சீஸ் பிரெட் கோஃப்தா-பாலக் கறி
தேவையானவை: பிரெட் ஸ்லைஸ் - 3, சீஸ் துருவியது - 1 கப், மைதா - 2டேபிள்ஸ்பூன், மல்லித்தழை (பொடியாக நறுக்கியது) - 2 டேபிள்ஸ்பூன், உப்பு -தேவைக்கு, எண்ணெய் - தேவைக்கு. கறிக்கு: பசலை கீரை - 1 கட்டு, பூண்டு - 2பல், பச்சை மிளகாய் - 2. தாளிக்க: பட்டை - 1 துண்டு, பெரிய வெங்காயம் - 1,பச்சை மிளகாய் - 2.
செய்முறை: பிரெட் ஸ்லைஸின் ஓரங்களை வெட்டிவிட்டு, உதிர்த்து கொள்ளுங்கள்.அதனுடன் எண்ணெய் நீங்கலாக மற்ற பொருட்களை சேர்த்து பிசைந்து சிறுஉருண்டைகளாக்கி, எண்ணெயில் பொறித்தெடுங்கள். கீரையை சுத்தம் செய்து,உரித்த பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வேக வைத்து மசித்துக்கொள்ளுங்கள்.வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி மசித்த கீரையில் சேருங்கள்.நன்கு கலந்துவிடுங்கள். பரிமாறும்போது கோஃப்தாக்களை சேர்த்து பரிமாறுங்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சீஸ் பிரெட் கோஃப்தா-பாலக் கறி, 30 வகையான பக்க உணவுகள், 30 Type Side Dishes, பச்சை, சேர்த்து, மிளகாய், வெங்காயம், Recipies, சமையல் செய்முறை