தக்காளி சம்பல்
தேவையானவை: பெரிய வெங்காயம் - 4, தக்காளி - 6, பூண்டு - 10 பல்,கறிவேப்பிலை - சிறிது, உப்பு - தேவைக்கு, எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்.அரைக்க: மிளகாய்தூள் - 2 டீஸ்பூன், பூண்டு - 6 பல் (பெரியதாக).
செய்முறை: வெங்காயம், தக்காளியை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்குங்கள்.பூண்டையும் தோலுரித்து நீளவாக்கில் நறுக்குங்கள். பூண்டு, மிளகாய்தூள்ஆகியவற்றை ஒன்றாக நைஸாக அரையுங்கள். எண்ணெயைக் காயவைத்து அரைத்தவிழுதை முதலில் சேருங்கள். பச்சை வாசனை போகக் கிளறிய பின், பூண்டு,வெங்காயம் சேர்த்து, அத்துடன் சிட்டிகை உப்பையும் போட்டு வதக்குங்கள்.வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளி, தேவையான உப்பு சேர்த்து சுருளகிளறுங்கள். கறிவேப்பிலை சேர்த்து இறக்குங்கள்.இட்லி, தோசைக்கு இணக்கமான சைட் டிஷ்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தக்காளி சம்பல், 30 வகையான பக்க உணவுகள், 30 Type Side Dishes, வெங்காயம், பூண்டு, சேர்த்து, Recipies, சமையல் செய்முறை