இலக்கணச் சுருக்கம்

எதிர்மறை
வினைமுற்று
252. எதிர்மறை குறிப்பு வினைமுற்றுக்கள், ஆல், இல் என்னும் எதிர்மறைப் பன்படியாக தோன்றிப் பால் காட்டும் விகுதிகளை பெற்று வருவனாவாம்.
உதாரணம்.
படர்க்கை - அல்லன், அல்லள், அல்லர் அன்று அல்ல அல்லனஸ
இலன் இலள் இலர் இன்று இல ஜ இல்லனஸ
தன்மை - அல்லேன் அல்லேம் இலேன் இலேம்
முன்னிலை - அல்லாய் அல்லீர் இலாய் இலீர்
இன்மை என்பது ஒரு பொருளினது உண்மைக்கும் ஒரு பொருளை உடமைக்கு மறுதலை உண்மை உளதாதல்.
உதாரணம்.
உண்மை இன்மை
இங்கே சாத்தனுளன்
இவனிடத்தே அறமுண்டு இங்கே சாத்தானிலன்
இவனிடத்தே அறமின்று
உடமை இன்மை
இவன் பொருளுடையன்
இது குணமுடையது இவன் பொருளிலன்
இது குணமில்லது
அன்மையென்பது ஒரு பொருள் சுட்டியதொரு பொருளாதற்கு மருதலை, பிரிது பொருளாதலைக் காட்டும். என்றபடி
உதாரணம்.
இவன் சாத்தனல்லன்: ஜ கொற்றன் ஸ
இஃதறனன்று: ஜ மறம் ஸ
---
253. எதிர்மறத் தெரிநிலை முற்றுக்கள், இல் ஆல், ஆ, என்னும் எதிர்மறையிடைநிலைகளோடு பால் காட்டும் விகுதிகளைப் பெற்று வருவனவாம். இவற்றுள் இல் இடைநிலை இறந்தகால இடைநிலையோடும் விகாரப்டிறந்த காலங்காட்டும் பகுதியோடும். நிகழ்கால விடைநிலையோடும். கூடி வரும். இனி இடைநிலையோடு கூடாது, இல் இடைநிலை குஞ்சாரியை பெற்றும் ஆல் இடைநிலை குஞ்சாரியை பெற்றும் பெறாதும் ஆகாரவிடைசாரியை பெறாதும் எதிர்காலம் உணர்த்தி வரும்.
உதாரணம்.
நடந்திலன், பெற்றிலன், நடக்கின்றிலன், நடக்கிலன், எ-ம். நடக்கலன், உண்ணலன், எ-ம். நடவான், எ-ம். வரும். மற்ற விகுதிகளோடு இப்படியேயொட்டிக் கொள்க.
இல், அல், ஆ, இவ் மூன்றையும் எதிர்மறை விகுதி என்பர் சிலர். எதிர்மறை இடைநிலையெனபதே சேனாவரையார். சிவஞான முனிவர். முதலியோர் துண்வு நடவா என்னும் அஃறிணைப்பலவின் பால் படர்க்கை வினைமுற்றில் ஆகாரம் வெரு விகுதி வேண்டாது தானே, எதிர்மறை பொருளோடு பலவின்பாற் படர்க்கைப் பொருளையுந் தந்து நிற்றலின், அங்கு மாத்திரம் விகுதியோ யென்றறிக.
அகரவிடைநிலை வருமெழுத்து உயிராயவழிக் கெடுதல் பதவியலிற் பெறப்பட்டது.
இங்ஙனமன்றி உடன்பாட்டு தெரிநிலை முற்றுக்களே ஆல் என்னும் பன்படியாக தோன்றிய எதிர்மறை சிறப்பு வினைக்குறிப்போடாயினும் இல்லை யென்னும் எதிர்மறைத்த தெரிநிலை வினைமுற்றுக்களாயும் வரும்.
உதாரணம்.
