இலக்கணச் சுருக்கம்

உதாரணம்.
சாத்தனிநன்: சாத்தனிது,. எ-ம். சாத்தன் வந்தான்: சாத்தன் வந்தது, எ-ம். பெயர்திணைப் பொதுமையைப் பின் வந்த சிறப்புப் பெயர்கள் நீக்கி உரு திணையை யுணர்த்தின.
ஒருவரென்னையர்: ஒருவரென்றாயர். எ-ம். மரம் வளர்ந்தது: மரம் வளர்ந்தன,எ-ம். பெயர்ப்பாற் பொதுமைப் பின் வந்த சிறப்புப் பெயரும் வினையும் நீக்கி ஒரு பாலையுணர்த்தின.
யாமெல்லாம் வருவோம்: நீயிரெல்லாம் போமின்: அவரெல்லாமிருந்தார் எனப் பெயரிடப் பொதுமையை முன்வந்த சிறப்புப் பெயரும் பின் வந்த சிறப்பு வினையும் நீக்கி ஒவ்வோரிடத்தை யுணர்த்தின.
வாழ்க அவன், அவள், அவர், அது, அவை, யான், யாம், நீ, நீர் என வினைத்திணை பாலிடப் பொதுமையைப் பின் வந்த சிறப்புப் பெயர்கள் நீக்கி ஒரு திணையையும் பாலையும் இடத்தையும் உணர்த்தின.
385. பெயர் வினையிரண்டும் உயர்திணை யாண் பெணிரண்டற்கும் பொதுவாகவேணும், அஃறிணை யாண்பெணிரண்டற்கும் பொதுவாகவேணும் வருமிடத்து, அப்பாலிரண்டனுள் ஒருபாற்கே யுரிய தொழின் முதலிய குறிப்பினால், அப்பாலானது துணியப்படும்.
உதாரணம்.
ஆயிரமக்கள் போர் செய்யப் போயினார் என்னுமிடத்து, மக்களென்னும் பெயரும் போயினரென்னும் வினையும் உயர்திணை யாண்பெணிருபாறற்கும் பொதுவாயினும், போர் செயலென்னுந் nhழிற்குறிப்பினால் ஆண்பால் துணியப்பட்டது.
பெருந்தேவி மகவீன்ற கட்டிலினருகே நால்வர் மக்களுளர் என்னுமிடத்து, மக்களென்னும் பெயரும் உளர் என்னும் வினையும் உயர்திணை யாண்பெணிருபாறற்கும் பொதுவாயினும், ஈனுதலென்னுந் தொழிற்குறிப்பினாற் பெண்பால் துணியப்பட்டது.
இப்பெற்ற முழவொழிந்தன என்னுமிடத்து, பெற்றமென்னும் பெயரும் ஒழிந்தன வென்னும் வினையும் அஃறிணையாண்பெணிருபாற்கும் பொதுவாயினும், உழவென்னுந் தொழிற்குறிப்பினால் எருது துணியப்பட்டது.
இப்பெற்ற முழவொழிந்தன என்னுமிடத்து, பெற்றமென்னும் பெயரும் ஒழிந்தன வென்னும் வினையும் அஃறிணையாண்பெணிருபாற்கும் பொதுவாயினும், கறத்தலென்னுந் தொழிற்குறிப்பினால் பெண்பசு துணியப்பட்டது.
----
- தேர்வு வினாக்கள்
384. திணை பால் இடங்கட்குப் பொதுவாகிய பெயர் விணைகளின் பொதுத்தன்மையை நீக்கி, ஒன்றனை உணர்த்துவன யாவை?
385. பெயர் வினை இரண்டும் உயர்திணை யாண், பெண் இரண்டற்கும் பொதுவாகவேணும் வருமிடத்து, அப்பாலிரண்டனுள் ஒன்று எதனாலே துணியப்படும்?
உயர்திணை தொடர்ந்த அஃறிணை
386. உயர்திணையெழுவாயோடு கிழமைப்பொருள் படத் தொடர்ந்து எழுவாயாக நிற்கும் அஃறினைப் பொருளாதியாறும், உயர்திணை விணையான் முடியும்.
உ-ம் நம்பி பொன்பெரியன்
நம்பி நாடு பெரியன்
நம்பி வாழ்நாள் பெரியன்
நம்பி மூக்குக் கூரியன்
நம்பி குடிமை நல்லன்
நம்பி நடை கடியன் இங்கேஉயர்திணையெழுவாயின் பயனிலையோடு அஃறிணை யெழுவாயும் முடிந்தறிக
மாடு கோடு கூரிது என்னுமிடத்தும், மாடு என்னும் அஃறிணையெழுவாயின் பயனிலையாகிய கூரிது என்னும் வினையோடு அதன்கிழமைப் பொருள்பட எழுவாயாக நின்ற கோடு என்பது முடிதறிக.
-----
- தேர்வு வினா
386. உயர்திணை யெழுவாயோடு கிழமைப் பொருள் படத் தொடர்ந்து, எழுவாயாக நிற்கும் அஃறிணைப் பொருளாதியாறும் எத்திணை வினையான் முடியும்?
கலந்த திணை பால்களுக்கு ஒரு முடிபு
387. இரு திணைப் பொருள்கள் கலந்து ஒரு தொடராக வருமிடத்து, ஆண், பெண், என்னும் இருபாற் பொருள்கள் கலந்து ஒரு தொடராக வலுமிடத்தும், சிறப்பினாலும், ஒரு முடிபைப் பெறும்.
உதாரணம்.
