கிரீன் சில்லி மசாலா
தேவையானவை: கெட்டியான பச்சை மிளகாய் - 50 கிராம், எலுமிச்சம்பழச் சாறு -அரை கப், மிளகாய்தூள் - 2 டீஸ்பூன், தனியாதூள் - 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் -கால் டீஸ்பூன், சீரகத்தூள் - 1 டீஸ்பூன், புளி - சிறிய உருண்டை, உப்பு -தேவைக்கு. தாளிக்க: எண்ணெய் - கால் கப், கடுகு - 1 டீஸ்பூன், வெந்தயம் -அரை டீஸ்பூன்.
செய்முறை: மிளகாயை கழுவி துடைத்து இரண்டாக நறுக்கி உப்பு, மஞ்சள்தூள்,எலுமிச்சம்பழச் சாறு சேர்த்து இரண்டு நாள் ஊறவிடுங்கள். எண்ணெயைக்காயவைத்து கடுகு, வெந்தயம் தாளித்து புளியை கெட்டியாக கரைத்து சேருங்கள்.அதில் மிளகாய்தூள், தனியாதூள், சீரகத்தூள், பெருங்காயம் சேர்த்து பச்சைவாசனை போக கொதிக்கவிட்டு மிளகாயை சேருங்கள். நன்கு கிளறி இறக்குங்கள்.சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள காரசாரமான சைட் டிஷ்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 13 | 14 | 15 | 16 | 17 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கிரீன் சில்லி மசாலா, 30 வகையான பக்க உணவுகள், 30 Type Side Dishes, டீஸ்பூன், Recipies, சமையல் செய்முறை