உண்டானல்லன், உண்டேனல்லன், உண்டாயல்லை, எ-ம். வந்தானில்லை, வந்தேனில்லை, வந்தாயில்லை, எ-ம். வரும்.
-
தேர்வு வினா
252. எதிர்மறைத் குறிப்பு வினைமுற்றுக்கள் எவை? இன்மையென்பது என்னை?
அன்மை யென்பது என்னை?
253. எதிர்மறைத் தெரிநிலை வினைமுற்றுக்கள் எவை?
இவற்றுள் இல் இடைநிலை எப்படி வரும்? ஆல் இடைநிலை எப்படி வரும்?
அகரவிடைநிலை எப்படி வரும்?
எதிர்மறைத்தெரிநிலை வினைமுற்றுக்கள் இங்ஙனமன்றி, இன்னும் எங்ஙனம் வரும்?
முன்னிலையேவல் விiனுமுற்று
254. முன்னிலையேவல் வினைமுற்று, முன்னிலையேவலொருமை வினைமுற்று முன்னிலையேவற் பன்மை வினைமுற்றும் என இரு வகைப்படும்.
---
255. ஆய், இ, ஆல், ஏல், ஆல், என்னும் விகுதிகளை இருதியில் உடைய வினைச்சொற்களும் ஆய் விகுதி புணர்ந்து குன்றிப் பகுதி மாத்திரையாய் நிற்கும் விசை; சொற்களும் முன்னிலையேவாலொருமை தெரிநிலை வினைமுற்றுக்களாம். இவற்றுல் அல், ஏன், ஆல், என்னும் மூன்று விகுதிகளும் எதிர்மறையிடத்து வரும்.
உதாரணம்.
உதாரணம். உண்ணாய்
உண்ணல் உண்ணுதி
உண்ணேல் உண்
மாறல் நீ
ஏவல் விகுதிகள் இடைநிலையின்றி தாமே எதிர்காலங்காட்டல் பதவியலிற் பெறப்பட்டது.
எதிர்மறையாலொருமை வினைமுற்றுக்கள், உண்ணாதே, உண்ணாதீ, என எதிர்மறை ஆகாரவிடை நிலையின் முன் தகரவெழுத்து பெற்றோடு எகர விகுதி இகரவிகுதிகளுள் ஒன்று பெற்றும் வரும்.
---
256. ஈர், உம், மின், என்னும் விகுதிகளை இறுதியில் உடைய வினைச் சொற்கள் முன்னிலையேவற் பன்மைத் தெரிநிலை வினைமுற்றுக்களாம்.
உதாரணம்.
உண்ணீர், உண்ணும் உண்மின் - நீர்
எதிர்மநையேவற் பன்மைவினை முற்றுக்கள் உண்ணமின், நடவன்மின் என, பகுதிக்கும் வின் விகுதிக்கும் இடையே எதிர்மறை அல் இடைநிலை பெற்று வரும்.
(1) உண்ணாய், என்னும் முன்னிலையொருமை யெதிர்மறை தெரிநிலை வினைமுற்று வேறே: உண்ணாய் என்னும், முன்னிலையேவலொருமை தெரிநிலை வினைமுற்றும் வேறே: முன்னையது உண்ணென்னும் பகுதியும் பெற்று அகரவிடைநிலை கேட்டு முடிந்நது. பின்னையது உன் என்னும் பகுதியும் ஆய் விகுதியும் பெற்று முடிந்தது.
(2) உண்ணீர் என்னும் முன்னிலைப் பன்மையெதிர்மறை தெரிநிலை வினைமுற்றும், வேறே: உண்ணீர் என்னும் முன்னிலையேவற் பன்மைத் தெரிநிலைவினைமுற்று வேறே: முன்னையது உண் என்னும் பகுதியும் ஆவன என்னும் எதிர்மறை இடைநிலையும் ஈர் விகுதியும் பெற்று இடைநிலை ஆகாரம் கேட்டு முடிந்தது. பின்னையது உண் என்னும் பகுதியும் ஈர் விகுதியும் பெற்றும் முடிந்தது.
