இலக்கணச் சுருக்கம்

உதாரணம்.
1 பூங்குழல் என்பது இரண்டாம் வேற்றுமைத் தொகைநிலை கலத்துப் பிறந்த அன்மொழித் தொகை. இது பூவையுடைய குழலினையுடையாள் என விரியும்
போற்கொடி என்பது மூன்றாம் வேற்றுமைத் தொகை நிலைக்கலத்துப் பிறந்த அன்மொழித் தொகை. இது பொன்னாலாகிய தொடியினையுடையாள் என விரியும்
கவியிலக்கணம் என்பது நான்காம் வேற்றுமைத் தொகை நிலைக்களத்துப் பிறந்த அன்மொழித் தொகை. இது கவிக்கிலக்கணஞ் சொல்லப்பட்ட நூல் என விரியும்.
பொற்றாலி என்பது ஐந்தாம் வேற்றுமைத் தொகைநிலைக்ளத்துப் பிறந்த அன்மொழித் தொகை. இது பொன்னாகிய தாலியினையுவடயாள் என விரியும்.
கிள்ளிக்குடி என்பது ஆறாம் வேற்றுமைத் தொகைநிலைக்ளத்துப் பிறந்த அன்மொழித் தொகை. இது கிள்ளியினது குடியிருக்குமூர் என விரியும்.
கீழ்வயிற்றுக்கழலை என்பது ஏழாம் வேற்றுமைத் தொகைநிலைக்ளத்துப் பிறந்த அன்மொழித் தொகை. இது கீழ் வயிற்றின்கண் எழுந்த கழலைபோல்வான் என விரியும்.
2 தாழ்குழல் என்பது வினைத் தொகை நிலைக்களத்துப் பிறந்த அன்மொழித் தொகை. இது தாழ்ந்த குழலினையுடையாள் என விரியும்.
3 கருங்குழல் என்பது பண்புத் தொகை நிலைக்களத்துப் பிறந்த அன்மொழித் தொகை. இது கருமையாகிய குழலினை யுடையாள் என விரியும்.
4 தேன்மொழி என்பது உவமைத் தொகை நிலைக்களத்துப் பிறந்த அன்மொழித் தொகை. இது தேன் போலு மொழியினை யுடையாள் என விரியும்.
5 உயிர்மெய் என்பது உம்மைத் தொகை நிலைக்களத்துப் பிறந்த அன்மொழித் தொகை. இது உயிருமெய்யுங் கூடிப்பிறந்த எழுத்து என விரியும்.
-----
-- தேர்வு வினா
358. அன்மொழித் தொiயாவது யாது?
தொகைநிலைத் தொடர் மொழிகள் பலபொருள் படுதல்
359. தொகைநிலைத் தொடர் மொழிகளை விரித்துப் பொருள் கொள்ளுமிடத்து, ஒரு பொருளைத் தருவன வன்றி, இரண்டு முதல் ஏழெல்லையாகிய பல பொருள்களைத் தருவனவும் உளவாம்.
உதாரணம்.
(1) தெய்வ வணக்கம் - இரண்டு பொருள்
1. தெய்வத்தை வணங்கும் வணக்கம், 2. தெய்வத்திற்கு வணங்கும் வணக்கம்.
(2) தற்சேர்ந்தார் - மூன்று பொருள்
1. தன்னைச் சேர்ந்தார், 2. தன்னோடு சேர்ந்தார், 3. தன்கட் சேர்ந்தார்.
(3) சொல்லிணக்கம் - நான்கு பொருள்
1. சொல்லினதிலக்கணம், 2. சொற்கிலக்கிணம், 3. சொல்லின் கணிலக்கணம் 4. சொல்லினதிலக்கணஞ் சொன்ன நூல்.
(4) பொன்மணி - ஐந்து பொருள்
1. பொன்னாலாகிய மணி, 2. பொன்னாகிய மணி, 3. பொன்னின் கண் மணி, 4. பொன்னோடு சேர்ந்த மணி, 5. பொன்னு மணியும்.
(5) மர வேலி - ஆறு பொருள்
1. மரத்தைக் காக்கும் வேலி, 2. மரத்திற்கு வேலி, 3. மரத்தினது வேலி, 4. மரத்தின புறத்து வேலி, 5. மரத்தாலாகிய வேலி, 6. மரமாகிய வேலி.
