சௌசௌ-வேர்க்கடலை கூட்டு
தேவையானவை: பொடியாக நறுக்கிய சௌசௌ - ஒரு கப்,துவரம்பருப்பு - கால் கப், சாம்பார்பொடி - 2 டீஸ்பூன்,வேர்க்கடலை - கால் கப், புளி - எலுமிச்சை அளவு,மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால்டீஸ்பூன். தாளிக்க: எண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு - கால்டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்துமல்லி - தலா சிறிதளவு.
செய்முறை: துவரம்பருப்பையும் வேர்க்கடலையையும் குக்கரில்வேகவைத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் புளியைக் கரைத்துஊற்றி, அதில் சௌசௌ துண்டுகளைப் போட்டு, உப்பு,மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடவும். வெந்ததும்சாம்பார்பொடியைப் போட்டு, அது கொதித்ததும் அதில் வேகவைத்த வேர்க்கடலை, துவரம்பருப்புஇரண்டையும் சேர்த்து, நன்றாகக் கொதிவரும்பொழுது, இறக்கிவிடவும். பிறகு, எண்ணெயில் கடுகு,கறிவேப்பிலை, கொத்துமல்லி தாளித்து கூட்டில் சேர்த்துப் பரிமாறவும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 5 | 6 | 7 | 8 | 9 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சௌசௌ-வேர்க்கடலை கூட்டு, 30 வகையான கூட்டு, 30 Type Koottu Poriyal, டீஸ்பூன், கால், Recipies, சமையல் செய்முறை