இலக்கணச் சுருக்கம்

அஃறிணையிற் பாற் பொதுப் பெயர்
203. து என்னும் ஒருமைவிகுதியையாயினும், வை, அ, கள் என்னும் பன்மை விகுதிகளையாயினும் பெறாது வரும். அஃறிணைப் பெயர்களெல்லாம், அத்திணை ஒன்று பல என்னும் இருபாற்கும் பொதுப்பெயர்களாம். இவை பால்பகாஃறிணைப் பெயர் எனவும், அஃறிணையியற் பெயர் எனவுங் கூறப்படும்.
உதாரணம்.
யானை வந்தது யானை வந்தன
மரம் வளர்ந்தது மரம் வளர்ந்தன
கண் சிவந்தது கண் சிவந்தன
-
தேர்வு வினாக்கள்
203. அஃறிணை ஒன்றன் பால் பலவின் பால் என்னும் இரண்டற்கும் பொதுப்பெயர்கள் எவை? இவை எப்படிப் பெயர் பெறும்ஃ
ஆகுபெயர்
204. ஒரு பெருளின் இயற் பெயர், அப்பொருளோடு சம்பந்தமுடைய பிறிதொரு பொருளுக்குத் தொன்று தொட்டு வழங்கி வரின், அது ஆகு பெயரெனப்படும்.
205. அவ்வாகு பெயர், பதினா வகைப்படும். அவையாவன:- பொருளாகு பெயர்,
இடவாகு பெயர், காலவாகு பெயர், சினையாகு பெயர், குணவாகு பெயர், தொழிலாகு பெயர், எண்ணலளவையாகு பெயர், எடுத்தளவையாகு பெயர், முகத்தளவையாகு பெயர், நீட்டலளவையாகு பெயர், சொல்லாகு பெயர், தனியாகு பெயர், கருவியாகு பெயர், காரியவாகு பெயர், கருத்தாவாகு பெயர், உவமையாகு பெயர் என்பனவாம்.
உதாரணம்.
(1). தாமரை போலுமுகம்: இங்கே தாமரையென்னு முதற்பொருளின் பெயர் அதன் சினையாகிய மலருக்காதலாற் பொருளாகு பெயர்.
(2). ஊரடங்கிற்று: இங்கே ஊரென்னுபமிடப்பெயர் அங்கிருக்கிற மனிதருக்காதலால் இடவாகு பெயர்.
(3). காரறுத்தது: இங்கே காரென்னும் மழைக்காலப் பெயர் அக்காலத்தில் விளையும் பயிருக்காதலாற் காலவாகு பெயர்
(4). வெற்றிலை நட்டான்: இங்கே வெற்றிலை யென்னும்ஞ் சினைப்பெயர் அதன் மதலாகிய கொடிக்கதலாற் சினையாகு பெயர்.
(5). நீலஞ் சூடினான்: இங்கே நீலமென்னும் நிறக்குணப் பெயர் அதனையுடைய குவளை மலருக்காதலாற் குணவாகு பெயர்.
(6). வற்றலோடுண்டான்: இங்கே வற்றலென்னுந் தொழிற்பெயர் அதனைப் பொருந்திய உணவிற்காதலாற் றொழிலாகு பெயர்.
(7). காலாலே நடந்தான்: இங்கே காலென்னும் எண்ணளவைப் பெயர் அவ்வளவைக் கொண்ட உறுப்பிற்காதலால் எண்ணலவையாகுபெயர்.
(8). இரண்டுவீசை தந்தான்: இங்கே வீசை யென்னும் எடுத்த லளவைப்பெயர் அவ்வளவைக் கொண்ட உறிப்பிற்காதலால் எண்ணலவையாகு பெயர்.
(9). நாழியுடைந்தது: இங்கே நாழியென்னும் முகத்தளவைப் பெயர் அவ்வளவைக் பருவிக்காதலால் முகத்தளவையாகு பெயர்.
(10). கீழைத்தடி விளைந்தது: இங்கே தடி யென்னும், நீட்டளவைப்பெயர் அதனால் அளக்கப்பட்ட விளைநிலத்திற் காதலால் நீட்டலளவையாகு பெயர்.
(11). இற்நூற்குரை செய்தான்: இங்கே உரையென்னுஞ் சொல்லின் பெயர் அதன் பொருளுக்காதலாற் சொலாகு பெயர்.