(6) சொற்பொருள் - ஏழு பொருள்
1. சொல்லாலறியப்படும் பொருள், 2. வொல்லினது பொருள், 3. சொற்குப் பொருள், 4. சொல்லின் கட் பொருள், 5. சொல்லும் பொருளும், 6. வொல்லாகிய பொருள், 7. சொல்லானது பொருள்.
-----
-- தேர்வு வினாக்கள்
359. தொகை நிலைத் தொடர்மொழிகளை விரித்துப் பொருள் கொள்ளுமிடத்து, அவைகளுள், ஒரு பொருளைத் தருவனவன்றிப் பல பொருள்களைத் தருவனவும் உளவோ?
தொகைநிலைத் தொடர்மொழிகளிற் பொருள் சிறக்கும் இடங்கள்
360. தொகைநிலைத் தொடர்மொழிகளுள்ளே, வேற்றுமைத் தொகையிலும், பண்புத்தொகையிலும், முன் மொழியிலாயினும், பின் மொழியிலாயினும் பொருள் சிறந்து நிற்கும்; வினைத் தொiயிலும், உவமைத் தொகையிலும், முன் மொழியிற் பொருள் சிறந்து நிற்கும்; உம்மைத் தொகையில் அனைத்து மொழியிலும் பொருள் சிறந்து நிற்கும்; அன்மொழித் தொகையில் இரு மொழியுமல்லாத புற மொழியிற் பொருள் சிறந்து நிற்கும்.
(உதாரணம்)
வேங்கைப்பூ, வெண்டாமரை என வரும் வேற்றுமைத் தொகை பண்புத் தொகைகளிலே, முன்மொழிகள் இனம் விலக்கி நிற்றலால், அம் முன் மொழிகளிற் பொருள் சிறந்தன.
கண்ணிமை, செஞ்ஞாயிறு என வரும் வேற்றுமைத் தொகை பண்புத் தொகைகளிலே, முன் மொழிகள் இனம் விலகுதலின்றி நிற்றலால், பின் மொழிகளிற் பொருள் சிறந்தன.
ஆடு பாம்பு, வேற்கண் என வரும் வினைத் தொகை எவமைத் தொகைகளிலே, முன்மொழிகள் இனம் விலக்கி நிற்றலால், அம்முன் மொழிகளிற் பொருள் சிறந்தன.
இராப்பகல், சேரசோழ பாண்டியர் என வரும் உம்மைத் தொகைகளிலே, அனைத்து மொழிகளும் இனம் விலக்கலும் விலாக்காமையுமின்றி நிற்றலால், அவ்வனைத்து மொழிகளிலும் பொருள் சிறந்தன.
பொற்றொடி, உயிர்மெய் என வரும் அன்மொழித் தொகைகளிலே, வொல்லுவொனுடைய கருத்து இவ்விரு மொழிப் பொருண் மேலதகாது, இவ்விரு மொழியுமல்லாத உடையாண் முதலிய புறமொழிப் பொருண்மேலேதாதலால், அப்புற மொழிகளிற் பொருள் சிறந்தன.
-----
- தேர்வு வினா
368. தொகைநிலைத் தொடர்மொழிகளுள், எந்தெந்தத் தொடரில் எந்தெந்த மொழியிற் பொருள் சிறந்து விளங்கும்?
தொகைநிலைத் தொடரியல்
முற்றிற்று.
3.2. தொகாநிலைத் தொடரியல்
361. தொகாநிலைத் தொடராவது, இடையே வேற்றுமையுருபு முதலிய உருபுகள் கெடாமலும்., ஒரு சொற்றன்மைப்படாமலும், சொற்கள் பிளவு படத் தொடர்வதாம்.
----
- தேர்வு வினா
தொகாநிலைத் அதாடராவது யாது?
தொகா நிலைத் தொடர்ப்பாகுபாடு
362. அத்தெபாக நிலைத்தொடர், எழுவாய்த் தொடர், விளித் தொடர், வேற்றுமைத் தொகாநிலைத் தொடர், வினைமுற்றுத் தொடர், பெயரெச்சத் தொடர், இடைச்சொற்றொடர், உரிச்சொற் றொடர், அடக்குத் தொடர் என ஒன்பது வகைப்படும்.
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 36 | 37 | 38 | 39 | 40 | ... | 45 | 46 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இலக்கணச் சுருக்கம், Ilakkana Surukkam, Grammar's, இலக்கணங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள்

