கறிவேப்பிலை உருளை கறி
தேவையானவை: சிறிய உருளைக்கிழங்கு - அரை கிலோ (அல்லது) பெரியஉருளைக்கிழங்கு - அரை கிலோ, உப்பு - தேவைக்கு, எண்ணெய் - 4-5டேபிள்ஸ்பூன், எலுமிச்சம்பழச் சாறு - 2 டேபிள்ஸ்பூன். அரைக்க: தேங்காய்துருவல் - 2 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை இலைகள் - அரை கப், இஞ்சி - 1துண்டு, பச்சை மிளகாய் - 4, பூண்டு - 5 பல்.
செய்முறை: சிறிய உருளைக்கிழங்கு என்றால் வேகவைத்து தோலுரித்துக்கொள்ளுங்கள். பெரிய உருளைக்கிழங்கு எனில் தோல் சீவி நறுக்கிக்கொள்ளுங்கள். அரைத்து வைத்துள்ள மசாலா, உப்பு, எலுமிச்சம்பழச் சாறு சேர்த்துஉருளைக்கிழங்கில் பிசறி 1 மணி நேரம் ஊற விடுங்கள். எண்ணெயைக்காயவைத்து இதனையும் சேர்த்து நடுத்தர தீயில் நன்கு கிளறுங்கள்.உருளைக்கிழங்கு வெந்து சுருளும் வரை கிளறி இறக்குங்கள். சாதத்துக்குபிரமாதமான சைட் டிஷ்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 7 | 8 | 9 | 10 | 11 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கறிவேப்பிலை உருளை கறி, 30 வகையான பக்க உணவுகள், 30 Type Side Dishes, உருளைக்கிழங்கு, Recipies, சமையல் செய்முறை