மாதுளை-முந்திரி தயிர்பச்சடி
தேவையானவை: புளிக்காத தயிர் - 1 கப், மாதுளை முத்துக்கள் - 1 கப், பட்டாணி - ஒரு கைப்பிடி,வாழைத்தண்டு - 1 சிறிய துண்டு, உப்பு - தேவைக்கு, தாளித்த கடுகு - அரை கப், அரைத்த தேங்காய்துருவல் - கால் கப், பச்சை மிளகாய் - 2, முந்திரிப்பருப்பு - 6.
செய்முறை: பட்டாணியை வேக வையுங்கள். வாழைத்தண்டை மிகவும் பொடியாக நறுக்கி, ஆவியில் வேகவைத்து எடுத்து ஆறவிடுங்கள். தேங்காய், பச்சை மிளகாய், முந்திரியை ஒன்றாக அரைத்து தயிரில்கலக்குங்கள். அத்துடன், உப்பு, வாழைத்தண்டு, பட்டாணி, மாதுளை முத்துக்கள், அரைத்த விழுது சேர்த்து,கடுகு, தாளித்து கலந்து பரிமாறுங்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 23 | 24 | 25 | 26 | 27 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மாதுளை-முந்திரி தயிர்பச்சடி, 30 வகையான பழ உணவுகள், 30 Type Fruit Dishes, , Recipies, சமையல் செய்முறை