பட்டர் வெஜ் மசாலா
தேவையானவை: உருளைக்கிழங்கு - 2, கேரட் - 1, குடமிளகாய் - 1, பீன்ஸ் - 8,காலிஃப்ளவர் சிறியதாக - 1, பட்டாணி - அரை கப், பெரிய வெங்காயம் - 2,தக்காளி - 2, பச்சை மிளகாய் - 4, மிளகாய்தூள் - 1 டீஸ்பூன், சீரகத்தூள் - 1டீஸ்பூன், கரம்மசாலா - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், மல்லித்தழை- சிறிது, எலுமிச்சம்பழச் சாறு - 1 டேபிள் ஸ்பூன், உப்பு - தேவைக்கு. தாளிக்க:வெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன், பட்டை - 2 துண்டு, இஞ்சி, பூண்டு விழுது - 2டீஸ்பூன்.
செய்முறை: காய்கறிகளை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்குங்கள். வெங்காயம்,தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள். நறுக்கிய காய்கறிகளை குடமிளகாய்நீங்கலாக, சிறிது உப்பு சேர்த்து நன்கு வேகவையுங்கள். வெண்ணெயை உருக்கிபட்டை, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து சிறிது வதக்கி வெங்காயம் சேர்த்துவதக்குங்கள். அத்துடன் குடமிளகாய், சிறிய பச்சை மிளகாய் சேர்த்து தக்காளிகரையும் வரை வதக்குங்கள். பிறகு மிளகாய்தூள், சீரகத்தூள் சேர்த்து வதக்கிகாய்கறிகளையும் சேருங்கள். நன்கு கொதிக்கவிட்டு, எலுமிச்சம்பழச்சாறு,கரம்மசாலா, உப்பு, மல்லித்தழை சேர்த்து இறக்குங்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 15 | 16 | 17 | 18 | 19 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பட்டர் வெஜ் மசாலா, 30 வகையான பக்க உணவுகள், 30 Type Side Dishes, சேர்த்து, உப்பு, சிறிது, டீஸ்பூன், வெங்காயம், Recipies, சமையல் செய்முறை