் றிறைஞ்சிக் கொடுக்குஞ் சுடிகைக் குதம்பை -கடுக்கும் | 279 |
மயில்வேண்டுஞ் சாயல் வதனாம் புயத்து வெயில்வேண்ட வேண்டி விளைப்ப - பயில்கதிர் | 280 |
வெல்லாது தோட்சுடிகை மேகா ளகவிருண்மேல் எல்லாப் பருதியும் போலெறிப்ப - கொல்குயத்து | 281 |
வீழ்சோதி சூழ்கச்சு மேரு கிரிச்சிகரம் சூழ்சோதிச் சக்ரந் தொலைவிப்பக் - கேழொளிய | 282 |
பைம்பொற் கடிதடஞ்சூழ் மேகலை பார்சூழ்ந்த செம்பொற் றிகிரி யெனத்திகழ - அம்பொற் | 283 |
புறவுஞ் சகோரமும் பூவையு மானும் பிறவு மினமென்று பெட்ப - உறவாய் | 284 |
அடர்ந்த பொலன்கே ழடிச்சிலம்புக் கன்னம் தொடர்ந்து மறுமாற்றஞ் சொல்ல - நடந்துபோய் | 285 |
மானவற்குப் புக்கதுறை வல்லவற்கு வில்லவற்கு மீனவற்குச் சென்று வௌிப்பட்டாள் - தானே | 286 |
அலகு முகமுங் குவிகையு மாகி மலரு முகளமுமானப் - பலர்காணத் | 287 |
தேனு மமுதுங் கலந்தனைய தீங்கிளவி மானு மடைய மனங்கொடுத்தாள் - கோனும் | 288 |
தடாதே தடுத்தாளைத் தன்கடைக்கண் சாத்தி விடாதே களிறகல விட்டான் - படாமுலைமேல் | 289 |
ஒத்திலங்கு வேர்வந் துறைப்ப நறைக்கழுத்து நித்திலங்கால் சங்க நிதிநிகர்ந்தாள் - எத்திசையும் | 290 |
சோர்கின்ற சூழ்தொடிக்கைச் செம்பொற் றொடிவலயம் நேர்கின்ற பற்ப நிதிநிகர்த்தாள் - தேரின் | 291 |
அரிவை துகினெகிழ வல்கு லரவின் உரிவை விடும்படமு மொத்தாள் - சொரிதளிர் | 292 |
மாங்கொம்ப ரென்ன வருவாள் சுரமரப் பூங்கொம்ப ரென்னப் புறங்கொடுத்தாள் - பாங்கியரும் | 293 |
ஒற்றை யுடைவா ளொருபுடையாள் கொற்றவையேல் மற்றை யருகிவளை வைத்திலனே - பெற்றுடைய | 294 |
வாரத் தரணியாள் வாழ்தோ ளெதிர்மற்றை ஆரத் திருத்தோ ளளித்திலனே - நேரொத்த | 295 |
பூந்தா மரையா ளெதிரேயிப் பொற்றொடிக்கும் ஏந்தார மார்ப மிசைந்திலனே -வேந்தர்கோன் | 296 |
அன்னங்கா ணீர்சென் றரற்றீர் கபோதங்காள் இன்ன மபயம்புக் கெய்திடீர் - நன்னுதற் | 297 |
பாவைகாள் கொல்யானைப் பாவடிக் கீழ்ப்பணியீர் பூவைகாள் செங்கோன்மை போற்றிசெய்யீர் - தாவிப்போய்ப் | 298 |
பேதை மடமான் பிணைகாள் வளைத்துளையீர் கோதை மதுசுரங்காள் கூப்பிடீர் - யாதெல்லை | 299 |
என்னா விதற்கென் றிரங்கி யிலங்கிழை தன்னார்வ மாற்றெதிர் சாற்றினார் - பின்னர்ப் | 300 |
தெரிவை
பொருவி லொருத்தி புறங்காக்கு மாதர் இருவி லிடைநின் றிறைஞ்சித் - திருவுலாப் | 301 |
போதும் பெருமாள் புகுது மளவுமிங் கியாதும் பயிலா திருத்துமோ - சூதாடேம் | 302 |
பந்தா டுதுநாம் பசும்பொற் குழைசென்று வந்தாடு கண்ணாய் வருகென்று - சந்தாடும் | 303 |
கொம்மை வருமுலையுந் தோளுங் குறியாதே அம்மென் மருங்குல்பார்த் தஞ்சாதே - தம்முடனே | 304 |
கொண்டா ரருகிருந்த பாணருங் கோடியரும் கண்டா ரெவருங் கடுகினார் - மண்டி | 305 |
எடுத்தா ரெடுத்தன யாவு மெலரும் கொடுத்தா ரொருதானே கொண்டாள் - அடுத்தடுத்து | 306 |