’’திங்களுஞ் சான்றோரு மொப்பர்’’ என் இருதிணைப் பொருள்கள் கலந்துசிறப்பினால் உயர்திணைமுடிபைப் பெற்றன. சான்நோர் திங்கள் போல மறுத் தாங்கமாட்டாமை இங்கே சிறப்பு.
’’பார்ப்பார் தவரே சுமந்தார் பிணிப்பட்டார் மூத்தோர் குழவியெனு மிவர்கள்’’ என இரு திணைப் பொருள்கள் கலந்து மிகுதியால் உயர்திணை முடிபைப் பெற்றன. அஃறிணைப் பொருள் ஒன்றேயாகா உயர்திணைப் பொருள் ஐந்தால் இங்கே மிகுதி.
’’மூர்க்கனு முதலையுங் கொண்டது விடா’’ என இருதிணைப்பொருள்கள் கலந்து இழிவினால் அஃறிணை முடிபைப் பெற்றன. மூர்க்க குணமுடை இங்கே இழிவு.
தேவதத்தன் மனைவியுந் தானும் வந்தான் எனப்பாற் பொருள்கள் கலந்து சிறப்பினால் ஆண்பான் முடிவிபைப் பெற்றன. பெண்ணினும் ஆண் உயர்ந்தமை இங்கே சிறப்பு.
-----
-- தேர்வு வினா
387. இருதிணைப் பொருள்கள் கலந்து ஒரு தொடராக வருமிடத்தும், ஆண் பெண் என்னும் இரு பாற் பொருள்கள் கலந்து ஒரு தொடராக வருமிடத்தும் அவை பலவும் எப்படி முடியும்?
திணை பால் வழுவமைதி
388. மகிழ்ச்சி, உயர்வு, சிறப்பு, கோபம், இழிவு என்னும் இவைகளுள் ஒரு காரணத்தினால், ஒரு திணைப்பொருள் வேறுதிணைப் பொருளாகவும், ஒரு பாற் பொருள் றேறுபாற் சொல்லாகவுஞ் சொல்லப்படும்.
உதாரணம்.
ஒராவினை என்னமை வந்தாள் என்றவிடத்து, உவப்பினால் அஃறிணை உயர்திணையாகச் சொல்லப்பட்டது.
பசுங்கிளியார் தூது சென்றார் என்ற விடத்து, உயர்வினால் அஃறிணை உயர்திணையாகச் சொல்லப்பட்டது.
’’தம்பொருளெம்ப தம்மக்கள்’’ என்ற விடத்துச் சிறப்பினால் உயர்திணை அஃறிணையாகச் சொல்லப்பட்டது.
பயனில்லாத சொற்களைச் சொல்லும் ஒருவனை இந்நாய் குரைக்கின்றது என்றவிடத்து, கோபத்தினால் உயர்திணை அஃறிணையாகச் சொல்லப்பட்டது.
நாங்களுடமை என்றவிடத்து இழிவினால் உயர்திணை அஃறிணையாகச் சொல்லப்பட்டது.
தன்புதல்வனை என்னம்மை வந்தாள் என்றவிடத்து, மகிழ்ச்சியினால் ஆண்பால் பெண்பாலாகச் சொல்லப்பட்டது.
ஒருவனை அவர் வந்தார் என்ற விடத்து, உயர்வினால் ஒருமைப்பால் பன்மைப்பாலாகச் சொல்லப்பட்டது.
தேவன் மூவுலகிற்குந் தாய் என்றவிடத்துச் சிறப்பினால் ஆண்பால் பெண்பாலாகச் சொல்லப்பட்டது.
‘எனைத்துணைய ராயினு மென்னாந் திணைத்துணையுந் தேரான் பிறனில் புகல்’ என்றவிடத்துக் போடத்தினாற் பன்மைப்பால் ஒரமைப்பாலாக சொல்லப்பட்டது.
பெண்வழிச் செல்வானை இவன் பெண் என்ற விடத்து இழிவினால் ஆண்பால் பெண்பாலகச் சொல்லப்பட்டது.
-----
- தேர்வு வினா
388. ஒரு திணைப்பொருள் வேறு திணைப் பொருளாகவும், ஒரு பாற் பொருள் வெறுபாற் பொருளாகவுஞ் சொல்லப்படுமோ?
ஒருமை பன்மை மயக்கம்
389. ஒருமைப்பாலிற் பன்மைச்சொல்லையும், பன்மைப்பாலில் ஒருமைச் சொல்லையும் ஒரோவிடத்துச் தழுவிச் சொல்லுதலும் உண்டு.
உதாரணம்.
வெயிலெல்லா மறைத்தது மேகம். என்னுமிடத்து, வெயில் என்னும் ஒருமைப்பாலில் எலலாமென்னும் பன்மைச் சொற்சேர்த்து சொல்லப்பட்டது.
இரண்டு கண்ணும் சிவந்நது என்னுமிடத்து, வெயில் என்னும் ஒருமைச் சொற்சேர்த்து ச் சொல்லப்பட்டது.
-----
- தேர்வு வினா
389. ஒருமைப்பாலிற் பன்மைச் சொல்லையும் பன்மைப்பாலில் ஒருமைச் சொல்லையுஞ் சொல்லதல் உண்டோ?
இடவழுவமைதி
390. ஓரிடத்திற் பிறவிடச் சொல்லை ஒரோவிடத்துத் தழுவிச் செல்லுதலும் உண்டு.
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 39 | 40 | 41 | 42 | 43 | ... | 45 | 46 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இலக்கணச் சுருக்கம், Ilakkana Surukkam, Grammar's, இலக்கணங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள்

