பனீர் காய்கறி கோஃப்தா

தேவையானவை: (கோஃப்தாவுக்கு) பனீர் - 200 கிராம், உருளைக்கிழங்கு - 2,கேரட் - 1, பீன்ஸ் - 6, வெங்காயம் - 1, பச்சை மிளகாய் - 3, இஞ்சி - 1துண்டு, மல்லித்தழை - சிறிது, கார்ன்ஃப்ளா ர் - 2 டேபிள்ஸ்பூன், மைதா - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கு, எண்ணெய் - தேவைக்கு. அரைக்க: சின்னவெங்காயம் - 8, இஞ்சி - 1 துண்டு, பூண்டு - 6 பல், தக்காளி - 6 (தனியாகஅரைக்க வேண்டும்). தாளிக்க: பட்டை - 1 துண்டு, எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,நெய் - 1 டேபிள்ஸ்பூன். மசாலாவுக்கு: மிளகாய்தூள் - 2 டீஸ்பூன், தனியாதூள் -1 டீஸ்பூன், கரம் மசாலா - அரை டீஸ்பூன், மல்லித்தழை - சிறிது, உப்பு -தேவைக்கு.
செய்முறை: உருளைக்கிழங்கையும், கேரட்டையும் தோல் சீவிபீன்ஸுடன் சிறு துண்டுகளாக நறுக்கி உப்பு சேர்த்து வேகவையுங்கள். நன்குமசித்துவிடுங்கள். இஞ்சி, மிளகாய், மல்லித்தழையை அரைத்து சேருங்கள்.பனீரையும் துருவிச் சேருங்கள். அத்துடன் மைதா, கார்ன்ஃப்ளார், உப்பு சேர்த்துநன்கு பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டுங்கள். எண்ணையைக் காயவைத்து,உருண்டைகளைப் பொரித்து எடுத்து தனியே வையுங்கள். அரைக்க கொடுத்துள்ளபொருட்களை தனியே அரைத்தெடுங்கள். நெய், எண்ணையை காயவைத்து பட்டைதாளித்து வெங்காயம், இஞ்சி-பூண்டு விழுதைச் சேருங்கள். பச்சை வாசனை போகவதக்குங்கள். பின்னர் மிளகாய்தூள், தனியாதூள் சேர்த்து மேலும் சிறிதுவதக்குங்கள். கடைசியில் உப்பு, தக்காளி சாறு சேர்த்து தேவையான தண்ணீர்சேர்த்து பச்சை வாசனை போக சிறு தீயில் கொதிக்கவிடுங்கள். பரிமாறும்போதுகோஃப்தாக்களை போட்டு மல்லித்தழை தூவி பரிமாறுங்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 11 | 12 | 13 | 14 | 15 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பனீர் காய்கறி கோஃப்தா, 30 வகையான பக்க உணவுகள், 30 Type Side Dishes, உப்பு, இஞ்சி, டேபிள்ஸ்பூன், சேருங்கள், சேர்த்து, சிறு, தேவைக்கு, மல்லித்தழை, பச்சை, டீஸ்பூன், Recipies, சமையல் செய்முறை