முன்ன மெறிபந்தின் மும்மடங்கு நான்மடங் கின்ன மெறிய வருகென்றாள் - அன்னம் | 307 |
அடியு மிருகையு மம்புய மென்று படியு மொழுங்கிற் பயில -முடியும் | 308 |
தொடையிடை போய சுழல்கூந்தற் பந்தர்க் கிடையிடை நின்றகா லேய்ப்ப - அடைய | 309 |
விழுந்தன பார்கடவா வாறுபோன் மேற்போய் எழுந்தன கைகடவா வென்னக் - கொழுந்தளிரால் | 310 |
ஏற்றுதி விண்கொளா வம்மனை யெம்மனை ஆற்றுதி யீதிங் கரிதென்னப் - போற்றரும் | 311 |
கையோ பதயுகமோ கண்ணோ கடுகினவை ஐயோ வறித லரிதென்னப் - பொய்யோ | 312 |
திலக நுதலிற் றிருவேயென் றோதி உலகு வியப்பவென் றோத - அலகிறந்த | 313 |
பந்தாட் டயர்ந்து பணைமுலையார் பாராட்ட வந்தாட்டு நீராட்டு மண்டத்து - விந்தை | 314 |
பெருமா னனபாயன் பேரிய மூன்றும் தருமா வாரந் தழந்த - ஒருமாதர் | 315 |
ஏந்து துகிலொன் றுடுத்தாளோ வில்லையோ போந்து மறுகு புகுந்தொழிந்தாள் - மாந்தளிரும் | 316 |
தாதுந் தமினிய மாலையுந் தண்கழுநீர்ப் போதும் பிறவும் புறம்புதையா - ஓதிக்குச் | 317 |
சென்னி யமுனைத் தரங்கமுந் தீம்புனற் பொன்னி யறலும் புறங்கொடுப்பப் - பின்னர் | 318 |
ஒழுங்காய் சேயரிக்கண் ணூடொட்டும் மையால் மழுங்காது கைபோய் மதர்ப்பச் - செழுங்கழுத் | 319 |
தொன்று புனைந்த தொருசங்க மாணிக்கம் இன்று பயந்த தெனவிளங்க - நின்றிலங்கும் | 320 |
உச்சக் கலனணியாத் தோளினைக் கோரிரண்டு பச்சைப் பசுங்காம்பு பாடழிய - நிச்சம் | 321 |
அசும்பு பொலன்கச்சி னற்றத்தே கொங்கை விசும்பு குடிவாங்க வீங்கப் - பசுஞ்சுடர்க் | 322 |
கோல வயிறுதர பந்தனக் கோணீங்கி ஆவின் வளர்தளிரி னைதாகி - மேலோர் | 323 |
இழியு மொருசாம ரேகையு முந்திச் சுழியும் வௌிவந்து தோன்றக் - கெழிய | 324 |
இசையின் கலாபாரம் யாப்புறா வல்குல் திசையின் புடையடையச் செல்ல - மிசையே | 325 |
பொறைபுரி கிம்புரி பூட்டாத் துடைதூ சுறையு மரகத மொப்ப - அறையும் | 326 |
சிலம்பு சுமவாத செந்தா மரைபோய் உலம்பு குரலஞ்சா தோடக் - கலம்பல | 327 |
தாங்கி யுலகந் தரிப்பத் தரியென்று பாங்கிய ரெம்மருங்கும் பாராட்டப் - பூங்கே | 328 |
ழுருவி லொளிபோ யுலகடையக் கோப்பத் தெருவி லெதிர்கொண்டு சென்றாள் - பெருமாளும் | 329 |
கொற்றக் குடைக்கீழ் வடமேருக் குன்றனைய வெற்றிக் களியானை மேல்வந்தான்-பற்றி | 330 |
இருவருந் தம்மி லெதிரெதிர் நோக்க ஒருவ ரெனவேட்கை யொத்தார் - குருசில் | 331 |
மறந்த கடல்கடைய வந்தாண்மே லன்பு சிறந்த திருவுள்ளஞ் செல்லச்- சிறந்தவள் | 332 |
ஆக னசுத்திருந்தா ளாகத் திருவுள்ளக் கோசு னகத்திற் கொடுசென்றாள் - நாகிள | 333 |
நல்வி மடநோக்கான் ஞாலத்தை யோரடியால் வவ்வி யிருதோளில் வைத்தமால் - செவ்வி | 334 |
முருகு கமழ முகந்து முகந்து பருகு மடமகளைப் பாரா - அருகு | 335 |
மடுத்து முயங்கி மயங்கிய தாயர் எடுத்து மலரணைமே விட்டார் - அடுத்தொருவர் | 336 |
நொய்யாத கற்பகப் பூமாலை கொண்டைக்கும் நெய்யாத பொற்றுகி னீவிக்கும் - செய்யாத | 337 |
