டபுள் லேயர் பனீர்
தேவையானவை: பனீர் - 200 கிராம், பச்சை சட்னி (சற்று காரமாக) - 3டேபிள்ஸ்பூன், பெரிய வெங்காயம் - 2, தக்காளி - 4, பூண்டு - 5 பல்,மிளகாய்தூள் - 2 டீஸ்பூன், கரம்மசாலா - அரை டீஸ்பூன், சீரகத்தூள் - அரைடீஸ்பூன், உப்பு - தேவைக்கு, வெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன். பொரிக்க:கார்ன்ஃப்ளார் - சிறிது, எண்ணெய் - தேவைக்கு.
செய்முறை: பனீரை அரை இன்ச் கனத்திற்கு அகல மாகவும், நீளமாகவும்வெட்டுங்கள். பச்சை சட்னியை அதன் மேல் நன்கு தடவி மற்றொரு துண்டால்மூடுங்கள். எண்ணெயைக் காயவைத்து கொள்ளுங்கள். கார்ன்ஃப்ளாரை நீர்க்கக்கரையுங்கள். பனீர் துண்டு களை (நடுவில் சட்னியோடு) கார்ன்ஃப்ளார் கரைச லில்நனைத்து எடுத்து, காயும் எண்ணெயில் பொரித் தெடுங்கள். வெங்காயம், பூண்டைதோலுரித்து பொடி யாக நறுக்குங்கள். தக்காளியை மிக்ஸியில் அடித்து, சாறுஎடுங்கள். 3 டேபிள்ஸ்பூன் வெண்ணெயைக் காய வைத்து, நறுக்கிய பூண்டு சேர்த்துவதங்கியதும் வெங்காயம் சேருங்கள். வெங்காயம் நன்கு வதங்கிய தும் எடுத்துவைத்திருக்கும் தக்காளிச் சாறை வடிகட்டி சேருங்கள். அத்துடன் மிளகாய்தூள்,உப்பு சேர்த்து சிறு தீயில் பச்சை வாசனை போக கொதிக்கவிடுங்கள். கடைசியில்சீரகத்தூள், கரம்மசாலா சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடுங்கள். ஒரு ட்ரேயில்பனீரை வைத்து அதன்மேல் குழம்பை ஊற்றி பரிமாறுங்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
டபுள் லேயர் பனீர், 30 வகையான பக்க உணவுகள், 30 Type Side Dishes, வெங்காயம், பச்சை, Recipies, சமையல் செய்முறை