பனீர் டிலைட்

தேவையானவை: பனீர் - 200 கிராம், மிளகாய்தூள் - 2 டீஸ்பூன், தனியாதூள் - 1டீஸ்பூன், சீரகத்தூள் - ஒன்றரை டீஸ்பூன், புளிக்காத தயிர் - 1 கப், மஞ்சள்தூள் -கால் டீஸ்பூன், உப்பு - தேவைக்கு, வினிகர் - 2 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: பனீரை விரல் நீளத் துண்டுகளாக சற்று அகலமாக நறுக்குங்கள்.அத்துடன் மிளகாய்தூளில் பாதி, தனியாதூள், சீரகத்தூள், வினிகர், உப்பு சேர்த்துபிசறி 1 மணி நேரம் ஊற வையுங்கள். தயிரை ஒரு துணியில் வடிகட்டுங்கள்.பின்னர் அதில் மீதமுள்ள மிளகாய்தூளை சேர்த்து நன்கு கலக்குங்கள். அத்துடன்பனீர் துண்டுகளை சேர்த்து பிசறி கலந்து பறிமாறுங்கள்.சப்பாத்தி, பரோட்டவுக்கு இது நன்றாக இருக்கும். விரைவாகவும் செய்யலாம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 22 | 23 | 24 | 25 | 26 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பனீர் டிலைட், 30 வகையான பக்க உணவுகள், 30 Type Side Dishes, டீஸ்பூன், Recipies, சமையல் செய்முறை