மஷ்ரூம் மஞ்சூரியன்
தேவையானவை: காளான் - 1 பாக்கெட், கார்ன்ஃப்ளார் - அரை கப், மைதா -அரை கப், சோயா சாஸ் - 2 டீஸ்பூன், ஆரஞ்சு ரெட் கலர் - அரை டீஸ்பூன்,உப்பு - தேவைக்கு, எண்ணெய் - தேவைக்கு.தாளிக்க: பெரிய வெங்காயம் - 1,பூண்டு - 8 பல், இஞ்சி - 1 துண்டு, பச்சை மிளகாய் - 5, கார்ன்ஃப்ளார் - 1டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், மல்லித்தழை - சிறிது, சோயா சாஸ்- 2 டீஸ்பூன்.
செய்முறை: காளானை இரண்டாக நறுக்குங்கள். கார்ன்ஃப்ளார், மைதா, சோயாசாஸ், ஆரஞ்சு கலர், உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து, கெட்டியாககரைத்துவைத்துக்கொள்ளுங்கள். எண்ணெயைக் காய வைத்து, கரைத்துவைத்திருக்கும் மாவில் காளானை நனைத்தெடுத்து எண்ணையில் போட்டுபொரித்தெடுங்கள்.வெங்காயம், பூண்டு, மிளகாயைப் பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து வெங்காயம், பூண்டு, மிளகாய் சேர்த்து நன்கு வதக்குங்கள். பின்னர்பொரித்த காளான், சோயா சாஸ், பொடியாக நறுக்கிய மல்லித்தழைஆகியவற்றையும் சேருங்கள். கார்ன்ஃப்ளாரை அரை கப் தண்ணீரில் கரைத்துதெளித்து, தெளித்து நன்கு கிளறி இறக்குங்கள்.சுடச்சுட சாப்பிட, கொத்துமல்லி மணத்தோடு கமகமக்கும் இந்த மஞ்சூரியன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 17 | 18 | 19 | 20 | 21 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மஷ்ரூம் மஞ்சூரியன், 30 வகையான பக்க உணவுகள், 30 Type Side Dishes, வெங்காயம், பூண்டு, டீஸ்பூன், சாஸ், சோயா, கார்ன்ஃப்ளார், Recipies, சமையல் செய்முறை