இலக்கணச் சுருக்கம்

உதாரணம்.
உண்டான், கொடுத்தான், கண்டான், படித்தான், இவை, சோற்றையுண்டான், பொருளைக் கொடுத்தான் எனச் செயப்படும் பொருளேற்று, வருதல் காண்க.
287. தன்வினையாவது தன்னெழுவாய் கருத்தாவின் றொழிலை உணர்த்தி நிற்கும் முதனிலை அடியாகத் தோன்றிய வினையாம் இத்தன்வினை இயற்றுதற் கருத்தாவின் வினையெனப்படும்.
செயப்பாடு பொருள் கன்றிய முதனிலை செயப்பாடு பொருள் குன்றாத முதனிலை என்னும் இரு வகை முதலினையும் தன்வினைக்கு முதனிலையாக வரும்.
உதாரணம்.
சாத்தனடைந்தான், தச்சன் கோயிலைக் கட்டினான்.
இவைகளிலே, நடக்கையுங் காட்டலுமாகிய முதனிலைத் தொழில்கள் எழுவாய்க் கருத்தாவின் றொழிலாதல் காண்க.
288. பிறவினையாவது தன்னெழுவாய் இக்கருத்தா வல்லாத பிறகருத்தாவின் தொழிலை உணர்த்தி நிற்கும் முதனிலையடியாக தோன்றிய வினையாம். இப்பிறவினை ஏவுதற் கருத்தாவின் வினை எனப்படும்.
செயப்படு பொருள் குன்றிய முதனிலை, செயப்படுபொருள் குன்றாத முதனிலை என்னும் இரு வகை முதனிலைகளும் பிறவினை விகுதி பெற்றேனும் தாம் விகாரப்பட்டேனும், விகாரப்பட்டு விகுதிபெற்றேனும், பிற வினைப் பகுதிகளாய், வருதல் பதவியலிற் கட்டுவித்தான்.
இவைகளிலே நடக்கையுங் கட்டலுமாகிய முதனிலை தொழில்கள், எழுவாய் கருத்தாவின் தொழிலாகாது பிறகரத்தாவின் தொழிலாதல் காண்க.
செயப்படு பொருள் குன்றிய முதனிலை அடியாகத் தோன்றிய பிற வினைகள், அம் முதனிலைக் கருத்தாவைக் தமக்குச் செயப்படு பொருளாக கொண்டு வரும்.
உதாரணம்.
கொற்றான் சாத்தனைக் கடைப்படித்தான்
அரசன் றச்சனாற் கோயிலைக் கட்டுவித்தான்
289. தன் வினைக்கும் பிறவினைக்கும் பொதுவாக நிற்கும் முதனிலைகளுக்குஞ் சிலவுளவாம்.
உதாரணம்.
முதனிலை தன்வினை பிறவினை
அழி நீ யழி காட்டை யழி
கெடு நீ கெடு அவன் குடியைக் கெடு
வெளு நீ யுடம்படுவெளு துணியை வெளு
கரை நீ கரை புளியைக் கரை
தேய் நீ தேய் கட்டையைத் தேய்
இம்முன்னிலைகளால் வினைச்சொற் பிறத்தல் வருமாறு.
முதனிலை தன்வினை பிறவினை
அழி அழித்தான்
அழிக்கின்றான்
அழிவான் அழித்தான்
அழிக்கின்றான்
அழிப்பான்
கெடு கெட்டான்
கெடுகின்றான்
கெடுவான் கெட்டான்
கெடுகின்றான்
கெடுப்பான்
வெளு வெளுத்தான்
வெளுக்கின்றான்
வெளுப்பான் வெளுத்தான்
வெளுக்கின்றான்
வெளுப்பான்
கரை கரைந்தான்
கரைக்கின்றான்
கரைவான் கரைந்தான்
கரைக்கின்றான்
கரைப்பான்
தேய் தேய்ந்தான்
தேய்கின்றான்
தேய்வான் தேய்ந்தான்
தேய்கின்றான்
தேய்ப்பான்
290. பிறவினைகள், ஒரோவிடத்துப் பிறவினைவிகுதி தொக்கும் வரும்.