தொங்கற் றுளைக்கோவை யல்குற்குஞ் சூழ்கனகத் துங்கப் பணிவலையந் தோளுக்கும் - கொங்கைக்குப் | 338 |
பொன்னிப் புகாரிற் பொலன்குழம்பும் வல்லத்திற் கன்னிப் பனந்தோடு காதிற்கும் - சென்னி | 339 |
அளிப்பக் கொணர்ந்தனம்யா மன்னமே யென்று தௌிப்பச் சிறிதே தௌிந்தாள் - கிளிக்கிளவி | 340 |
பேரிளம்பெண்
மற்றொருத்தி செந்தா மரைமலர்மே லென்னுடனே செற்றொருத்தி வாழு மெனச்செறுவாள் - சுற்றவும் | 341 |
தெட்டுத் தசும்பசும்பு தெங்கி னிளம்பாளை மட்டுத் தமனிய வள்ளத்து - விட்டு | 342 |
மறித்து வயிர மடலொன்றின் வாக்கித் தெறித்து ஞமிறோப்பிச் செவ்வி - குறித்துக்கொண் | 343 |
டேந்தி முகம னியம்பி யிருந்தொரு காந்தி மதிவதனி கைக்கொடுப்ப - மாந்தி | 344 |
குதலை சூழறிக் குயிற்குங் கிளிக்கும் விதலை யுலகில் விளைத்து - நுதலை | 345 |
வியரா லலங்கரியா வேந்தன் கொடுமை அயரா வௌிவிடா வஞ்சாப்- பெயரா | 346 |
அருகிருந்த பாணனை நோக்க அவனும் குருசில் வருதமரங் கூறப் - பரிபுரக் | 347 |
காலு நிதம்புமுங் கையுந் திருக்கழுத்தும் கோலு மதாணிக் குலமெல்லாம் - மேலோன் | 348 |
குரகத மேழு முழுகிக் குளிப்ப மரகத சோதி வயங்கப் - புருவ | 349 |
இடைபோய்க் குமிழின் மலர்வந் திறங்கப் புடைபோய்க் கருவிளை பூப்ப - விடையாக | 350 |
ஏக முருக்கு மலர விளம்பாளைப் பூக மிடறு வரப்பொதிய - போகப் | 351 |
பொரும்பெருங் தெங்கிளநீர் தாழ்ந்து பிறங்கப் பரும்பொருங் காம்பு பணைப்ப - விரும்பிய | 352 |
நறுந்துணர் மாந்தளிர் வார்ந்து நளியக் குறுந்தொடிக் காந்தள் குலைப்பச் - செறிந்து | 353 |
சலித்துத் தனியிள வஞ்சி தளரக் கலித்துக் கதலி கவின - ஒலித்தே | 354 |
அளிக்குஞ் சகோரமு மன்னமு மானும் களிக்கு மயூர கணமும் - விளிக்கும் | 355 |
புறவுந் தொடர்ந்துடனே போத வவையே பிறவு மினமென்று பெட்பர் - சுறவுயர்த்தோன் | 356 |
காலை புகுந்து காப்ப தொருபசும்பொற் சோலை யெனவந்து தோன்றினாள் - ஞாலத்தோர் | 357 |
தெய்வப் பெருமாளுஞ் சேவடி முன்குவித்துக் கைவைத்து நின்றவளைக் கண்ணுற்றான் - தையல் | 358 |
வெருவமுன் சூர்தடித்த வேளே நயக்கும் பருவமு மார்பிற் பணைப்பும் - புருவமும் | 359 |
செந்தா மரைக்கண்ணும் மாமேரு வைச்சிறிய பந்தாகக் கொள்ளும் பணைத்தோளும் - உந்தியும் | 360 |
உய்ய விருகாது மூக்கு முடுபதியை நைய வெறிக்கு நகைநிலவும் - செய்ய | 361 |
பவளத் துவர்வாயும் பாதாம் புயமும் கவளக் களிற்றௌிதிற் கண்டு - குவளைக் | 362 |
சுருநெடுங் கண்களிப்ப வுள்ளங் களிப்பப் பருநெடுந் தோளும் பணைப்ப - ஒருநின் | 363 |
சிலம்புகளோ ரேழுஞ் சென்றடைந்து நோலேன் அலம்பு சுடலேழு மாடேன் - வலம்புவனம் | 364 |
ஏழுஞ் செலவயரே னெங்கோவே நின்குடைக்கீழ் வாழுந் திருவெனக்கு வாய்க்குமே - தாழி | 365 |
முடைதழுவு தோளும் முலையுந் தழுவ விடைதழுவு தாமரைக்கை வீரா - கடகரியைக் | 366 |
