மல்லி மசாலா
தேவையானவை: மல்லித்தழை - 2 கட்டு, பெரிய வெங்காயம் - 2, பூண்டு - 6பல், புளி - சிறு உருண்டை, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பெருங்காயம் - கால்டீஸ்பூன், உப்பு - தேவைக்கு. பொடிக்க: காய்ந்த மிளகாய் - 6, தனியா - 2டீஸ்பூன், கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன். தாளிக்க: கடுகு -அரை டீஸ்பூன், நல்லெண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: மல்லித் தழையை சுத்தம் செய்து மிகவும் பொடியாக நறுக்குங்கள்.வெங்காயம், பூண்டை தோலுரித்து பொடியாக நறுக்குங்கள். பொடிக்க கொடுத்துள்ளபொருட்களை வெறும் கடாயில் சிவக்க வறுத்து பொடியுங்கள்.எண்ணெயைக் காய வைத்து, கடுகு தாளித்து வெங்காயம், பூண்டு, சிறிது உப்பு,மஞ்சள்தூள் சேர்த்து சற்று நிறம் மாறும் வரை வதக்கி, மல்லித்தழையைச்சேருங்கள். மல்லித்தழை நன்கு வதங்கியதும் புளியைக் கெட்டியாக கரைத்து ஊற்றி,பெருங்காயம், பொடித்த பொடி சேர்த்து நன்கு கிளறி இறக்குங்கள்.இட்லி, தோசை, சப்பாத்தி முதல் கலந்த சாத வகைகள் வரை அனைத்துக்கும்ஈடுகொடுக்கும் இந்த மல்லி மசாலா.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 16 | 17 | 18 | 19 | 20 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மல்லி மசாலா, 30 வகையான பக்க உணவுகள், 30 Type Side Dishes, டீஸ்பூன், வெங்காயம், Recipies, சமையல் செய்முறை