உதாரணம்.
அரசன் செய்த தேர்: இதிலே செய்வித்த என்னும் பிறவினை செய்த என விவ்விகுதி தொக்கு நின்றது.
கோழி கூலிப் பொழுது புலர்ந்தது: இதிலே கூவிலித்து என்னும் பிறவினை கூவி என விவ்விகுதி தொக்கு நின்றது.
291. செய்வினையாவது, படு விகுதி புணராத முதனிலை அடியாகத் தோன்றி, எழுவாய்க் கருத்தாவைக் கொண்டு வரும் வினையாம்.
உதாரணம்.
சாத்தனடந்தான் நடப்பித்தான்
சாத்தன் கட்டினான் கட்டுவித்தான்
292. செயப்பாட்டு வினையாவது, படு விகுதி புணர்ந்த முதனிலை அடியாகத் தோன்றி, வினைமுதல் மூன்றாம் வேற்றுமையிலும், செயப்படு பொருள் எழுவாயிலும் வரப்பெறும் வினையாம்.
பிறவினை முதனிலைகளும், செயப்படு பொருள் குன்றாத தனவினை முதனிலைகளும், படு விகுதியோடும், இடையே அகரச்சாரியையேனும், குச்சாரியையும் அகரச்சாரியையுமேனும் பெற்று, செயப்பாட்டு வினை முதனிலைகளாக வரும்.
உதாரணம்.
சாத்தனா லிம்மாடு நடப்பிக்கப்பட்டது
கொற்றான லிச்சோ றுண்ணப்பட்டது.
293. செயப்பாட்டுவினை, ஒரோவிடத்துப் படு விகுதி தொக்கும் வரும்.
உதாரணம்.
“இல்வாழ்வானென்பான்“, இங்கே எனப்படுவான் என்னுஞ் செயப்பாட்டு வினை என்பான் எனப் படுவிகுதி தொக்கு நின்றது.
உண்டசோறு: இங்கே உண்ணப்பட்ட என்னுஞ் செயப்பாட்டு வினை உண்ட எனப் படு விகுதி தொக்கு நின்றது.
-----
-
- தேர்வு வினாக்கள்
284. தெரிநிலை வினைச் சொற்கள் இன்னும் எவ்வௌ; வகையிற் பிரிவு பட்டு வழங்கும்?
285. செயப்படு பொருள் குன்றிய வினையாவது யாது?
286. செயப்படு பொருள் குன்றாத வினையாவது யாது?
287. தன்வினையாவது யாது? தன் வினைக்கு முதனிலையாக வருவன எவை?
288. பிற வினையாவது யாது? பிற வினைக்கு மதனிலையாக வருவன எவை?
செயப்படு பொருள் குன்றிய முதனிலை அடியாகத் தோன்றிய பிறவினைகள் எதனைத் தமக்குச் செயப்படுபொருளாக கொண்டு வரும்?
செயப்படு பொருள் குன்றாத முதனிலை அடியாகத் தோன்றிய பிறவினைகள் அம் முதனிலைக் கருத்தாவை யாதாகக் கொண்டு வரும்?
289. தன்வினைக்கும் பிறவினைக்கும் பொதுவாய் நிற்கும் முதனிலைகள் உளவோ?
290. பிறவினைகள் ஒரோவிடத்து பிறவினை விகுதி தொக்கும் வருமோ?
291. செய்வினையாவது யாது?
292. செயப்பாட்டு வினையாவது யாது?
எவ்வௌ; முதனிலைகள் எவ்வௌ;வாறு செயப்பாட்டு வினைக்கு முதனிலைகளாக வரும்?
293. செயப்பாட்டு வினை ஒரோவிடத்துப் படு விகுதி தொக்கும் வருமோ?
வினையாலணையும் பெயர் விகாரப்படுதல்
294. வினையாலணையும் பெயர்கள், சிறுபான்மை இயல்பாகியும், பெரும்பாலும் விகாரப்பட்டும் வரும்.
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 30 | 31 | 32 | 33 | 34 | ... | 45 | 46 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இலக்கணச் சுருக்கம், Ilakkana Surukkam, Grammar's, இலக்கணங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள்