கைதழுவிக் கோரத்தைக் காறழுவி நின்புலியை மெய்தழுவிக் கொள்ள விடுவாயோ - மொய்திரைசூழ் | 367 |
ஞால மறிக்கவும் நாயக நின்புகல்விற் கால வுததி கலக்கவும் - சால | 368 |
வருந்தா வகைவருந்த வாழி பெயரும் பெருந்தேவி யார்க்குப் பெறலாம் - திருந்திய | 369 |
குந்த மொசித்ததுவுங் கொற்றத் திருத்தோளால் வந்த விடையேழு மாய்த்ததுவும் - முந்துறக் | 370 |
கோவிய மாதர்க்கே யுள்ளங் குறைகிடந்த ஆவியே மாதாக வஞ்சுமே - ஓவிய | 371 |
சேரன் சிலையினுஞ் சீரிதே சென்றொசிய மாரன் சிலையை வணக்காயால் - சேரன்றன் | 372 |
முன்றிற் பனைதடிந்தாய் முட்டா திரவொறுக்கும் அன்றிற் பனைதடித லாகாதோ - கன்றி | 373 |
மலைக்குஞ் செழியர் படைக்கடலை மாய்த்தாய் அலைக்குங் கடன்மாய்த் தருளாய் - மலைத்தவர் | 374 |
தங்கள் புகழ்நிலவை மாய்த்தா யரிமரபிற் றிங்களின் றண்ணிலவு தீராயால் - பொங்கொலிநீர்த் | 375 |
தெம்முனை யாழ்தடிந்தா யெங்கள் செவிகவரும் எம்முனை யாழ்தடிந்தா லென்செய்யும் - செம்மணியின் | 376 |
செஞ்சோதி சிங்களத்து மாற்றுவாய் செக்கரின் வெஞ்சோதி கண்டால் விலக்காயால் - வெஞ்சுமத்துக் | 377 |
காதி விடைபண்டு காடவன் முன்றடிந்தாய் வீதி விடைதடிய வேண்டாவோ - யாதுகொல் | 378 |
வன்பல் வலந்துகைத்த வாட்டானை யின்றிந்த மென்பல் லவந்துகையா மேம்பாடு - தன்பூங் | 379 |
சுருப்புச் சிலைகொண்டு மோதுங் கழுத்திற் சுருப்புசாண் புக்கழுந்தத் தூக்கும் - நெருப்புமிழ் | 380 |
அப்புக் கழுவேற்று மாறாப் பெருங்கோப வெப்புப் படுத்தெங்கண் மெய்யுருக்கும் - தப்பா | 381 |
உடல்பிள வோட வொருதேரிடட் டூரும் அடன்மகர போசன மாக்கும்- விடுதூதால் | 382 |
அக்கால தண்ட மகற்றி யுலகளித்தாய் இக்காம தண்ட மௌிதன்றே - மைக்கோல | 383 |
வண்ணா வளர்ந்த மகரா லயமறந்த கண்ணா வநங்கன்போர் காவாயேல் - மண்ணுலகில் | 384 |
எப்புடி யாவா ரிளம்பிடியா ரென்றென்று மைப்படியுங் கண்ணாள் வருந்தினாள் - இப்படியே | 385 |
தையலார் பெற்றோகைச் சாயலார் கையகலா மையலார் போலராய் மன்றேற - வையம் | 386 |
பெருகுடையா நீரேழும் பாரேழும் பேணும் ஒருகுடையான் போந்த னுலா. | 387 |
வெண்பா
என்றினி மீள்வ தரிதி னிரணியனை அன்றிரு கூறா யடர்த்தருளிக் -கன்றுடனே ஆவின்பின் போன வனக னனபாயன் மாவின்பின் போன மனம் | |
கட்டளைக் கலித்துறை
ஆடுங் கடைமணி நாவசை யாம
லகிலமெல்லாம் நீடுங் குடையிற் றரித்த பிரானென்பர் நித்தநித்தம் பாடுங் கவிப்பெரு மாளொட்டக் கூத்தன் பதாம்புயத்தைச் சூடுங் குலோத்துங்க சோழனென் றேயெமைச் சொல்லுவரே. | 2 |
குலோத்துங்க சோழன் உலா முற்றிற்று.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குலோத்துங்க சோழன் உலா - மூவருலா - Ottakoothar Books - ஒட்டக் கூத்தர் நூல்கள் - Tamil Literature's - தமிழ் இலக்கியங்கள் - குலோத்துங்க, மென்று, செந்தா, சென்று, பெருமா, பெருமாள், செவ்வி, மன்னன், பின்னர், நெருங்க