வாழைக்காய் மசாலா
தேவையானவை: வாழைக்காய் - 2, பெரிய வெங்காயம் - 2, தக்காளி - 3,இஞ்சி-பூண்டு விழுது - 2 டீஸ்பூன், மிளகாய்தூள் - 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் -கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, மல்லித்தழை - சிறிது, உப்பு - தேவைக்கு.தாளிக்க: கடுகு - 1 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன், கடலைப்பருப்பு - 2டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, சோம்பு - அரை டீஸ்பூன், பட்டை - 1,எண்ணெய் - 3-4 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: வாழைக்காயை நன்கு கழுவி தோல் நீக்காமல் சிறுதுண்டுகளாகநறுக்குங்கள். உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து, அரை வேக்காடு வேக வைத்து இறக்கிவடிகட்டுங்கள். வெங்காயம், தக்காளியை மிகவும் பொடியாக நறுக்குங்கள்.எண்ணெயைக் காய வைத்து தாளிக்கும் பொருட்களை சேர்த்து பொன்னிறமாகப்பொரிந்ததும் வெங்காயத்தைச் சேருங்கள். அத்துடன் மஞ்சள்தூள், சிறிது உப்புசேர்த்து வதக்குங்கள். பின்னர் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சைவாசனைபோகக் கிளறுங்கள். அதில் தக்காளி, மிளகாய்தூள், வாழைக்காய், தேவையானஉப்பு சேர்த்து, நன்கு வேகும் வரை வதக்கி, மல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்துஇறக்குங்கள்.குழம்பு சாதம், தயிர் சாதம் போன்றவற்றுக்கு அருமையான சைட் டிஷ்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 19 | 20 | 21 | 22 | 23 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வாழைக்காய் மசாலா, 30 வகையான பக்க உணவுகள், 30 Type Side Dishes, டீஸ்பூன், சேர்த்து, மஞ்சள்தூள், சிறிது, Recipies, சமையல் செய்முறை