ஸ்டஃப்டு புடலை தால்
தேவையானவை: பாசிப்பருப்பு - 1 கப், சற்று மெல்லிய, சிறிய புடலை - 1,தேங்காய் பால் - 1 கப், மிளகு, சீரகம் - தலா 1 டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால்டீஸ்பூன், உப்பு - தேவைக்கு, எலுமிச்சம்பழச் சாறு - 1 டேபிள்ஸ்பூன்(விருப்பப்பட்டால்). ஸ்டஃப்பிங் செய்ய: உருளைக்கிழங்கு - 2, கேரட் - 1, பீன்ஸ்- 5, பச்சை மிளகாய் - 2, இஞ்சி - 1 துண்டு, எலுமிச்சம்பழச் சாறு - 2 டீஸ்பூன்,மல்லித்தழை - சிறிது, உப்பு - தேவைக்கு, எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன். தாளிக்க:பெரிய வெங்காயம் - 1, காய்ந்த மிளகாய் - 2, கறிவேப்பிலை - சிறிது, நெய் - 1டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன், உப்பு - 1 சிட்டிகை.
செய்முறை: பாசிப்பருப்பை வெறும் கடாயில் வாசனை வரும்வரை வறுத்தெடுங்கள்.பின்பு மஞ்சள்தூள் சேர்த்து நன்கு வேகவைத்து கொள்ளுங்கள். மிளகு, சீரகத்தைநன்கு அரைத்து அதில் சேருங்கள். அதோடு உப்பையும் சேர்த்து பச்சை வாசனைபோகக் கொதித்தபின் இறக்கி, தேங்காய் பாலை ஊற்றுங்கள். வெங்காயத்தைபொடியாக நறுக்கி, மிளகாயை இரண்டாக கிள்ளுங்கள். நெய், எண்ணெயைக்காயவைத்து, மிளகாய் சேர்த்து வறுத்து, வெங்காயம், கறிவேப்பிலை, உப்பு சேர்த்துநன்கு வதக்கி பருப்பில் சேருங்கள். இதுதான் தால்.புடலையை 2 அங்குல நீளத்துக்கு முழுதாக வெட்டிக்கொள்ளுங்கள்.அதனுள்ளிருக்கும் விதையை நீக்கிவிடுங்கள். உப்பு கலந்த நீரில்வேகவைத்தெடுங்கள். (உடையாதபடி கவனமாக கையாள வேண்டும்). உருளை,கேரட்டை, தோல் சீவி, பீன்ஸுடன் சற்று பெரிய துண்டுகளாக நறுக்குங்கள். உப்புசேர்த்து நன்கு வேகவைத்து எடுத்து கையால் மசித்துவிடுங்கள். பச்சை மிளகாய்,இஞ்சியை கரகரப்பாக அரைத்து எண்ணெயில் தாளித்து, காய்கறியில் சேருங்கள்.அத்துடன் பொடியாக நறுக்கிய மல்லித்தழை, எலுமிச்சம்பழச் சாறு, உப்பு சேர்த்துபிசைந்து புடலையினுள் அடைத்துவிடுங்கள். பரிமாறும் பாத்திரத்தில் இதனைஅடுக்கி அதன்மேல் தாலை ஊற்றி, மல்லித்தழை தூவிப் பரிமாறுங்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 10 | 11 | 12 | 13 | 14 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஸ்டஃப்டு புடலை தால், 30 வகையான பக்க உணவுகள், 30 Type Side Dishes, உப்பு, மிளகாய், மல்லித்தழை, சேர்த்து, சேருங்கள், பச்சை, எலுமிச்சம்பழச், சாறு, டேபிள்ஸ்பூன், Recipies, சமையல் செய்முறை