-----
--
தேர்வு வினாக்கள்
254. முன்னிலையேவல் வினைமுற்று எத்தனை வகைப்படும்?
255. முன்னிலையேவலொருமை தெரிநிலை வினை முற்றுக்கள் எவை? இவற்றுள் எவை எதிர்மறையிடத்து வரும்? எதிர்மறையேவலொருமை வினைமுற்றுக்கள் என்னும் எப்படி வரும்?
256. முன்னிலையேவற் பன்மைத் தெரிநிலை வினைமுற்றுக்கள் எவை? எதிர்மறையேவற் பன்மைவினைமுற்றுக்கள் எவை?
வியங்கோல் வினைமுற்று
257. க, இய, இயர், அ, அல், என்னும் விகுதிகளை இறுதியில் உடைய வினைச் சொற்கள் வியங்கோள் வினைமுற்றுக்களாம்.
வியங்கோளாவது, இருதிணையைம்பாண் மூவிடங்கட்கும் பொதுவாகிய ஏவல்.
ககரவிகுதி - வாழ்க
இயவிகுதி - வாழிய
அகரவிகுதி - வர
அல்விகுதி - ஒம்பல் உண்க
உண்ணிய
உண்ணியர்
உண்ண
எனல் யான்,யாம்
நீ, நீர்
அவன்,
அவள், அவர்,
அது, அவை
வாழிய என்பது, ஆ, வாழி, அந்தணர் வாழி எனப் பெரும்பாலும் ஈற்றுயிர் மெய் கெட்டு வரும்.
வா ஸ்ரீ வருக, உன்னை ஸ்ரீ உன்க
ஒம்பல் ஸ்ரீ ஒம்புக, எனல் ஸ்ரீ என்க
சிறுபான்மை, இவை, இக்காலத்து உலக வழக்கிலே நடக்கக்கடவுன், நடக்கக்கடவுள், எ-ம். நடப்பானாக நடப்பாளாக நடப்பாராக. எ-ம். பாலிடங்களுள் ஒன்றற் குரியாவாய் வருமெனவுங் கொள்க.
எதிர்மறை வியங்கோள் வினைமுற்றுக்கள், மறவற்க, உண்ணற்க அல் இடைநிலை பெற்று வரும்.
அன்றியும், ‘மகனெல்’ என்னுமிடத்து மகனென்று சொல்லற்க எனவும், ‘மாPஇயதொரால்’ என்னுமிடத்து மாPயதொருவற்க. எ-ம். பொருள்பட நிற்றலால், அல், ஆல் இரண்டும் எதிர்மறை வியங்கோள் விகுதிகளாய் வருமெனவும் அறிக.
மேற்கூறிய ஏவல் விகுதிகளும் இவ்வியங்கோள் விகுதிகளும் இடைநிலையின்றித் தாமே எதிர்காலங் காட்டல் பதவியலிற் பெறப்பட்டது.
-----
-
- தேர்வு வினாக்கள்
257. வியங்கோள் வினைமுற்றுக்கள் எவை? வியங்கோளாவது என்ன? எதிர்மறை வியங்கோள் வினைமுற்றுக்கள் எவை? வியங்கோளாவது என்ன? எதிர்மறை வியங்கோள் வினைமுற்றுக்கள் எவை?
செய்யுமென் முற்று
258. செய்யுமென்னும் வாய்ப்பாட்டுத் தெரிநலை வினைமுற்றுச் சொற்கள், படர்க்கையிடத்தனவாகிய ஐம்பால்களுக்குள்ளே பலர்பாலொழிந்த நான்கு பால்களுக்கும் பொதுவாக வரும்.
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 25 | 26 | 27 | 28 | 29 | ... | 45 | 46 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இலக்கணச் சுருக்கம், Ilakkana Surukkam, Grammar's, இலக்கணங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள்

