ரைஸ் மஞ்சூரியன் க்ரேவி

தேவையானவை: சாதம் - 1 கப், கேரட் - 1, பீன்ஸ் - 6, சோயா சாஸ் - 2டீஸ்பூன், கார்ன்ஃப்ளார் - 3 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கு, மல்லித்தழை -சிறிது, எண்ணெய் - தேவைக்கு.க்ரேவி: வெங்காயம் - 2, சோயா சாஸ் - 2 டீஸ்பூன், கார்ன்ஃப்ளார் - 2டேபிள்ஸ்பூன், ஆரஞ்சு கலர் - சிறிது, எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன், உப்பு -தேவைக்கு, மல்லித்தழை - தேவைக்கு.நசுக்க: இஞ்சி - 1 துண்டு, பூண்டு - 6 பல், பச்சை மிளகாய் - 6.
செய்முறை: சாதத்தை நன்கு குழைவாக பிசைந்துகொள்ளுங்கள். காய்கறிகளைமிகவும் பொடியாக நறுக்குங்கள். நசுக்கக் கொடுத்துள்ள பொருட்களை நன்குநசுக்குங்கள். சாதத்துடன் காய்கறி, மல்லித்தழை, சோயாசாஸ், உப்பு, நசுக்கியவிழுதில் சிறிது, கார்ன்ஃப்ளார் சேர்த்து நன்கு பிசைந்துகொள்ளுங்கள். இக்கலவையை சிறு உருண்டைகளாக உருட்டி, எண்ணெயில் பொரித்தெடுங்கள்.பிறகு வெங்காயத்தைப் பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்துநசுக்கிய விழுது, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி சோயாசாஸ், உப்பு சேர்க்கவும்.2 கப் தண்ணீரில் கார்ன்ஃப்ளாரையும் ஆரஞ்சு கலரையும் கரைத்து வெங்காயக்கலவையில் ஊற்றி 5 நிமிடம் நன்கு கொதிக்கவிட்டு இறக்குங்கள். பரிமாறும் போதுஉருண்டைகளை சேர்த்து பரிமாறுங்கள்.நூடுல்ஸுக்கும் ஃப்ரைட் ரைஸுக்கும் இந்த கிரேவி பிரமாதமான ஜோடி.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 12 | 13 | 14 | 15 | 16 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ரைஸ் மஞ்சூரியன் க்ரேவி, 30 வகையான பக்க உணவுகள், 30 Type Side Dishes, தேவைக்கு, உப்பு, நன்கு, சேர்த்து, மல்லித்தழை, கார்ன்ஃப்ளார், சிறிது, Recipies, சமையல் செய்முறை