வெள்ளரி பழ குழம்பு
தேவையானவை: வெள்ளரிப் பழம் - 1, புளி - சிறிய நெல்லிக்காய் அளவு, உப்பு - தேவைக்கு.அரைக்க: தேங்காய் துருவல் - அரை கப், காய்ந்த மிளகாய் - 6.தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், பெரிய வெங்காயம் - 1, எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: வெள்ளரிப் பழத்தை தோல், விதை நீக்கி சற்று பெரிய துண்டுகளாக நறுக்குங்கள். புளியை அரைகப் தண்ணீரில் கெட்டியாக கரையுங்கள். தேங்காயையும் மிளகாயையும் ஒன்றாக அரையுங்கள். 2 கப்தண்ணீரை கொதிக்க விட்டு அதில் வெள்ளரி பழ துண்டுகள், உப்பு சேர்த்து வேக விடுங்கள்.பின்னர் புளி தண்ணீர், அரைத்து விழுது சேர்த்து பச்சை வாசனை போக கொதிக்க விடுங்கள். வெங்காயத்தைமிகவும் பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். எண்ணெயைக் காய வைத்து, கடுகு தாளித்து, வெங்காயம்சேருங்கள். சிட்டிகை உப்பு சேர்த்து, நிறம் மாறும் வரை வதக்கி குழம்பில் சேருங்கள். ஒரு கொதிகொதிக்கவிட்டு இறக்குங்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 22 | 23 | 24 | 25 | 26 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வெள்ளரி பழ குழம்பு, 30 வகையான பழ உணவுகள், 30 Type Fruit Dishes, சேர்த்து, உப்பு, Recipies, சமையல் செய்முறை