இலக்கணச் சுருக்கம்

319. தொறும், தோறும், என்னும் இவ்விரண்டிடைச்
சொற்களும், இடப்பன்மைப் பொருளையுந் தொழிற் பயில்வுப் பொருளையுந்
தரும்.
உதாரணம்.
இடப்பன்மை - சோழநாட்டி லூர்தொறுஞ் சிவாலயம்
தொழிற்பயில்வு - படிக்குந் தொறு மறிவு வளறும்
தோறும் என்பதையும் இப்படியே இவைகளோடும் ஒட்டிக் கொள்க.
320. இனி என்னும் இடைச்சொல், காலவிடங்களின் எல்லைப் பொருளைத் தரும்.
உதாரணம்.
காலவெல்லை - இனி வருவேன்
இடவெல்லை - இனியெம்மூர்
321. முன், பின் என்னும் இடைச் சொற்கள், காலப் பொருளையும், இடப்பொருளையுந் தந்து, ஏழாம் வேற்றுமைப் பொருள்பட வரும்.
உதாரணம்.
காலம் - முன் பிறந்தான். பின் பிறந்தான்
இடம் - முன்னிருந்தான், பின்னிருந்தான்
முன். பின் என்பவைகள், முன்பு, பின்பு, எ-ம்.
முன்னை, பின்னை, எ-ம். முன்னர், பின்னர், எ-ம்.
விகாரப்பட்டும் வழங்கும்.
322. வளா, சும்மா என்னும் இடைச்சொற்கள், பயனின்மைப் பொருளைத் தரும்.
உதாரணம்.
வளா விருந்தான், சும்மா வந்தான்
323. ஆவது, ஆதல், ஆயினும், தான் என்னம் இடைச் சொற்கள் விகற்பப் பொருளைத் தரும்.
விகப்பமாவது, அது அல்லது இது என்னும் பொருள்பட வருவது.
உதாரணம்.
ஆவது - தேவாரமாவது திருவாசகமாவது கொண்டு வா
ஆதல் - சோறாதல் கூழாதல் கொடு
ஆயினும் - வீட்டிலாயினுங் கோயிலிலாயினும் இருப்பேன்
தான் - பொன்னைத்தான் வெள்ளியைத்தான் கொடுத்தானா
324. அந்தோ, அன்னோ, ஐயோ, அச்சோ, அஆ, ஆஅ, ஒஓ, என்றாற் போல வருவன, இகழ்ச்சிப் பொருளைத் தரும் இடைச் சொற்களாம்.
325. சீ, சீசீ, சிச்சீ, சை என்றாற்போல வருவன, இகழ்ச்சிப் பொருளைத் தரும் இடைச் சொற்களாம்.
326. கூ, கூகூ, ஐயோ, ஐயையோ என்றாற்போல வருவன, அச்சப் பொருளைத் தரும் இடைச் சொற்களாம்.
327.ஆஅ, ஆகா, ஓஒ, ஓகோ, அம்மா அம்மம்மா, அச்சோ என்றாற் போல வருவன, அதிசயப் பொருளைத் தரும் இடைச் சொற்களாம்.
-----
- தேர்வு வினாக்கள்
298. பிறவாறு தத்தமக்குரிய பொருள்களை உணர்த்தி வருமென்ற இடைச் வொற்கள் எவை?
299. ஏகாரவிடைச் சொல் எப்பொருளைத் தரும்?
300. ஒகார விடைச்சொல் எப்பொருளைத் தரும்? சிறப்பு எத்தனை வகைப்படும்? உயர்வு சிறப்பாவது யாது? இழிவு சிறப்பாவது யாது? இங்கே சிறப்பித்தலென்றது என்னை?
301. உம் என்னும் இடைச் சொல் எவ்வௌ; பொருளைத் hரும்? எச்சம் எத்தனை வகைப்படும்?
302. ஒரு பொருளில் வரும் உம்மை மற்நொரு பொருளையுந் தருமோ?
303. எச்சவும்மையாற் றழுவப்படும் பொருட் சொல்லில் உம்மையில்லையாயின் அச்சொல் எச்சவும்மையோடு கூடிய சொற்கு முதலிலே சொல்லப்படுமோ ஈற்றிலே சொல்லப்படுமோ?
304. என, என்று என்னும் இரண்டிடைச்சொற்களும் எவ்வௌ; பொருளைத் தரும்?
305. எண்ணுப் பொருளில் வரும் இடைச் சொற்கள் எவை?
306. எவ்வௌ; எண்கள் தொகைச் சொற் பெற்று வரும்? எவ்வௌ; வெண்கள் தொகைச் சொற் பெற்றும் பெறாதும் வரும்? பெயர்ச் செவ்வெண்ணாவது யாது?
307. எண்ணிடைச் சொற்கள் எணப்படும் பொருடோரும் நிற்கவே பெறுமோ?
308. வினை, எணப்படுமிடத்து, எண்ணிடைச் சொற் பெறாதோ?
