உளுந்து தக்காளி மசாலா
![உளுந்து தக்காளி மசாலா](images/side_dishes_8.jpg)
தேவையானவை: முழு உளுந்து - அரை கப், தக்காளி - 2, பச்சை மிளகாய் - 3,மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், எலுமிச்சம்பழச் சாறு - 1 டேபிள்ஸ்பூன், உப்பு -தேவைக்கு, கறிவேப்பிலை, மல்லித்தழை - சிறிது. தாளிக்க: கடுகு - கால் டீஸ்பூன்,சீரகம் - கால் டீஸ்பூன், நெய் - அரை டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: உளுந்தை மஞ்சள்தூள் சேர்த்து 3 கப் தண்ணீர் சேர்த்து நன்குவேகவையுங்கள். குக்கர் என்றால் 2 விசில் போதும். குழைந்துவிடக்கூடாது.தக்காளி, பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். நெய்,எண்ணெயை ஒன்றாகக் காயவைத்து கடுகு, சீரகம் தாளித்து, பச்சை மிளகாய்சேருங்கள். பின்னர் தக்காளி சேர்த்து, 5 நிமிடம் வதக்கி, வெந்த உளுந்து, உப்பு,கறிவேப்பிலை, மல்லித்தழை சேர்த்து 10 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கி,எலுமிச்சம்பழச் சாறு சேருங்கள்.நாவைக் கட்டிப் போடச்செய்யும் அசத்தலான சைட் டிஷ் இது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 6 | 7 | 8 | 9 | 10 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உளுந்து தக்காளி மசாலா, 30 வகையான பக்க உணவுகள், 30 Type Side Dishes, சேர்த்து, டேபிள்ஸ்பூன், டீஸ்பூன், கால், பச்சை, தக்காளி, Recipies, சமையல் செய்முறை