பீஸ் மசாலா
தேவையானவை: பட்டாணி - 2 கப், பெரிய வெங்காயம் - 2, தக்காளி - 5,இஞ்சி - பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன், மிளகாய்தூள் - 2 டீஸ்பூன், தனியாதூள் - 1 டீஸ்பூன், தக்காளி சாஸ் - 3 டேபிள்ஸ்பூன், மல்லித்தழை - சிறிதளவு.தாளிக்க: வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: பட்டாணியை உப்பு சேர்த்து வேகவையுங்கள். வெங்காயத்தைபொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். தக்காளியை மிக்ஸியில் அடித்து, சாறாக்குங்கள்.வெண்ணெயை உருக்கி, இஞ்சி பூண்டு விழுதை சேருங்கள். அந்த விழுது பச்சைவாசனை போக வதங்கியதும், வெங்காயம் சேருங்கள். வெங்காயம் நன்குவதங்கியதும் தக்காளி சாறு, தக்காளி சாஸ், மிளகாய் தூள், தனியா தூள், உப்புசேர்த்து பச்சை வாசனை போக நன்கு கொதிக்க விடுங்கள். கடைசியில் பட்டாணிசேர்த்து, நன்கு கிளறி, 5 நிமிடம் கொதிக்கவிட்டு, மல்லித்தழை சேர்த்துஇறக்குங்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 14 | 15 | 16 | 17 | 18 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பீஸ் மசாலா, 30 வகையான பக்க உணவுகள், 30 Type Side Dishes, தக்காளி, டேபிள்ஸ்பூன், வெங்காயம், Recipies, சமையல் செய்முறை