309. அ, இ, உ, எ-ம். ஆ, யா, எ-ம். வரும் இடைச் சொற்கள் எவ்வௌ; பொருனைத் தரும்?
310. கொல் னெ;னும் இடைச்சொல் எவ்வௌ; பொருனைத் தரும்?
311. மற்று என்னும் இடைச்சொல் எவ்வௌ; பொருனைத் தரும்? இங்கே வினை மாற்றென்றது என்ன? பிறிதென்றது என்ன?
312. மன் என்னும் இடைச்சொல் எவ்வௌ; பொருனைத் தரும்?
313. கொன் என்னும் இடைச்சொல் எவ்வௌ; பொருனைத் தரும்?
314. அந்தில் என்னும் இடைச்சொல் எவ்வௌ; பொருளைத் தரும்?
315. மன்ற என்னும் இடைச் சொல் எவ்வௌ; பொருளைத் தரும்?
316. அம்ம என்னும் இடைச் சொல் எவ்வௌ; பொருளில் வரும்?
317. ஆங்க என்னும் இடைச் சொல் எவ்வௌ; பொருளில் வரும்?
318. இது உயர்தற் பொருட்டு வரும் போது எவ்விடத்து வரும்? அசைநிலையாகும் போது எவ்விடத்து வரும்?
319. தொறும், தோறும், என்னும் இரண்டிடைச் சொற்களும் எவ்வௌ; பொருளைத் தரும்? முன், பின், என்னம் இடைச் சொற்கள் எப்பொருளைத் தரும்?
320. இனி என்னும் இடைச் சொல் எப்பொருளைத் தரும்?
322. வாளா, சும்மா என்னும் இடைச் சொற்கள் எப்பொருளைத் தரும்?
323. ஆவது, ஆதல், ஆயினும், தான் என்னும் இடைச் சொற்கள் எப்பொருளைத் தரும்? விகற்பமாவது என்ன?
324. இரக்கப் பொருளைத் தரும் இடைச் சொற்கள் எப்பொருளைத் தரும்?
325. இகழ்ச்சிப் பொருளைத் தரும் இடைச் சொற்கள் எவை?
326. அச்சுப் பொருளைத் தரும் இடைச் சொற்கள் எவை?
327. அதிசயப் பொருளைத் தரும் இடைச் சொற்கள் எவை?
குறிப்பின் வரும் இடைச்சொற்கள்
328. அம்மென், இம்மென, கோவென, சோவென, துடுமென, ஒல்லென, கஃறென, சுஃறென, எ-ம். கடகடென, களகளென, திடுதிடென, நெறுநெறென, படபடென, எ-ம். வருவன, ஒலிக்குறிப்புப் பொருளைத்தரும் இடைச் சொற்களாம்.
329. துண்ணென, துணுக்கென, திட்கென, திடுக்கென, என்றாற் போல்வன, அச்சக்குறிப்புப் பொருளைத்தரும் இடைச்சொற்களாம்.
330. பொள்ளென, பொருக்கென, கதுமென, ஞெரேலென, சரேலென என்றாற் போல்வன, விரைவுக் குறிப்புப் பொருளைத்தரும்.
தேர்வு வினாக்கள் - 328. ஒலிக்குறிப்புப் பொருளைத் தரும் இடைச் சொற்கள் எவை? 329. அச்சக்குறிப்புப் பொருளைத் தரும் இடைச்சொற்கள் எவை? 330. விரைவுக் குறிப்புப் பொருளைத் தரும் இடைச்சொற்கள் எவை?
இசைநிறை
331. ஒடு, தெய்ய என்பன, இசை நிறையிடைச் சொற்களாம்.
-----
- தேர்வு வினா
இசைநிறைச் சொற்கள் எவை?
அசைநிலை
332. மா என்பது, வியங்கோளைச் சார்ந்து வரும் அசை நிலையிடைச் சொல்லாம்.
333. மியா, இக, மோ, மதி, அத்தை, இத்தை, வாழிய, மாள, ஈ, யாழ என்னும் பத்தும், முன்னிலை மொழியைச் சார்ந்து வரும் அசையிடைச் சொற்களாம்.
334. யா, கா, பிற, பிறக்கு, அரோ, போ, மாது, இகும், சின், குரை, ஓரும், போலும், அன்று, ஆம், தாம், தான், இசின், ஐ, ஆல், என், என்ப என்னும் இருபத்தொன்றும், மூவிடத்துக்கும் வரும் அசைநிலையிடைச் சொற்களாம்.
-----
-- தேர்வு
வினாக்கள்
332. வியங்கோளைச் சார்ந்து வரும் அசை நிலையிடைச் சொல் எது?
333.முன்னிலை மொழியைச் சார்ந்து வரும் அசைநிலையிடைச் சொற்கள் எவை?
334. மூவிடத்துக்கும் வரும் அசையிடைச் சொற்கள் எவை?
இடையியல் முற்றிற்று
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 33 | 34 | 35 | 36 | 37 | ... | 45 | 46 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இலக்கணச் சுருக்கம், Ilakkana Surukkam, Grammar's, இலக்கணங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள்