(12). விளக்கு முறிந்தது: இங்கே விளக்கென்னுந் தானியின் பெயர் அதற்கு தானமாகிய தண்டிற்காதலாற் நானியாகு பெயர்.
(13). திருவாசகமோதினான்: இங்கே வாசகமென்னுங் கருவிப் பெயர் அதன் காரியமாகிய ஒரு நூலிற்காதலாற் கருவியாகு பெயர்.
(14). அலங்காரங்கற்றான்: இங்கே அலங்காரமென்னுங் காரியத்தின் பெயர் அதனையுணர்த்துதற்குக் கருவியாகிய நூலிற்காதலாற் காரியவாகு பெயர்.
(15). திருவள்ளுவர் படித்தான்: இங்கே திருவள்ளுவர் என்னுங் கருத்தாவின் பெயர் அவராற் செய்யப்பட்ட நூலிற்காதலாற் கருத்தாவாகு பெயர்.
(16). பாவை வந்தாள்: இங்கே பாவை என்னும் உவமையின் பெயர் அதனை யுவமையாகக் கொண்ட பெண்ணுக்காதலால் உவமையாகு பெயர்.
கார் என்னும் கரு நிறத்தின் பெயர், அதனுடைய மேகத்தை யுணர்த்தும் போது ஆகு பெயர்: அம் மேகம் பெய்யும் பருவத்தை உணர்த்தும் போது இரு மடியாகு பெயர்: அப்பருவத்தில் விளையும் நெற்பயிரை உணர்த்தும் போது மும்மடியாகு பெயர்.
வெற்றிலை நட்டான், திருவாசகமோதினான், என்பவற்றுள், இலையென்பது வெறுமையென்னும் அடையினையும், வாசகமென்பது திருவென்னும் அடையினையும் அடுத்து, ஆகு பெயராய் வருவதால் அடையடுத்தவாகு பெயர்
-
தேர்வு வினாக்கள்
204. ஆகு பெயரென்பது யாது? 205. அவ்வாகு பெயர் எத்தனை வகைப்படும்? அவை எவை?
-----
வேற்றுமை
206. பெயர்களனைத்தும், முதல் வேற்றுமை, இரண்டாம் வேற்றுமை, மூன்றாம் வேற்றுமை, நான்காம் வேற்றுமை, ஐந்தாம் வேற்றுமை, ஆறாம் வேற்றுமை, ஏழாம் வேற்றுமை, எட்டாம் வேற்றுமை, என எட்டு வேற்றுமைகளை யேற்கும்.
இவற்றுள் முதல் வேற்றுமை எழுவாய் எனவும், பெயர்வேற்றுமை விளியெனவும் பெயர் பெறும்.
207. முதல் வேற்றுமையினது உருபாவது திரிபில்லாத பெயரேயாம்.
இது வினையையும், பெயரையும், வினாவையுங் கொள்ளும்.
உதாரணம்.
சாத்தான் வந்தான், சாத்தனிவன், சாத்தன் யார்
வேற்றுமையுருபினாலே கொள்ளப்படுஞ் சொல், முடிக்குஞ் சொல் எனவும், பயனிலை எனவும், பெயர் பெறும்.
இத்திரிபில்லாத பெயர், தானே தன் பொருளை வினைமுதற் பொருளாக வேறுபடுத்தும். அப்படி வேறுபட்ட வினைமுதற் பொருளே இதன் பொருளாம்.
வினைமுதல், கருத்தா, செய்பவன் என்பன ஒரு பொருட் சொற்கள்.
இவ் வெழுவாய்க்கு வேறுருபு இல்லையாயினும், ஆனவன், ஆகின்றவன், ஆவான், என்பவன், முதலிய ஐம்பாற் சொற்களுஞ் சிறுபான்மை சொல்லுருபாக வரும்.
உதாரணம்.
சாத்தனானவன் வந்தான்
சாத்தியானவன் வந்தான்
சாத்தரானவர் வந்தார்
மரமானது வளர்ந்தது
மற்றவைகளும் இப்படியே.
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 18 | 19 | 20 | 21 | 22 | ... | 45 | 46 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இலக்கணச் சுருக்கம், Ilakkana Surukkam, Grammar's, இலக்கணங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள்

