முருங்கைக்காய் கூட்டு
தேவையானவை: சிறிது நீளமாக நறுக்கிய முருங்கைக்காய் - 2 கப்,கடலைப்பருப்பு - கால் கப், பாசிப்பருப்பு - கால் கப், தேங்காய்துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 2, காய்ந்த மிளகாய்- 2, சீரகம் - கால் டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன். தாளிக்க:எண்ணெய் - ஒரு டீஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன், உளுத்தம் பருப்பு- கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: குக்கரில் பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு இரண்டையும்வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். முருங்கைக்காயை உப்பு,மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடவும். பிறகு, தேங்காய்துருவல், பச்சைமிளகாய், காய்ந்த மிளகாய், சீரகம் சேர்த்து அரைத்து அதில் சேர்க்கவும். கடைசியாக வெந்தபருப்புகளை அதில் கொட்டி, தாளித்து இறக்கவும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 7 | 8 | 9 | 10 | 11 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
முருங்கைக்காய் கூட்டு, 30 வகையான கூட்டு, 30 Type Koottu Poriyal, கால், டீஸ்பூன், மிளகாய், Recipies, சமையல் செய்முறை