புஷ் பீன்ஸ் மிளகு கூட்டு
தேவையானவை: பொடியாக நறுக்கிய புஷ் பீன்ஸ் (சிறிதுகுண்டாக இருக்கும் பீன்ஸ். ‘முருங்கை பீன்ஸ்’ என்றும்சொல்வார்கள்) - ஒரு கப், பாசிப்பருப்பு - கால் கப்,மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால்டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, துவரம்பருப்பு - ஒருடீஸ்பூன், தனியா - 2 டீஸ்பூன், சீரகம் - கால் டீஸ்பூன், மிளகு- 10, காய்ந்த மிளகாய் - 3. தாளிக்க: எண்ணெய் - ஒருடீஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - கால்டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு.
செய்முறை: முதலில் பாசிப்பருப்பை வேகவைக்கவும். முக்கால்பதம் வெந்ததும் அத்துடன்பீன்ஸையும் சேர்த்து வேகவிடவும். துவரம்பருப்பு, தனியா, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய்சேர்த்து, தண்ணீர் விடாமல் உலர்பொடியாகப் பொடிசெய்துகொள்ளவும். வெந்துகொண்டிருக்கும்காயில் இந்தப் பொடியைப் போட்டு, கொதித்துக் கெட்டியானதும் எண்ணெயில் கடுகு,உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்துக் கூட்டில் கொட்டி இறக்கவும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புஷ் பீன்ஸ் மிளகு கூட்டு, 30 வகையான கூட்டு, 30 Type Koottu Poriyal, டீஸ்பூன், கால், Recipies, சமையல் செய்முறை