கசகசா குருமா

தேவையானவை: காய்கறி கலவை - 2 கப் (பொடியாக நறுக்கியது), பெரியவெங்காயம் - 1, தயிர் (சற்று புளிப்புள்ளது) - அரை கப், உப்பு - தேவைக்கு.அரைக்க: இஞ்சி - 1 துண்டு, பூண்டு - 5 பல், பச்சை மிளகாய் - 5, முந்திரி - 6,கசகசா - 2 டேபிள்ஸ்பூன், தேங்காய் துருவல் - கால் கப். தாளிக்க: பட்டை - 1துண்டு, லவங்கம் - 1, ஏலக்காய் - 2, எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: நறுக்கிய காய்கறிகளை சிறிது உப்பு, தண்ணீர் சேர்த்து ஒரு குக்கரில்போட்டு மூடி அடுப்பில் வைத்து ஒரு விசில் வந்ததும் இறக்குங்கள். ஒரு நிமிடம்கழித்து திறந்தால் நிறம் மாறாமல் காய் வெந்திருக்கும். அரைக்க கொடுத்துள்ளபொருட்களை ஒன்றாக நன்கு அரைத்தெடுங்கள். வெங்காயத்தை பொடியாகநறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து பட்டை, லவங்கம், ஏலக்காய் தாளித்துவெங்காயத்தை சேருங்கள்.வெங்காயம் வதங்கியதும் அரைத்த மசாலாவை சேர்த்து சிறு தீயில் வைத்துவாசனை போக வதக்கி காய்கறிகளையும், உப்பையும் சேர்த்து 5 நிமிடம்கொதிக்கவிடுங்கள். தயிரைக் கடைந்து சேர்த்து கிளறி இறக்குங்கள்.இதுவரை சுவைத்திராத சுவையில் மணக்கும் இந்த சைட் டிஷ்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 9 | 10 | 11 | 12 | 13 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கசகசா குருமா, 30 வகையான பக்க உணவுகள், 30 Type Side Dishes, சேர்த்து, Recipies, சமையல் செய்முறை