அடை மசாலா
தேவையானவை: (அடைக்கு) துவரம்பருப்பு - கால் கப், கடலைப்பருப்பு - கால்கப், பாசிப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன், உளுத்தம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன், பச்சரிசி- 1 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, சோம்பு - அரை டேபிள்ஸ்பூன்,தேங்காய்ப்பூ - 2 டேபிள்ஸ்பூன், மல்லித்தழை (பொடியாக நறுக்கியது) - 2டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கு, எண்ணெய் - தேவைக்கு. மசாலாவுக்கு: பெரியவெங்காயம் - 2, தக்காளி - 4, மல்லித்தழை - சிறிது, உப்பு - தேவைக்கு,எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன். அரைக்க: இஞ்சி - 1 துண்டு, பூண்டு - 6 பல்,தேங்காய்ப்பூ - 1 டேபிள்ஸ்பூன், சோம்பு - அரை டீஸ்பூன், மிளகாய்தூள் -இரண்டரை டீஸ்பூன், தனியாதூள் - 1 டீஸ்பூன், பட்டை - 1 துண்டு, லவங்கம் -1, ஏலக்காய் - 1.
செய்முறை: அடைக்கு கொடுத்துள்ள பருப்புகளையும் அரிசியையும் ஒன்றாக 2மணி நேரம் ஊற வைத்து மிளகாய், சோம்பு, சேர்த்து கரகரப்பாக அரைத்து,தேங்காய், மல்லித்தழை, உப்பு சேர்த்து கலந்துகொள்ளுங்கள். தோசைக்கல்லை காயவைத்து, சிறு அடைகளாக ஊற்றியெடுங்கள்.வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள். அரைக்கக் கொடுத்துள்ளபொருட்களை நன்கு அரைத்தெடுங்கள். எண்ணெயைக் காய வைத்து வெங்காயம்சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் வதங்கியதும், தக்காளியையும் அரைத்தவிழுதையும் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி தேவையான தண்ணீர்சேருங்கள். நன்கு கொதிக்கவிட்டு இறக்குங்கள். பறிமாறும்போது அடைகளை,மசாலாவுடன் சேர்த்து பறிமாறுங்கள்.குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பும் சைட் டிஷ் இது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 20 | 21 | 22 | 23 | 24 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அடை மசாலா, 30 வகையான பக்க உணவுகள், 30 Type Side Dishes, டேபிள்ஸ்பூன், சேர்த்து, தேவைக்கு, டீஸ்பூன், உப்பு, சோம்பு, மல்லித்தழை, Recipies, சமையல் செய்முறை