பரங்கிக்காய் பால் கூட்டு
தேவையானவை: பரங்கிக்காய் (நறுக்கியது) - ஒரு கப்,உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2,தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகு - ஒருடீஸ்பூன், காய்ச்சிய பால் - ஒரு கப், வெல்லம் - ஒருடேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு. தாளிக்க: கடுகு -கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு.
செய்முறை: பரங்கிக்காயை ஒரு கப் தண்ணீரில்வேகவைக்கவும். உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், மிளகுஇவற்றை சிறிது எண்ணெய் விட்டு வறுத்து, தேங்காய் சேர்த்துஅரைக்கவும். காய் வெந்தவுடன், அரைத்த விழுதையும்உப்பையும் சேர்த்து, நன்றாகக் கொதிக்கவிடவும். வெல்லத்தில் ஒரு டேபிள்ஸ்பூன் நீர் விட்டுக்கரைத்து, அந்தத் தண்ணீரையும் கூட்டில் சேர்க்கவும். கொதித்ததும் இறக்கி, பால் சேர்க்கவும்.இனிப்பான இந்தக் கூட்டு, சாப்பிட்ட அனைவரையும் கவர்ந்திழுக்கும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 6 | 7 | 8 | 9 | 10 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பரங்கிக்காய் பால் கூட்டு, 30 வகையான கூட்டு, 30 Type Koottu Poriyal, , Recipies, சமையல் செய்முறை