மாம்பழ சாம்பார்

தேவையானவை: துவரம்பருப்பு - அரை கப், நல்ல இனிப்புள்ள மாம்பழம் - 2, பெரிய வெங்காயம் - 2,தக்காளி - 3, புளி - சிறிய எலுமிச்சம்பழ அளவு, மிளகாய்தூள் - இரண்டரை டீஸ்பூன், தனியா தூள் -ஒன்றரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவைக்கு.தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன், பெருங்காயம் - கால் டீஸ்பூன்,எண்ணெய் - 3 டீஸ்பூன்.
செய்முறை: பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து குழைய வேகவையுங்கள். மாம்பழத்தை தோல், விதை நீக்கி பெரியதுண்டுகளாக நறுக்குங்கள். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்குங்கள். பருப்பில் வெங்காயம், தக்காளி,மிளகாய்தூள், தனியா தூள், சிறிது தண்ணீர் சேர்த்து வேகவிடுங்கள். வெங்காயம் முக்கால்பதம் வெந்தபின்புளியை அரை கப் தண்ணீர் சேர்த்து கரைத்து வடிகட்டி பருப்பில் ஊற்றுங்கள். இது பச்சை வாசனை போககொதித்ததும் மாம்பழத்தை கையால் லேசாக பிசைந்து சேருங்கள்.ஒரு கொதி வந்ததும் இறக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் தாளித்து சேருங்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 21 | 22 | 23 | 24 | 25 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மாம்பழ சாம்பார், 30 வகையான பழ உணவுகள், 30 Type Fruit Dishes, டீஸ்பூன், வெங்காயம், சேர்த்து, Recipies, சமையல் செய்முறை