உருளை சுக்கா
தேவையானவை: உருளைக்கிழங்கு - அரை கிலோ, பூண்டு - 10 பல், தேங்காய்பால் - அரை கப், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், மிளகாய்தூள் - 1 டீஸ்பூன், உப்பு- தேவைக்கு. தாளிக்க: சோம்பு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன்,காய்ந்த மிளகாய் - 4, எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: பூண்டை தோலுரியுங்கள். கிழங்கை தோல் சீவி சிறு துண்டுகளாகநறுக்குங்கள். எண்ணெயைக் காய வைத்து, சோம்பு, உளுத்தம்பருப்பு, இரண்டாககிள்ளிய மிளகாய் தாளித்து பூண்டைச் சேருங்கள். 5 நிமிடம் வதக்குங்கள். பின்னர்உருளைக்கிழங்கு, மஞ்சள்தூள், மிளகாய்தூள், உப்பு, சேர்த்து 5 நிமிடம்வதக்குங்கள். தேங்காய் பால் சேர்த்து சிறு தீயில் நன்கு வேக விட்டு, சுருளக் கிளறிஇறக்குங்கள்.சும்மாவே சாப்பிடலாம் இந்த சூப்பர் சுக்காவை.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உருளை சுக்கா, 30 வகையான பக்க உணவுகள், 30 Type Side Dishes, டீஸ்பூன், Recipies, சமையல் செய்முறை