சேனை மசாலா
தேவையானவை: சேனைக் கிழங்கு - அரை கிலோ, பெரிய வெங்காயம் - 2,பூண்டு - 8 பல், இஞ்சி - 1 துண்டு, மிளகாய்தூள் - 2 டீஸ்பூன், தக்காளி சாஸ் -3 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கு, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், புளி - 1துண்டு, எண்ணெய் - தேவைக்கு.
செய்முறை: சேனைக் கிழங்கை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கி, உப்பு,மஞ்சள்தூள், புளி சேர்த்து வேகவிட்டு தண்ணீரை வடித்துக்கொள்ளுங்கள்.வெங்காயம், இஞ்சி, பூண்டு பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைக் காய வைத்துசேனைக்கிழங்கை (வெந்ததை) பொரித்தெடுங்கள்.மீண்டும் சிறிது எண்ணெயைக் காய வைத்து சீரகம் தாளித்து, வெங்காயம், இஞ்சி,பூண்டு சேர்த்து, வதங்கியதும் மிளகாய்தூள், சாஸ், சேனை, உப்பு சேர்த்து, பச்சைவாசனை போக நன்கு கிளறி இறக்குங்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 24 | 25 | 26 | 27 | 28 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சேனை மசாலா, 30 வகையான பக்க உணவுகள், 30 Type Side Dishes, சேர்த்து, உப்பு, இஞ்சி, பூண்டு, வெங்காயம், Recipies, சமையல் செய்முறை